உடைவு இயக்கம் (சுடுகலன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு வழக்கமான உடைவியக்க இரட்டைக்குழல் சிதறுதுமுக்கி இயக்கத்தின் திறந்தநிலை, மற்றும் உறையகற்றியை காட்டும் படம். திறக்கும் நெம்புகோல், மற்றும் பாதுகாப்புப் பிடியையும் தெளிவாகக் காணலாம்  

உடைவு இயக்கம் (ஆங்கிலம்: break action) என்பது, குழல் அல்லது குழல்கள் (கதவைப்போல) கீல்லிடப்பட்டு, அதன் ஊடச்சுக்கு செங்குத்தான போக்கில் சுற்றி, குழலாசனத்தை வெளிக்காட்டுவதன் மூலம், வெடிபொதியை ஏற்றவும், நீக்கவும் வழி செய்யும், ஒரு வகையான சுடுகலன் இயங்குநுட்பம் ஆகும். ஒரு புதிய பொதியை சுடுவதற்கு சுத்தியலை இழுக்க, இதில் வேறொரு தனி இயங்குநுட்பம் தேவைப்படலாம். பல வகையான உடைவு-இயக்க சுடுகலன்கள் உள்ளன; இரட்டைக்குழல் சிதறுதுமுக்கிகள், இரட்டைக்குழல் புரிதுமுக்கிகள் மற்றும் இணைந்த துமுக்கிகள், ஒரு-வெடி புரிதுமுக்கிகள், கைத்துப்பாக்கிகள், மற்றும் சிதறுதுமுக்கிகள்; மேலும் இதை சமிக்ஞை துமுக்கிகள், குண்டுவீச்சுத் துமுக்கிகள், வளி துமுக்கிகள், மற்றும் சில பழைய சுழல்-கைத்துப்பாக்கி வடிவங்களில் காணலாம். 

விரிவுரை [தொகு]

உடைவு இயக்கம் [தொகு]

ஒரு சுழல்-கைத்துப்பாக்கியின் உடைவு-இயக்கம்.

புரிதுமுக்கி அல்லது சிதறுதுமுக்கியின் இரண்டு பகுதிகளான:

சுடும் இயங்குநுட்பத்தை தாங்கியிருக்கும் தண்டு, மற்றும்

சுடப்பட வேண்டிய பொதியை கொண்டிருக்கும் முன்-தண்டு, குழல் 

ஆகியவற்றை ஒன்றாக இணைக்கிறது, ஓர் கீல்.  

ஆயுதத்தின் இரு பகுதிகளையும் அவிழ்த்து, குழலாசனத்தை வெளிக்காட்ட, ஒரு தாழ்ப்பாள் இருக்கும். குழலாசனத்தில் ஒரு பொதி (இரட்டைக்குழல் சிதறுதுமுக்கியில் இரண்டு, மற்றும் சுழல்-கைத்துப்பாக்கியில் ஆறிலிருந்து எட்டு வரை) செருகப்பட்டு, இரு பகுதிகளையும் மூடி, தாழ் இடப்படும். பிறகு சுத்தியல் பின்னிழுக்கப்பட்டு வைக்கப்படும். விசையை அழுத்தி வெடிக்கச் செய்ய, ஆயுதம் தயார் நிலையில் இருக்கும்.

பொதிகளை சுட்டபின், உடைவு-இயக்கம் ஆனது தாழ் அவிழ்க்கப்பட்டு, குழலும், முன்தண்டும் கீழ்நோக்கி சாய்ந்து விழும். இந்த வீழ்ச்சி, செலவான பொதியை, உறையகற்றி குழலில் இருந்து அகற்ற வித்திடும். இப்போது ஆயுதம் ஒரு புதிய சுடும் சுழற்சிக்கு தயாராகிவிடும்.

மேல்-உடைவு இயக்கம் [தொகு]

மேல் நோக்கிய உடைவை கொண்ட, சுமித் & வெஸ்ஸன் ரகம் 1

சாதங்கள் [தொகு]

பின்குண்டேற்ற சுடுகலன் இயக்கங்களில் மிக சிறியவைகளில், உடைவு இயக்கமும் ஒன்றாகும். இது மீளச்சுடும் வடிவங்களைவிட குட்டையாகவும், மீளச்சுடாத சுடுகலங்களைவிட இன்னமும்கூட குட்டையாக இருக்கும். இதனால் எடையும், அளவும் இந்த இயங்குநுட்பத்தில் வெகுவாக குறைந்தது.

