சோக்லம்சர்

ஆள்கூறுகள்: 34°07′07″N 77°35′20″E / 34.1185°N 77.5889°E / 34.1185; 77.5889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோக்லம்சர்
சிற்றூர்
சோக்லம்சர் தூபிகள்
சோக்லம்சர் தூபிகள்
சோக்லம்சர் is located in லடாக்
சோக்லம்சர்
சோக்லம்சர்
இந்தியாவின் லடாக்கில் சோக்லம்சர் நகரத்தின் அமைவிடம்
சோக்லம்சர் is located in இந்தியா
சோக்லம்சர்
சோக்லம்சர்
சோக்லம்சர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 34°07′07″N 77°35′20″E / 34.1185°N 77.5889°E / 34.1185; 77.5889
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிலடாக்
மாவட்டம்லே மாவட்டம்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்10,754
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்194101
வாகனப் பதிவுLA-

சோக்லம்சர் (Choglamsar) இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில் அமைந்த லே மாவட்டத்தில் பாயும் சிந்து ஆற்றின் கரையில் அமைந்த சிற்றூர் ஆகும்.[1] [2]சோக்லம்சர் ஊரில் ஆண்டுதோறும் சூன் மாத குரு பூர்ணிமாவை ஒட்டி 3 நாட்கள் சிந்து தர்சன விழா கொண்டாடப்படுகிறது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சோக்லம்சர் ஊரின் மொத்த மக்கள் தொகை 10,754 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 648 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.01% ஆக உள்ளது. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 881 ஆக உள்ளனர். மக்கள் தொகையில் பௌத்தர்கள் 68.67%, இந்துக்கள் 26.41%, இசுலாமியர்கள் 3.68% மற்றும் மற்றவர்கள் 1.24% ஆக உள்ளனர்.[3]

உள்கட்டமைப்புகள்[தொகு]

2010 பெருவெள்ளத்தின் போது நிவாரணப் பணிகளை பார்வையிடும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்

இவ்வூரில் இந்திய அரசு மற்றும் திபெத்தியர்களின் மைய நிர்வாகம் இணைந்து திபெத்திய அகதிகள் முகாம் நடத்துகிறது.[2][4]

2010-ஆம் ஆண்டில் இப்பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் இவ்வூர் மிகவும் பாதிக்கப்பட்டது.[5]

இவ்வூரில் 3 நடுநிலைப் பள்ளிகள், 3 உயர்நிலைப் பள்ளிகள், 1 மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்திய அரசு 2016-இல் இவ்வூரில் பௌத்த படிப்புகளுக்கான மைய நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகத் தகுதியுடன் துவக்கப்பட்டது. [6]

இவ்வூரில் பாயும் சிந்து ஆற்றின் கரைகளை இணைக்க நீளமான மைத்திரி தொங்கு பாலம் 2019-ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தினரால் கட்டப்பட்டது.[7]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Village directory: Jammu & Kashmir" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2020-02-07.
  2. 2.0 2.1 India - The North. Footprint. 2013. பக். 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-907263-74-3. https://books.google.com/books?id=y-pUBAAAQBAJ&pg=PA175. 
  3. Chuglamsar Population Census 2011
  4. Punohit, Kunal (24 September 2020). "Tibetan SFF soldier killed on India-China border told family: 'we are finally fighting our enemy'". South China Morning Post. https://scmp.com/week-asia/politics/article/3102744/tibetan-sff-soldier-killed-india-china-border-told-family-we-are. பார்த்த நாள்: 24 September 2020. "Choglamsar, one of more than 45 “settlements” – special colonies for Tibetan refugees – constructed by the Central Tibetan Authority (CTA), the Tibetan government-in-exile and Indian authorities." 
  5. Radek Kucharski (2015). Trekking in Ladakh. Cicerone Press. பக். 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-78362-262-7. https://books.google.com/books?id=RzzbCgAAQBAJ&pg=PT110. 
  6. "Central Institute of Buddhist Studies (CIBS) shall be a deemed-to-be-university, provisionally for a period of five years, under the de novo category". Press Information Bureau. 27 January 2016. https://pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=135856. 
  7. "Longest suspension bridge over Indus river opens to public". Business Today. 3 April 2019. https://www.businesstoday.in/current/economy-politics/longest-suspension-bridge-over-indus-river-opens-to-public-heres-all-you-need-to-know/story/333520.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோக்லம்சர்&oldid=3281183" இலிருந்து மீள்விக்கப்பட்டது