பிலிப் லர்கின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலிப் லர்கின்
பிறப்புபிலிப் லர்கின்
இங்கிலாந்து
தொழில்கவிஞர்
வகைகவிதை
குறிப்பிடத்தக்க படைப்புகள்

பிலிப் ஆர்தர் லர்கின் (Philip Arthur Larkin ) (ஆகஸ்டு 9, 1922 - டிசம்பர் 2 1985) என்பவர் ஆங்கிலக் கவிஞர், புதின எழுத்தாளர், நூலகர் ஆவார். இவருடைய ,முதல் கவிதைத் தொகுப்பான தெ நார்த் ஷிப் (வடக்குக் கப்பல்) 1945 ஆம் ஆண்டில் வெளியானது. அதனைத் தொடர்ந்து ஜில் (குளிர்) 1946 , எ கேர்ள் இன் விண்டர் (குளிர்காலத்தில் ஒரு பெண்) 1947 இல் வெளியானது. இவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான தெ லெஸ் டிசீவ்டு (குறைவாக வஞ்சிக்கப்படுதல்) வெளியான பிறகு பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து ஹை விண்டோஸ் 1974 இல் வெளியானது. கவிதைக்கான அரசியின் தங்கப்பதக்கம் உட்பட பல பெருமைகளைப் பெற்றுள்ளார்[1]. ஐக்கிய இராச்சிய அரசவைக் கவி பொறுப்பு 1984 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. ஆனால் சர் ஜான் பெட்ஜெமனின் மறைவினால் அந்தப் பொறுப்பை மறுத்தார்.

1943 ஆம் ஆண்டில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்றார். அதன் பின்பு நூலகராகப் பணிபுரிந்தார். இங்கிலாந்திலுள்ள பிரின்மோர் ஜோன்ஸ் நூலகத்தில் சுமார் முப்பது ஆண்டுகள் நூலகராகப் பணிபுரிந்தார்.

வாழ்க்கை[தொகு]

பிலிப் லர்கின் ஆகஸ்டு 9, 1922 இல் கவென்ட்ரி, இங்கிலாந்தில் பிறந்தார்.[2] இவரின் தந்தை சிட்னி லர்கின் (1884-1948),தாய் இவா எமிலி டே (1886-1977). இவர்களின் குடும்பம் லர்கினின் ஐந்து வயது வரை ரேட்ஃபோர்ட் மாவட்டத்தில் வசித்து வந்தனர்.[3] அதன் பிறகு மனோர் சாலை, கவென்ட்ரி இரயில் நிலையம் அருகே உள்ள நடுத்தரக் குடும்பம் வசிக்கும் அளவுள்ள ஒரு குடியிருப்பிற்கு குடும்பத்துடன் சென்றனர். இரண்டாம் உலகப்போரின் குண்டுவெடிப்பினால் பாதிப்படைந்த சாலையினை புதுப்பிக்கும் பணிக்காக இவர்களின் வீடு இடிக்கப்பட்டது.[4]

லர்கின் தனது சிறுவயதில் , மற்ற சிறுவர்களைப் போலன்றி சில பணிவன்புகளைக் கொண்டிருந்தார். எட்டு வயது வரை தனது வீட்டிலேயே தாயின் மூலமாக கல்வி கற்றார். அந்த சமயத்தில் அவர்களது உறவினர்களையோ அல்லது நண்பர்களையோ அவர் தனது வீட்டில் சந்தித்தது இல்லை. மேலும் அவர் திக்கிப் பேசும் பழக்கம் உடையவராக இருந்தார்.[5] ஆனால், எட்டாம் ஹென்றி அரசர் பள்ளியில் சேர்ந்த பிறகு ஜேம்ஸ் ஜிம் சுட்டன், காலின் கன்னர் மற்றும் நோயல் ஜோஷ் ஹியூக்ஸ் போன்றவர்களின் நட்பு கிடைத்தது. மேலும் இவரின் பெற்றோர்களிடத்திலும் மகிழ்ச்சியாகவே இருந்தார். இவரின் பெற்றோர்களும் இவருக்கு ஆதரவாகவே இருந்தனர். உதாரணமாக இவரின் ஆசையான ஜாஸ் இசைக்குத் தேவையான சாக்சபோன் மற்றும் நூதன முரசுபோன்ற கருவிகளை வாங்கிக் கொடுத்தனர். இளையோர் பள்ளிப்படிப்பை முடித்த உடன் எட்டாம் ஹென்றி அரசர் மூத்தோர் பள்ளிக்குச் சென்றார். இரண்டு வருடத்திற்குப் பின் தனிச் சிறப்புடன் ஆங்கிலம் மற்றும் வரலாற்றுப் பிரிவில் தேர்ச்சி பெற்றார்.[6]

இரண்டாம் உலகப்போர் கிளர்ச்சிக்கு அடுத்த ஆண்டான 1940 முதல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இவரின் கண்பார்வைக் குறைவினால் இரானுவ மருத்துவத் தேர்வில் தேர்ச்சி பெற இயலவில்லை. அதனால் மூன்றாண்டு கல்லூரிப் படிப்பில் சேர்ந்தார்.[7] அங்கு கிங்ஸ்லி எமிசைச் சந்த்தித்தார். எமிஸ், லர்கின் மற்றும் அவர்களது நண்பர்கள் சேர்ந்து தெ செவன் (ஏழு) எனும் ஒரு குழுவை உருவாக்கினார்கள். இந்தக் குழுவை ஒருவருக்கொருவர் தாங்கள் எழுதிய கவிதைகளைப் பற்றி விவாதிக்கவும், ஜாஸ் இசையைக் கேட்பதற்காக ஏற்படுத்தினர். 1943 ஆம் ஆண்டில் தனிச்சிறப்புடன் கூடிய பட்டம் பெற்றார்.[8]

கவிதைகள்[தொகு]

  • தெ நார்த் ஷிப் (வடக்குக் கப்பல்)
  • தெ லெஸ் டிசீவ்டு ( குறைவாக அவமானப்படுதல்)
  • சர்ச் கோயிங்
  • மெய்டன் நேம்

புதினம்[தொகு]

  • ஜில் (குளிர்
  • கேர்ள் இன் விண்டர் ( குளிர்காலத்தில் ஒரு பெண்)

சான்றுகள்[தொகு]

  1. Sleeve note, Letters to Monica, Faber 2010.
  2. "Philip Larkin © Orlando Project". Orlando.cambridge.org. 2 December 1985. Archived from the original on 13 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 17 April 2016.
  3. Motion 1993, pp. 8,10.
  4. Motion 1993, p. 10.
  5. Bradford 2005, pp. 28, 31.
  6. Bradford 2005, p. 38.
  7. Motion, p. 72
  8. Motion 1993, p. 104.

வெளியிணைப்புகள்[தொகு]

லர்கினின் உரை (ஆடியோ)[தொடர்பிழந்த இணைப்பு]

"பிலிப் லர்கினின் கவிதைகள்", தெ கார்டியன் 2016

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்_லர்கின்&oldid=3590199" இலிருந்து மீள்விக்கப்பட்டது