விளிம்பு (வெடிபொதி)
சுடுகலனின் வெடிபொதியின் அடியைச் சுற்றி பொறிவினைந்து, வார்த்து, அல்லது அழுத்தி ஏற்படுத்தப்படும், ஒரு வெளிப்புற துருத்தப்பட்டை தான் விளிம்பு ஆகும். ஆக, விளிம்புடைய வெடிபொதிகளை, சிலசமயம் "துருத்தப்பட்டை" வெடிபொதிகள் என்றும் சொல்வர். இந்த விளிம்பு உறையகற்றி செயல்படுவதற்கு, ஓரு ஒரு பிடிமான உதடாகவும், சிலநேரம் வெடிபொதிக்கு தலையிடமாகவும் செயலாற்றும்.
வகைகள்
[தொகு]நவீன போர்த்தளவாடங்களில், பலவகையான சுடுகலனின் விளிம்புகள் பயன்பாட்டில் உள்ளன. விளிம்பின் அளவை, வெடியுறையின் அடிப்பாகத்துடன் ஒப்பீட்டு தான்: விளிம்புடையது, விளிம்பற்றது, அரை-விளிம்புடையது, குறுகிய-விளிம்பு, மற்றும் வாரிடப்பட்டது (belted) என வகைப்படுத்தப் பட்டுள்ளன.
விளிம்புடையது
[தொகு]துருத்தப்பட்டை வெடிபொதிகள் என்றும் சிலநேரங்களில் அழைக்கப்படும், விளிம்புள்ள வெடிபொதிகள் தான் இவ்வகைபாட்டிலேயே மிகப்பழமையானது. இதில் விளிம்பின் விட்டம், வெடிபொதியின் அடி-விட்டத்தைவிட பெரிதாய் இருக்கும். இந்த விளிம்பைக் கொண்டு தான், சுடுகலனின் அறையில் (விளிம்புள்ள) வெடிபொதியை வைக்க முடியும். அறைக்குள் வெடிபொதியை சரியான ஆழத்தில் வைக்க, இந்த விளிம்பு உதவும்—இந்தச் செயலை தான், "தலையிடம் அளித்தல்" என்பர். விளிம்புள்ள வெடிபொதிகளில், அதன் விளிம்பைக் கொண்டு தலையிடம்-அளிப்பு இருப்பதால், (விளிம்பற்ற வெடிபொதிகளில் உள்ளதுபோல அல்லாமல்) உறையின் நீளமானது குறைவான முக்கியத்துவம் பெறுகிறது. சுழல்துப்பாக்கி, உடைவு-இயக்க சுடுகலன்கள் போன்ற சில குறிப்பிட்ட வகையிலான இயங்கு-நுட்பங்களுக்கு, விளிம்புள்ள வெடிபொதிகள் கச்சிதமாக பொருந்தும். பெட்டக சேமகத்தின் மூலமாக (வெடிபொதி) புகுத்தப்படும் சுடுகலன்களில், அவ்வளவாக விளிம்புள்ள வெடிபொதிகள் பொருந்துவதில்லை; ஏனெலில் ஒவ்வொரு வெடிபொதியின் விளிம்பும், அதன் அடியிலுள்ள வெடிபொதியின் விளிம்புக்கு சற்றே முன்னால் இருக்கும்படி, சேமகம் கவனமாக குண்டேற்றப்பட வேண்டும். அப்போதுதான், வெடிபொதியை சேமகத்தில் இருந்து ஆணி பிரித்து எடுக்கையில், அதன் விளிம்பு அதற்குக்கீழுள்ள வெடிபொதியின் விளிம்புடன் சிக்கிக்கொள்ளாமல் அறைக்குள் புகுத்தப்படும். அரை-தானியக்க கைத்துப்பாக்கிகளிலும் விளிம்புள்ள வெடிபொதியை தான் பிரயோகிக்கின்றன, உதாரணமாக எல்.ஏ.ஆர். கிரிசுலி மற்றும் டெசட் ஈகிள் கைத்துப்பாக்கிகள்.
விளிம்படிகள் போன்ற, சிலவகை விளிம்புள்ள வெடிபொதிகளின் விளிம்பு, பற்றவைக்கும் எரியூட்டியை வைக்கவும் பயன்படும். இதுவே நடுவடிகளில், எரியூட்டி விளிம்பில் இருப்பதற்கு பதிலாக, மையத்தில் இருந்தது.
