தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம்
Appearance
தமிழ்நாட்டில் இருக்கும் புதிரை வண்ணார் எனும் சாதியினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு புதிரை வண்னார் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது[1]. இந்த அமைப்பில் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் தலைவராகவும், அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக 12 அரசு அதிகாரிகளும், அலுவல் சாராத உறுப்பினர்களாக 13 உறுப்பினர்களும் நியமிக்கப்படுவர். இந்த வாரியத்தின் மூலம் புதிரை வண்ணார் சாதியினருக்கான நலத் திட்ட உதவிகள் அளிக்கப்படும்.
அமைப்பு
[தொகு]தமிழ்நாடு அரசு அமைத்துள்ள “தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம்” எனும் அமைப்பு கீழ்கண்டவர்களைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.[2]
தலைவர்
[தொகு]- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அமைச்சர்
உறுப்பினர்கள்
[தொகு]- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் செயலாளர்
- நிதித்துறைச் செயலாளர்
- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர்
- ஊரகவளர்ச்சித் துறைச் செயலாளர்
- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறைச் செயலாளர்
- சுகாதாரத் துறைச் செயலாளர்
- பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர்
- பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ மேலாண் இயக்குநர்
- பேரூராட்சி ஆணையர்
-ஆகியோர் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக இருப்பார்கள்.
- மா.அன்பழகன் (சட்டமன்ற உறுப்பினர், பழனி, திண்டுக்கல் மாவட்டம்)
- கோவை தங்கம் (சட்டமன்ற உறுப்பினர், வால்பாறை, கோயம்புத்தூர் மாவட்டம்)
- து.ரவிக்குமார் (சட்டமன்ற உறுப்பினர், காட்டுமன்னார் கோவில், கடலூர் மாவட்டம்)
- எஸ்.செல்வம் (மதுரை)
- தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், தேனி, வேலூர், திருச்சி மாவட்டங்களுக்கு தலா ஒரு நபரும், நெல்லை மாவட்டத்துக்கு 2 பேருமாக மொத்தம் 13 பேர் இக்குழுவில் அலுவல் சாரா உறுப்பினர்களாக இருப்பார்கள்.
வாரியப் பணிகள்
[தொகு]- இந்த அமைப்பிற்கு புதிரை வண்ணார் சாதியைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை அளிக்கப்படும்.
- புதிரை வண்ணார் நல வாரியத்தில் உறுப்பினராகச் சேர்ந்து அடையாள அட்டை பெற்றவர்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி மூலம் வாரியத்தால் அளிக்கப்படும் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்படும்.
- இச்சமுதாய மக்களின் கல்வி அறிவுநிலை பின்தங்கிய நிலையில் உள்ளதை கணக்கில் கொண்டு இவ்வினத்தை சேர்ந்த அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்தல்.
- இச்சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, தொகுப்பு வீடுகள் கட்டித்தருதல், பொருளாதார திட்டங்களை மானியத்துடன் தருதல் உள்பட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் இவ்வாரியம் மூலம் செயல்படுத்தப்படும்.
- புதிரை வண்ணார் இன மக்களின் முன்னேற்றத்துக்காக அரசு மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் மற்றும் உதவிகளும் சிறப்பான முறையில் தங்கு தடையின்றி கிடைப்பதற்கும் இதனை கண்காணிக்கும் வகையில் இவ்வாரியம் செயல்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://dinamani.com/tamilnadu/article612926.ece?service=print
- ↑ [http://www.tn.gov.in/ta/go_view/atoz G.O.Ms.No. 114 Dt: October 15 ,2009]