சென்னை மாநகரக் காவல்
சென்னை மாநகரக் காவல் | |
---|---|
குறிக்கோள் | வாய்மையே வெல்லும் |
சென்னை மாநகரக் காவல் தமிழக காவல்துறையின் பிரிவாகவும் சட்ட அமலாக்கப் பிரதிநிதியாகவும் இந்திய மாநிலத்திலுள்ள தமிழகத்தின் தலை நகரமான சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் மக்களைப் பாதுகாக்கும் பணியினை மேற்கொள்கின்றது.
சென்னை மாநகரக் காவல் சென்னை மாநகர காவல்துறை தமிழக உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பெற்ற ஒரு ஆணையர் (காவல் துறை கூடுதல் இயக்குநர் படிநிலை - ஏ டி ஜி பி) ஆளுமையின் கீழ் செயல்படுகின்றது.
சென்னை மாநகரக் காவல் சென்னையில் 36 துணைப் பிரிவுகளாகவும் அப்பிரிவுகளின் கீழ் அடங்கும் 155 காவல் நிலையங்கள் (மகளிர் காவல்நிலையங்கள் உட்பட)[1][2] தனது சீர்மிகுப் பணியினை மேற்கொள்கின்றது.
சென்னை மாநகர காவல் மின்னணுப் பாதை மூலம் காவல் ஊழியர்களின் வழக்கமானப் பணியினை, செயல் திறன்களை அளவிடும் விதமாக இந்தியாவிலேயே முதன் முதலில் அறிமுகப்படுத்தியப் பெருமையைக் கொண்டது.
13 அக்டோபர் 2021 அன்று சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தின் கீழ் இருந்த 32 காவல் நிலையங்களைக் கொண்டு தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம் மற்றும் ஆவடி மாநகரக் காவல் ஆணையரகம் நிறுவப்பட்டது.[3][4][5][6]
வரலாறு
[தொகு]1659 இல் சென்னை மதராஸ் பட்டணம் என்று எல்லோரும் அழைக்கும் விதத்தில் ஒரு மீனவ கிராமாமாக அமைந்திருந்த காலகட்டத்தில் பெட்ட நாய்க் என்பவரால் கடை நிலை ஊழியர்களைக் கொண்டு நகரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் ஒருக் குழுவாக அமைக்கப்பட்டது. இவர்களே நகரைப் பாதுகாக்கும் காவலர்களாக செயல்பட்டனர்,
1780 இல் அங்காடிகள், சரக்குகளின் மதிப்பீடுகளை கண்காணிக்கும் விதமாக காவல் துறை கண்காணிப்பாளர் என்ற பதவி அறிமுகப்படுத்தப்பட்டது. பின் ஏற்பட்ட இந்தியப் பிரிவினையால் இந்தியா பிரித்தானியர்களின் ஆளுமைக்குள்ளானபொழுது மதராஸ் காவல் என்று நவீனமாக்கப்பட்டது.
காவல் நிலையங்கள் (பி.எஸ்) | 90 [7][8] | 2009 ஆண்டு தற்பொழுதய நிலவரம் |
அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் (ஏ.டபுள்யு.பி.எஸ்) | 35 [9][10] | 2007 ஆண்டு நிலவரப்படி |
புறக்காவல் நிலையங்கள் (ஒ.பி) | 9[1] | 2005-2006 ஆம் ஆண்டு நிலவரப்படி |
காவல் எல்லைகள் (போலிஸ் லிமிட்) | 220 ச.கி.மீ | 2004 ஆம் ஆண்டு நிலவரப்படி |
மக்கள் தொகை | 70 இலட்சம் | 2004 ஆம் ஆண்டு நிலவரப்படி |
சென்னை மாநகரக் காவல் ஆணையரகம்
[தொகு]சென்னை மாநகரக் காவல் ஆணையரகம் வேப்போியில் அமைந்துள்ளது. இவ்வாணையரகத்தில் ஆணையராக காவல் துறைத் தலைவர் (ஐ.ஜி.பி-இன்ஸ்பெக்டர் ஜென்ரல் ஆப் போலிஸ்) படிநிலையில் பொருப்பேற்றுள்ள ஆணையரே சென்னை மாநகர காவல் துறையின் பொறுப்பாளார் ஆவார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் சென்னை மாநகரக் காவல்துறை இயங்கும். அவர் ஆளுமையின் கீழ் சென்னை மாநகரக் காவல்துறை செயல்படும். சென்னை மாநகரக் காவல் ஆணையரகம் தமிழக காவல்துறை இயக்குநரின் (டி.ஜி.பி- இயக்குநர் ஜென்ரால் ஆப் போலிஸ்) தலைமையில் ம்ற்றும் அவர் வழிகாட்டுதலின்படி இயங்குபவை ஆகும்.
அவருக்குத் துணையாக கூடுதல் காவல் துறை இயக்குநர் (ஏ.டி.ஜி.பி), கூடுதல் ஆணையர்கள் (ஏ.சி.ஒ.பி), இணை ஆணையர்கள் (ஜே.சி-ஜாயின்ட் கமிசனர்) மற்றும் துணை ஆணையர்கள் (டி.சி-டெபுட்டி கமிசனர்) செயல் புரிவர்.
