திபெத்தியர்களின் மைய நிர்வாகம்
திபெத்தியர்களின் மைய நிர்வாகம் བོད་མིའི་སྒྲིག་འཛུགས་ Bod mi'i sgrig 'dzugs / Bömi Drikdzuk | |
---|---|
நாட்டுப்பண்: கியால்லு | |
நிலை | நாடு கடந்த அரசாங்கம் |
தலைமையிடம் | 176215, தரம்சாலா, காங்ரா மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
அலுவல் மொழி | திபெத்திய மொழி |
சமயம் | திபெத்திய பௌத்தம் |
வகை | நாடு கடந்த அரசாங்கம் |
அரசாங்கம் | |
• சிகியோங | லோப்சாங சாஙகே |
• அவைத் தலைவர் | பேமா ஜுஙக்னே |
சட்டமன்றம் | திபெத்தியர்களின் மைய நிர்வாகத்தின் நாடாளுமன்றம் |
உருவாக்கம் | 28 ஏப்ரல் 1959 |
நாணயம் | இந்திய ரூபாய் (நடைமுறையில்) (INR) |
திபெத்தியர்களின் மைய நிர்வாகம் அல்லது நாடு கடந்த திபெத்திய அரசு (Central Tibetan Administration) (Tibetan: བོད་མིའི་སྒྲིག་འཛུགས་, Wylie: bod mi'i sgrig 'dzugs, THL: Bömi Drikdzuk, வார்ப்புரு:IPA-bo, translated as Exile Tibetan People's Organisation)[1] 1959-இல் திபெத் நாட்டை சீனா ஆக்கிரமித்த காரணத்தினால், திபெத்திலிருந்து வெளியேறிய 14-வது தலாய் லாமா தலைமையிலான திபெத்திய மக்களின் நாடு கடந்த அரசு மற்றும் நாடாளுமன்றம் இந்தியாவில் உள்ள இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்த காங்ரா மாவட்டத்தின், தரம்சாலாவில் 28 ஏப்ரல் 1959-இல் நிறுவப்பட்டது.
1959-இல் அமைக்கப்பட்ட நாடு கடந்த திபெத்திய அரசை, இந்தியா ஆதரித்தாலும், சீனா இதுவரை அங்கீகரிக்கவில்லை.[2]
உலகாளாவிய திபெத்தியர்களும், இந்தியாவில் அகதிகளாக அடைக்கலம் அடைந்துள்ள திபெத்தியர்களும் இந்த மைய நிர்வாகத்தை ஆதரிக்கின்றனர். இந்தியாவில் அடைக்கலம் அடைந்த திபெத்தியர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு, வாக்கு செலுத்துவதன் மூலம் தங்களின் நாடு கடந்த திபெத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்கின்றனர்.[1] 11 பிப்ரவரி 1991 அன்று நாடு கடந்த திபெத்தி மைய நிர்வாக அரசு, 11 பிப்ரவரி 1991 அன்று நெதர்லாந்து நாட்டின் டென் ஹாக் நகரத்தில் செயல்படும் பிரதிநிதித்துவமற்ற நாடுகள் மற்றும் மக்கள் அமைப்பில் நிறுவன உறுப்பினரானது.[3][4]
14-வது தலாய் லாமா மைய நிர்வாகத்திற்கு ஆலோசனைகள் வழங்குவதுடன், திபெத்திய மக்களின் ஆன்மீகத் தலைவராக உள்ளார்.
