தமிழா தமிழா
Appearance
தமிழா தமிழா | |
---|---|
வகை | பேச்சு நிகழ்ச்சி |
வழங்கல் | கரு பழனியப்பன் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | பாலமுருகன் கி |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ் நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | Sunday Productions |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 11 நவம்பர் 2018 ஒளிபரப்பில் | –
Chronology | |
தொடர்புடைய தொடர்கள் | நீயா நானா |
தமிழா தமிழா என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நவம்பர் 11, 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு விவாத பேச்சு நிகழ்ச்சி ஆகும். விவாதங்களை மட்டறுத்து நிகழ்ச்சியினை தொகுத்து வழக்குபவர் பிரபல இயக்குநர் கரு பழனியப்பன் ஆவார்.[1]
இந்த நிகழ்ச்சயில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பை எடுத்து இரு கருத்துணர்வுகளை கொண்ட மக்களை விவாதிக்க வழி வகுக்கிறது. அப்படி விவாதித்த பின் அவர்களுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான வழிகளைக் கூறுகிறது.
விவாதிக்கப்பட்ட தலைப்பு
[தொகு]- விரிவடையும் பெண் சுதந்திரம் மகிழ்ச்சியானதா இல்லை பதற்றமானதா?
- காதலை விட ஜாதியே முக்கியம் மற்றும் ஜாதியை விட காதலே முக்கியம்.
- அதிகரித்து கொண்டே இருக்கிறதா திருமண எதிர்பார்ப்புகள்? ஆண்கள் மாறும் பெண்கள்.
- கண்டிப்பான பெற்றோர்கள் எதிராக பிள்ளைகள்.
- மாமியார் மருமகள்.
- தனியார் துறையில் இட ஒதுக்கீடு அவசியம் மற்றும் அவசியமில்லை?
- சென்னை வந்து மிரட்சி அடைந்த வெளியூர் பெண்கள் மற்றும் சென்னை பெண்கள்
- ஆங்கில மருத்துவம் விஸ் நாட்டு மருத்துவம்.
- டிரண்டியாக மாற விரும்பும் தாத்தா பாட்டிகள்
- அனாவசிய செலவு செய்வது யார் கணவனா அல்லது மனைவியா
- நாட்டு தலைவனையே சூஸ் பண்றோம்… வீட்டு தலைவனை?[2]
- எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்! புள்ளிங்கோ மற்றும் அவர்களை விரும்பாத பெண்கள்.[3]
- தாடி வச்சிருக்கறவன் காப்பாத்துவானா?..[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tamizha Tamizha: A comfortably centrist talk show where the personal doesn't get political enough". www.firstpost.com.
- ↑ "நாட்டு தலைவனையே சூஸ் பண்றோம்… வீட்டு தலைவனை?". tamil.indianexpress.com.
- ↑ "ஐயையோ.. சுத்தமா பிரீலீங்க... இது என்ன பாஷை?". tamil.oneindia.com.
- ↑ "தாடி வச்சிருக்கறவன் காப்பாத்துவானா?.. என்னடா உலகமிது!". tamil.oneindia.com.