சிந்து தர்சன விழா
சிந்து தர்சன விழா (Sindhu Darshan Festival) இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில் உள்ள லே நகரத்தில் பாயும் சிந்து ஆற்றின் கரையில் உள்ள சோக்லம்சர் என்ற சிற்றூரில் ஆண்டுதோறும் சூன் மாதத்தில் வரும் குரு பூர்ணிமாவை ஒட்டி 3 நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். சிந்து நதியைப் போற்றும் விதமாக கொண்டாடப்படும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. முதல் சிந்து தர்சனம் விழா அக்டோபர், 1997-ஆம் ஆண்டில் துவங்கியது.
வரலாறு[தொகு]
சனவரி, 1997-ஆம் ஆண்டில் இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த லால் கிருஷ்ண அத்வானி மற்றும் தருண் விஜய் ஆகியோர் லே நகரத்தில் பாயும் சிந்து ஆற்றை தர்சனம் செய்த போது, ஆண்டுதோறும் சிந்து நதி தர்சனம் என்ற பெயரில் விழா எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இந்து, இந்துஸ்தான், இந்தியா போன்ற சொற்களுக்கு மூல காரணமானது சிந்து ஆறு ஆகும். முதல் சிந்து தர்சனம் விழா அக்டோபர், 1997-ஆம் ஆண்டில் துவங்கியது.
7 சூன் 2000 அன்று முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் சிந்து தர்சன விழாவில் கலந்து கொண்டு, லே நகரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சே எனுமிடத்தில், லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழுவின் அலுவலக வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
ஆண்டு தோறும் சூன் மாதத்தில் வரும் குரு பூர்ணிமாவை ஒட்டி 3 நாட்கள் நடைபெறும் சிந்து தர்சன விழாவிற்கு, இந்தியாவின் அனைத்து பகுதி மக்களும் சிந்து ஆற்றில் குளித்து, சிந்து ஆற்றை வழிபடத் துவங்கினர்.[1][2][3][4] லே நகரத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோக்லம்சர் எனும் இடத்தில் பாயும் சிந்து ஆற்றின் கரையில் சிந்து தர்சனம் விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.[5]
அஞ்சல் தலை[தொகு]
இந்திய அஞ்சல் துறை, சிந்து தர்சனம் விழாவை சிறப்பிக்கும் வகையில் 28 சூலை 1999 அன்று அஞ்சல் தலையை வெளியிட்டது.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Archived copy". 11 திசம்பர் 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 ஜனவரி 2011 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-04-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2020-09-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-09-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ [1]
- ↑ [2] Development of Ladakh Himalaya: recent researches By Prem Singh Jina. Pages : 129 to 132.