திபெத் மீதான உரிமை
[தொகு]1951-ஆம் ஆண்டில் திபெத் நாட்டை சீனா ஆக்கிரமிப்பு செய்து தன் நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்தது. இதனால் திபெத்திய பௌத்த சமயத் தலைவரான தலாய் லாமாக்களின் கீழ் 700 ஆண்டுகள் தொடர்ச்சியாக இருந்த திபெத், சீனாவின் ஆக்கிரமிப்பில் சென்ற பிறகு, 1951-இல் தலாய்லாமா தனது சீடர்கள் மற்றும் பொதுமக்களுடன் இந்தியாவில் அடைக்கலம் அடைந்தார்.[5]
நிதியுதவிகள்
[தொகு]திபெத் விடுதலை நிதிக்கு உலகெங்கும் வாழும் திபெத்தியர்களிடமிருந்து நன்கொடைகள் மூலம் நிதியுதவி பெறுகிறது. மேலும் நாடு கடந்த திபெத்திய அரசு, தன் குடிமக்களுக்கு வழங்கும் பாஸ்போர்ட் எனும் பச்சை புத்தகத்திற்கு கட்டணம் வசூலிப்பதன் மூலம் நிதி பெறுகிறது.[6]சீனாவிடமிருந்து திபெத் விடுதலை பெறுவதற்கு, உலகெங்கும் உள்ள 18-வயது மேற்பட்ட திபெத்திய சமூகத்தினரிடம் நன்கொடையாக நிதி வசூலிக்கும் போது நீலப்புத்தகம் வழங்கப்படுகிறது.[6]
இந்தியா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியங்கள் மனிதாபிமான முறையில் திபெத்தியர்களின் மைய நிர்வாகத்திற்கு நிதியுதவி வழங்குகிறது.[7][8][9]
ஆண்டுதோறும் திபெத்தியர்களின் மைய நிர்வாகம் பெறும் நிதியில் 22 மில்லியன் டாலர்கள் ஆகும். அதில் 7 மில்லியன் டாலர்கள் அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக செலவிடப்படுகிறது.[10]
தலைமையிடம்
[தொகு]நாடு கடந்த திபெத்தியர்களின் மைய நிர்வாகம் மற்றும் நாடாளுமன்றம் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம், தரம்சாலா நகரத்திற்கு அருகே மெக்லியாட் கஞ்ச் எனும் பகுதியை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத், திபெத்தியர்களின் மைய நிர்வாகத்தின் ஆடசிப் பகுதியாகும்.[11]
திபெத்தியர்களின் மைய நிர்வாகத்தின் கீழ் இந்தியாவில் மட்டும் 1,00,000 மேற்பட்ட திபெத்திய அகதிகள் வாழ்கின்றனர். இந்த திபெத்திய மக்களின் கல்வி மற்றும் சுகாதாரம் பணிகளில் ஈடுபடுவதுடன், திபெத்திய பண்பாட்டு நடவடிக்க்கைகளை ஊக்குவிக்கிறது.[12][13]
உட்கட்டமைப்பு
[தொகு]திபெத்தியர்களின் மைய நிர்வாக அமைப்பு, 1991-இல் நாடு கடந்த திபெத்திய அரசின் அரசியல் அமைப்பை வகுத்தது.[14] இதன் தலைமை நிர்வாகியான லோப்சங் சங்கை நாடு கடந்த திபெத்திய அரசின் அதிபராக உள்ளார். அதிபருக்கு உதவியாக 7 பேர் கொண்ட அமைச்சரவை உள்ளது.
அமைச்சரவை
[தொகு]- லோப்சாங் சாங்கே – அதிபர் (நாடு கடந்த திபெத் அரசு)
- வென் கர்மா கெலெக் யுதோக் – சமயம் & பண்பாட்டு அமைச்சர்
- சோனம் டாப்கியால் கோர்லாசாங் – உள்துறை அமைச்சர்
- கர்மா யேசி – நிதி அமைச்சர்
- பேமா யாங்சென் – கல்வி அமைச்சர்
- பாக்பாங் செரி லாப்ராங் - பாதுகாப்பு அமைச்சர்
- லாப்சாங் சாங்கே – தகவல் & வெளியுறவுத்துறை அமைச்சர்
- சோக்கியாங் வாங்சூக் – சுகாதாரத் துறை அமைச்சர்
ஒப்பந்தங்கள்
[தொகு]2020-ஆம் ஆண்டு வரை, திபெத்திய அகதிகள் தொடர்பாக, திபெத்திய மைய நிர்வாக அமைப்பு, இந்திய அரசுடன் 45 ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளது.[15][16]:120, 127–131[16]:120
வெளிநாட்டு உறவுகள்
[தொகு]திபெத்திய மைய நிர்வாக அமைப்பு, இறையாண்மையற்ற நாட்டின் பிரதிநிதியாக இல்லாதபடியால், இந்த அமைப்பை உலக நாடுகள் அங்கீகாரம் பெறவில்லை எனினும், இந்தியா, ஐக்கிய அமெரிக்க நாடு, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளின் நிதியுதவிகள் பெறுகிறது.
