உள்ளடக்கத்துக்குச் செல்

வீழும்-அடைப்பு இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
.243 வின்செஸ்டர் கொண்ட, ஒற்றைவெடி வீழும்-அடைப்பு ரூகர் எண். 1 புரிதுமுக்கி

வீழும்-அடைப்பு இயக்கம் (ஆங்கிலம்: falling-block action) என்பது, ஒரு ஒற்றைவெடி சுடுகலன் இயக்கம் ஆகும். இதில், ஆயுதத்தின் குழலாசனத்தில் வெட்டப்பட்டிருக்கும் பொளிவாய்க்குள், செங்குத்தாக சரியும்படியான, ஒரு திடமான உலோக பின்னடைப்பு இருக்கும். இந்த பின்னடைப்பு, ஒரு நெம்புகோலால் இயக்க வல்லதாக இருக்கும்.[1]

இதை ஆங்கிலத்தில் ஸ்லைடிங் ப்ளாக் அல்லது டுராப்பிங் பிளாக் இயக்கம் என்றும் அறியப்படும்.

விரிவாக்கம்

[தொகு]
நழுவும் (வீழும்) அடைப்பின் செயல்பாடு

அடைப்பு மூடப்பட்ட (உயர்) நிலையில் இருக்கும்போது, வெடிபொதி வெடிப்பதால் உண்டாகும் அதி-அழுத்தங்களை தாங்கி அறையை அடைத்து, பின்னுதைப்பை இயங்குமுறைக்கும், தண்டுக்கும் பாதுகாப்பாக கடத்தும். அடைப்பு தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கும்போது, ஏற்கனவே சுடப்பட்ட உறையை அகற்றவோ, அல்லது சுடப்படாத வெடிபொதியை மீள்குண்டேற்றவோ; அறையின் பின்முனை (குழலாசனம்) திறந்துக் காட்டப்படும். இது ஒரு மிக வலிய இயங்குமுறை ஆகும். சிறிய ஆயுதங்களிலும், கனரக பீரங்கிகளிலும் இவ்வகையான இயங்குநுட்பம் பிரயோகத்தில் உள்ளது.

எம்1870 பெல்ஜிய காம்பிலெயின், எம்1872 கிரேக்க மியோனாஸ், ஷார்ப்ஸ் புரிதுமுக்கி, ஃபார்க்கஹார்சன் புரிதுமுக்கி, வின்செஸ்டர் ரகம் 1885, மற்றும் ரூகர் எண். 1, உள்ளிட்டவை இந்த இயக்கத்தை தான் கொண்டிருந்தன.

மேலும் பார்க்க 

[தொகு]

மேற்கோள்கள் 

[தொகு]
  1. Westwood, David (2005). Rifles: An Illustrated History of Their Impact. ABC-CLIO. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85109-401-1.

வெளி இணைப்புகள் 

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீழும்-அடைப்பு_இயக்கம்&oldid=2331323" இலிருந்து மீள்விக்கப்பட்டது