விளிம்பற்றது
[தொகு]ஒரு "விளிம்பற்ற" உறையில், விளிம்பின் விட்டமும், உறையின் அடி-விட்டமும், சமமாக ஒரே அளவில் இருக்கும். விளிம்புக்கும், வெடிபொதியின் உடலுக்கும் இடையே ஒரு பள்ளம் இருக்கும்; சுட்டபிறகு அறையிலுள்ள காலி உறையை அகற்ற, உறையகற்றிக்கு இப்பள்ளம் ஒரு பிடிமான உதடாக விளங்குகிறது, இப்பள்ளத்தை உறையகற்றி காடி என்பர். இவ்வகை உறையில் துருத்திக்கொண்டு இருக்கும் விளிம்பு எதுவும் இல்லாததால், உறையின் வாய் (நேரான உறையில்), அல்லது உறையின் தோள் (புட்டிக்கழுத்து உறையில்) தான் வெடிபொதிக்கு தலையிடத்தை அளிக்கும்; அகற்றுதலை மட்டுமே உறையகற்றி செய்யும். துருத்திக்கொண்டு இருக்கும் விளிம்பு எதுவும் இல்லாததால், பெட்டக சேமகத்தின் மூலமாக (வெடிபொதி) புகுத்தப்படும் சுடுகலன்களுக்கு, விளிம்பற்ற உறைகள் எளிதாக பொருந்தும். சரம், தவில், குழாய்-புகட்டு ஆயுதங்களிலும், இவை சிறப்பாக வேலை செய்யும். விளிம்பற்ற உறைகள் சுழல்துப்பாக்கி, மற்றும் உடைவு இயக்கங்களுக்கு ஏற்றதல்ல. இருந்தாலும், சுருள்வில்- பூட்டிய உறையகற்றி, அல்லது (சுழல்துப்பாக்கிகளில்) வட்டப் பிடிப்பி போன்ற சிறப்பு மாற்றங்களுடன் பயன்படுத்தலாம்.
அரை-விளிம்புடையது
[தொகு]அரை-விளிம்புள்ள உறையில், விளிம்பானது உறையின் அடியைத் தாண்டி சற்றே துருத்தியவாறு இருக்கும், இருப்பினும் விளிம்புள்ள உறையின் துருத்தம் அளவுக்கு இருக்காது. அளவில் சிறிய விளிம்பு என்பதால், பெட்டக சேமகத்திலிருந்து புகுத்தும்போது, மிகக்குறைந்த இடையூறு தான் உண்டாகும், மேலும் அச்சிறிய விளிம்பு தலையிடம் அளிக்க போதுமானதாகவும் விளங்கும்..
குறுகிய-விளிம்பு
[தொகு]குறுகிய-விளிம்பு வெடிபொதிகளில், உறையின் அடி-விட்டத்தைவிட, விளிம்பின் விட்டம் (குறிப்பிடத்தக்க வகையில்) சிறியதாக இருக்கும். உறையை அகற்றுவதற்கு மட்டுமே இவ்வடிவம் வழிசெய்யும், இதில் விளிம்பைக் கொண்டு தலையிடம் அளிக்க இயலாது. செயல்பாட்டில் இது விளிம்பற்ற உறையை போலவே இருந்தாலும், சில கூடுதல் பலன்களை குறுகிய-விளிம்பு அளிக்கும்.
வாரிடப்பட்டது
[தொகு](வாரிடப்பட்ட மேக்னம் என்றும் சொல்லப்படும்) வாரிடப்பட்ட உறைகளில, "வார்" இருப்பதன் நோக்கமே, தலையிடம் அளிக்கத்தான்; விளிம்பற்ற உறையில் வெட்டப்பட்டிருப்பது போலவே, இந்த வாரின் மீதே உறையகற்றி காடி வெட்டப் பட்டிருக்கும். விளிம்பற்ற உறையில், இந்த வார் விளிம்பாக விளங்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- Ackley, P.O. (1927) [1962]. Handbook for Shooters & Reloaders. vol I (12th Printing ed.). Salt Lake City, Utah: Plaza Publishing. pp. 197–202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99929-4-881-1.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help)