1991-இல் ஐக்கிய அமெரிக்க நாட்டின் அதிபர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் திபெத்தை ஆக்கிரமிக்கப்பட்ட நாடு என்றும், தலாய்லாமா மற்றும் திபெத்திய மைய நிர்வாக அமைப்பை நாடு கடந்த திபெத்திய அரசின் உண்மையான பிரதிநிதி என கூறியுள்ளார்.[17].
1960-களில் ஐக்கிய அமெரிக்க நாட்டின் நடுவண் ஒற்று முகமை மூலம் 1.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியாகப் பெற்றுக் கொண்டதாக திபெத்திய மைய நிர்வாகம் 1998-இல் செய்தி வெளியிட்டது.[18] இந்நிதியைக் கொண்டு, சீனாவிற்கு எதிராக கொரில்லாப் போரை நடத்துவது ஆகும்.[19]
பராக் ஒபாமா ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக இருக்கும் போது திபெத்திய மைய நிர்வாகத்தின் கொள்கைகளை ஆதரித்துப் பேசினார்.[20][21][22]
பன்னாட்டு அமைப்புகளில்
[தொகு]நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் உள்ள அமைதி அரண்மனையில் செயல்படும் பிரதிநிதித்துவம் அற்ற நாடுகள் மற்றும் மக்களின் அமைப்பில் 11 பிப்ரவரி 1991 அன்று நாடு கடந்த திபெத்திய அரசு நிறுவன உறுப்பினரானது.
இதனையும் காண்க
[தொகு]- நாடு கடந்த அரசாங்கம்
- பிரதிநிதித்துவமற்ற நாடுகள் மற்றும் மக்கள் அமைப்பு
- நேபாள திபெத்தியப் போர் – (ஏப்ரல் 1855 - மார்ச் 1856)
- 14-வது தலாய் லாமா
- திபெத் (1912–1951)
- குயிங் ஆட்சியில் திபெத்
- லாசா உடன்படிக்கை
- திபெத் மீதான பிரித்தானியப் படையெடுப்பு, 1904
- திபெத் மீதான சீனாவின் படையெடுப்பு (1910)
- லாசா கலவரம்
- லாசா உடன்படிக்கை, 1904
- சிம்லா ஒப்பந்தம், 1914
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Central Tibetan Administration". [Central Tibetan Administration. Archived from the original on 3 August 2010. பார்க்கப்பட்ட நாள் 28 August 2010.
- ↑ "外交部:中方从来不承认所谓的西藏"流亡政府"" (in சீனம்). 中国西藏网. 18 March 2016. Archived from the original on 29 September 2017. பார்க்கப்பட்ட நாள் 1 March 2020.
- ↑ Ben Cahoon. "International Organizations N–W". Worldstatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 27 November 2011.
- ↑ "Members". UNPO. பார்க்கப்பட்ட நாள் 27 November 2011.
- ↑ "Tell you a true Tibet – Origins of so-called "Tibetan Independence"". National People's Congress of the People's Republic of China. 18 March 2009. Archived from the original on 18 செப்டம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 27 September 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 6.0 6.1 "China: The 'Green Book' issued to Tibetans; how it is obtained and maintained, and whether holders enjoy rights equivalent to Indian citizenship (April 2006)" (Responses to Information Requests (RIRs)). Immigration and Refugee Board of Canada. 28 April 2006. CHN101133.E. பார்க்கப்பட்ட நாள் 3 June 2019 – via Refworld.