உடைவு இயக்கத்தின் குழல் அமைப்போடு, உறை-அகற்றியும் இருப்பதால்; வெடியூசி ஊடுருவும் அளவிலான ஒரு சிறு துளையுடைய, ஒரு தட்டையான தகடு தான், குழலாசன முகப்பாக விளங்கும். இதனால் தான், மாற்றத்தக்க குழல்களுக்கு சிறந்ததாக, உடைவு-இயக்கம் ஆனது. உடைவு-இயக்கத்தின் எளிமையான வடிவினால், அதிலும் குறிப்பாக புற-சுத்தியல் வகைகளின், உற்பத்தி விலையும் குறைந்தது.  

பெரும்பாலான சுடுகலன்கள் வலக்கை சுடுநர்களுக்காக வடிவமைக்கப்பட்ட போதிலும், உடைவு-இயக்க துப்பாக்கிகள் இரண்டு தோள்களிலும் வைத்து சுடுவதற்கு ஏதுவான வடிவில் இருக்கும்.

அறைக்குள் நீண்ட வெடிபொதிகளை வாங்கிக்கொள்ளும் தன்மையே, உடைவு-இயக்கத்தின் மற்றொரு சாதகம்சம் ஆகும். [1]

பாதகங்கள் [தொகு]

உடைவு-இயக்கம் தான் மீளச்சுடாத சுடுகலன்களுக்கான சிறந்த வடிவம் ஆகும். ஒன்றிற்கும் மேலான பொதிகளை சுடுவதற்கு: ஒன்றிற்கும் மேலான குழல்கள் அல்லது சுழலும் உருள்கலன் தேவைப்படும். இரட்டைக்குழல் புரிதுமுக்கிகள், குறிவைத்த புள்ளியை சுடுவதற்கு, அதன் குழல்களை சரிநுட்பமான முறையில் அமைந்திருக்க வேண்டும். நவீன இரட்டைப் புரிதுமுக்கிகள் விலையுயர்ந்ததாகவும், அருகாமை இலக்குகளை சுட ஏற்றதாகவும் உள்ளன. ஆபத்தான விலங்குகளுக்கு எதிராக பிரயோகிக்க, 100 யார் (91 மீ) நீளத்துக்குள் திறம்பட சுடும்படி குழல்கள் ஒழுங்கு படுத்தப்படும்.

இயங்குமுறையின் தேய்மானம் மொத்தமும் தாழ்ப்பாளின் சிறிய பரப்பில் மீது தான் செலுத்தப்படும் என்பதால்; தாழ்ப்பாள் தேய்மானம் ஆடைந்தபின் குழலாசனத்தை கச்சிதமாக அடைப்பது கடினமாகிவிடும். தாம்சன் சென்டர் துப்பாக்கிகளைப் போன்ற, சில சுடுகலன்களில், தேய்மானத்திற்கு பின்பு கழற்றிமாற்றத்தக்க வகையில் தாழ்ப்பாள் இருக்கும். 

மற்ற பின்குண்டேற்ற இயங்குமுறைகளை போல, உடைவு-இயக்கம் வலுவானதாக இல்லை. ஒப்பீட்டளவில் குறைந்த அழுத்தங்களை மட்டுமே தாக்குபிடிக்கும் திராணி இதற்கு இருந்தது.

விளிம்புடைய வெடிபொதிகளால், உடைவு-இயக்க வடிவங்கள் செம்மையாக செயல்படும், இதில் ஒரு திடமான உறையகற்றியை பிரயோக்கிக்கலாம். விளிம்பற்ற வெடிபொதிகளுக்கு சுருள்வில்-பூட்டிய உறையகற்றி தேவைப்படும். இந்த சுருள்வில்-பூட்டிய உறையகற்றிகள், திடமான உரையகற்றிகளைப் போல வலுவுடையதாக இல்லாததால், உறையை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் இதில் அதிகரிக்கிறது. 

இதர நீள்துப்பாக்கி பின்குண்டேற்ற இயக்கங்கள் [தொகு]

மேலும் பார்க்க [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. Briely Shotgun Conversion Sleeves பரணிடப்பட்டது செப்டெம்பர் 28, 2007 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடைவு_இயக்கம்_(சுடுகலன்)&oldid=2439112" இலிருந்து மீள்விக்கப்பட்டது