சென்னை மாநகரக் காவல் துறை அமைப்பு
[தொகு]
சென்னை மாநகரக் காவல் துறை அமைப்பின் வரைபடம் (சி.ஒ.பி)[11] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
சாதனைகள்
[தொகு]சென்னை மாநகரக் காவல் தனது பணியினை மேலும் சிறப்பாக மேற்கொள்வதற்காக கூடுதலாக மஞ்சள் படை மற்றும் நீலப் படை என்ற இரு இருசக்கர வாகனப் படைப்பிரிவுகளும் , ரோந்து செல்லும் நான்கு சக்கர ஊர்திகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
- ஒவ்வொரு மஞ்சள் படையினரும் 2 ச கிமீ சுற்றளவில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரைக் காவல் பணியினை மேற்கொள்வர்.
- ஒவ்வொரு நீலப் படையினரும் 2 ச கி மீ சுற்றளவில் இரவு 11 மணி முதல் காலை 6.30 மணி வரை இரவுப் பணியினை மேற்கொள்வர்.
- ரோந்து ஊர்திகள் காவலர்களுடன் தினந்தோரும் சராசரியாக 3.2 ச.கி.மீ சுற்றளவில் காவல் பணியினை மேற்கொள்ளும்.
இப்படையினரின் வாகனங்கள் நவீன தரத்துடன் காவல்துறைச் சின்னங்கள் பொறிக்கப்பட்டு , எச்சரிக்கை ஒலி, ஒளிரும் சுழல் விளக்கு, பொது மக்களின் முகவரிகளை மின்னணு முறையில் அறியும் வகை, கம்பியில்லாத் தொடர்புக் கருவி போன்ற நவீன அமைப்புகளுடன் மக்களை வலம் வந்து பணியாற்றுகின்றன. காவல் துறை கட்டுப் பாட்டு அறையின் மக்கள் அழைப்புக்கு பிரதிச் செயல் நேரமாக 3 லிருந்து 4 நிமிட நேரமாக நிர்ணயிக்கப்பட்டு துரிதமாக மக்கள் பணியாற்றுகின்றது.
காவல் நிலையங்கள்
[தொகு]இந்தியக் காவல் பணி வரலாற்றின் முதன் முறையாக தமிழகத்தின் சென்னை மாநகரக் காவல் துறைக்கு ஹூன்டாய் ஊர்திகள் வழங்கப்பட்டன. சட்டம் ஒழுங்குப் பிரிவிற்காக 78 ஊர்திகளும், 21 ஊர்திகள் போக்குவரத்துக் காவல் பிரிவிற்காகவும் வழங்கப்பட்டன. மீதமுள்ள 4 ஊர்திகள் தமிழக முதல்வர் ஊர்தியின் பாதுகாப்பு ஊர்திகளாக செயல்படுகின்றன.
புதிய காவல் ஆணயரகங்களை அமைத்தல்
[தொகு]13 அக்டோபர் 2021 அன்று சென்னை மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில காவல் நிலையங்களைக் கொண்டு ஆவடி மாநகரக் காவல் ஆணையரகம் மற்றும் தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம் நிறுவ தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.[13] [14]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புக்கள்
[தொகு]- தமிழ்நாடுக் காவல்- இணையம்
- இந்து நாளிதழ்: இந்தியத் தர நிறுவனம்- குழு சென்னைக் காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டது பரணிடப்பட்டது 2007-03-13 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ்நாடுக் காவல் சென்னை மாநகரம் -தகவல்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 தமிழக ஆரசு 2005-2006 க்கான காவல் படை, சிறை நிலவரம் பற்றிய அறிக்கை பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட நாள் 05-05-2009
- ↑ தமிழக உள்துறை அமைச்சகம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 05-05-2009
- ↑ Greater Chennai Police may be bifurcated
- ↑ Stalin’s move to trifurcate Chennai police commissionerate welcomed Stalin’s move to trifurcate Chennai police commissionerate welcomed
- ↑ தாம்பரம், ஆவடியில் புதிய போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் - மு.க.ஸ்டாலின்
- ↑ காவல் ஆணையரக எல்லைகள் வரையறை!
- ↑ அவசர உதவி-மெட்ராஸ் டாட் காம்-இணையம் பரணிடப்பட்டது 2009-03-03 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 05-05-2009
- ↑ சென்னையிலுள்ள மொத்த காவல்நிலையங்கள் பொது-ஸ்கிரிபிட் இணையம் பரணிடப்பட்டது 2009-04-08 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 05-05-2009
- ↑ தி இந்து -2007 நிலவரப்படி 35 காவல்நிலையங்கள் இயங்குகின்றன பரணிடப்பட்டது 2009-02-10 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 05-05-2009
- ↑ சென்னை மற்றும் தமிழகத்தின் அனைத்து மகளிர் காவல்நிலையம் மற்றும் தொலைபேசி எண்கள்-இணையம் பரணிடப்பட்டது 2013-03-24 at the வந்தவழி இயந்திரம் பார்த்துப் பரணிடப்பட்ட நாள் 05-05-2009
- ↑ தமிழ்நாடு காவல்துறை அமைப்பின் வரைபடம்-தமிழ்நாடு காவல்துறை இணையம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 05-05-2009
- ↑ தமிழக அரசின் கொள்கை முடிவுக் குறிப்புகள் 2008-2009-ஆங்கில சொல்=தமிழ் ஆட்சியல் சொல் பார்த்துப் பரணிடப்பட்ட நாள் 06-05-2009
- ↑ Tamil Nadu: Officials work on details of new commisionerates
- ↑ Stalin’s move to trifurcate Chennai police commissionerate welcomed Stalin’s move to trifurcate Chennai police commissionerate welcomed
வெளி இணைப்புகள்
[தொகு]