- ↑ Fiona McConnell, Rehearsing the State: The Political Practices of the Tibetan Government-in-Exile, p. 138
- ↑ Namgyal, Tsewang (28 May 2013). "Central Tibetan Administration's Financial Viability". Phayul இம் மூலத்தில் இருந்து 27 செப்டம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170927113832/http://www.phayul.com/news/article.aspx?id=33499. பார்த்த நாள்: 27 September 2017.
- ↑ Central Tibetan Administration. "Department of Finance". Central Tibetan Administration. பார்க்கப்பட்ட நாள் 27 September 2017.
- ↑ Backman, Michael (23 March 2007). "Behind Dalai Lama's holy cloak". The Age. http://www.theage.com.au/news/business/behind-dalai-lamas-holy-cloak/2007/05/22/1179601410290.html.
- ↑ "Map of Tibet". Tibet.net. பார்க்கப்பட்ட நாள் 1 October 2017.
- ↑ "India: Information on Tibetan Refugees and Settlements". United States Bureau of Citizenship and Immigration Services. 30 May 2003. IND03002.ZNY. பார்க்கப்பட்ட நாள் 3 June 2019 – via Refworld.
- ↑ "Dangerous Crossing" (PDF). The International Campaign for Tibet. 2003. Archived from the original (PDF) on 13 June 2008.
- ↑ Staff. "Constitution: Charter of the Tibetans in Exile". Central Tibetan Administration. Archived from the original on 27 January 2010. பார்க்கப்பட்ட நாள் 3 February 2010.
- ↑ Punohit, Kunal (24 September 2020). "Tibetan SFF soldier killed on India-China border told family: 'we are finally fighting our enemy'". South China Morning Post. https://scmp.com/week-asia/politics/article/3102744/tibetan-sff-soldier-killed-india-china-border-told-family-we-are. பார்த்த நாள்: 24 September 2020. "Choglamsar, one of more than 45 “settlements” – special colonies for Tibetan refugees – constructed by the Central Tibetan Authority (CTA), the Tibetan government-in-exile and Indian authorities."
- ↑ 16.0 16.1 Pulman, Lynn (1983). "Tibetans in Karnataka". Kailash 10 (1–2): 119–171. http://himalaya.socanth.cam.ac.uk/collections/journals/kailash/pdf/kailash_10_0102_04.pdf.
- ↑ Goldstein, Melvyn C., The Snow Lion and the Dragon, University of California Press, 1997, p. 119
- ↑ "World News Briefs; Dalai Lama Group Says It Got Money From C.I.A.". The New York Times. 2 October 1998. http://select.nytimes.com/gst/abstract.html?res=F3061EF73E5C0C718CDDA90994D0494D81&n=Top%2fReference%2fTimes%20Topics%2fPeople%2fD%2fDalai%20Lama.
- ↑ Conboy, Kenneth; Morrison, James (2002). The CIA's Secret War in Tibet. Lawrence, Kansas: Univ. Press of Kansas. pp. 85, 106–116, 135–138, 153–154, 193–194. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7006-1159-1.
- ↑ His Holiness the Dalai Lama and Former US President Barack Obama Meet in Delhi, Call for Action for World Peace, (2017), https://tibet.net/his-holiness-the-dalai-lama-and-former-us-president-barack-obama-meet-in-delhi-call-for-action-for-world-peace/ பரணிடப்பட்டது 2020-11-03 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Tenzin Gaphel, His Holiness arrives in Washington for annual National Prayer Breakfast, (04 February 2015), https://tibetexpress.net/1051/his-holiness-arrives-in-washington-for-annual-national-prayer-breakfast/
- ↑ David Jackson, Obama praises Dalai Lama at prayer breakfast, USA TODAY, (05 February 2015), https://usatoday.com/story/news/politics/2015/02/05/obama-national-prayer-breakfast-dalai-lama/22914569/
ஆதாரம்
[தொகு]- Roemer, Stephanie (2008). The Tibetan Government-in-Exile. Routledge Advances in South Asian Studies. Abingdon, Oxon: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415586122.