உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சென்னை மாநகரக் காவல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled

[தொகு]

கட்டுரை நன்றாக உள்ளது, தமிழ்ச் செல்வம். தகவல் சட்டமும் அழகாக உள்ளது. -- சுந்தர் \பேச்சு 05:31, 5 மே 2009 (UTC)[பதிலளி]


பாராட்டுக்கு நன்றி சுந்தர், இதன் கட்டுரையில் சில பல முக்கியமான தகவல்கள் சிதறிக்கிடக்கின்றன். இதன் ஆணையரகம் பிரிக்கப்பட்டதால். மேற்கோள்கள் சரியாக கிடைக்கவலில்லை. இதன் காவல் இணையத்திலும் போதியத் தகவல்கள் இல்லை அவை கட்டுமானத்தில் உள்ளன என்று அறிகிறேன். தகவல்கள் ஒன்றோக்கொன்று முரணாக உள்ளன. தங்களுக்கு ஆதாரமான தகவல்கள் கிடைத்தால் திருத்துவதற்கு உதவவும். நானும் முயற்சிக்கின்றேன்.நன்றி--செல்வம் தமிழ் 12:04, 5 மே 2009 (UTC)

செல்வம், ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். தகவற்சட்டத்தில் ஆணையர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். இவை தேவை தானா? ஆணையர்கள் அடிக்கடி மாற்றப்படுவார்கள் தானே? குறைந்தது இப்பட்டியல் எந்த நாளில் இற்றைப்படுத்தப்பட்டது என்றாவது ஒரு சிறு குறிப்பு தகவல் சட்டத்தில் கூறிக்கப்பட வேண்டும். இணை, கூடுதல் ஆணையாளர்கள், போன்றவர்களை இங்கு குறிப்பிடத் தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன்.--Kanags \பேச்சு 09:46, 6 மே 2009 (UTC)[பதிலளி]

உண்மைதான், அந்தத் தகவல் கொடுப்பதில் சிக்கல் ஒன்றுமில்லை. ஆனால் சட்டத்தில் சற்று ஒழுங்கீனமாக அமையும் என்று அனைத்திற்கும் இடவில்லை. இயக்குநருக்கு மட்டும் இட்டேன். பெரும்பாலும் மக்கள் சந்திப்பது இந்த இணை ஆணையர்களைத் தான். ஆணையரை குறிப்பிட்ட நேரத்தில்தான் சந்திக்க முடியும் (பொது மக்கள்) அதற்காக சட்டத்தில் இட்டேன் அது மட்டுமில்லை ஆங்கில சட்டத்தில் இவையெல்லாம் வேறு ஒரு பெயரில் அந்த நாட்டுப் படி நிலையில் குறிப்பிட்டுள்ளார்கள் (கான்ஸ்டபிள் வரை).


தமிழகத்தில் ஆணையருக்கு அடுத்தப் படிநிலை இணை ஆணையர் தான். உதவி ஆணையர்களை குறிப்பிடவில்லை. மூன்று மண்டல ஆணையரையும் அந்தந்தப் பகுதியில் உள்ளவர்கள் மண்டலங்கள் பார்த்து செல்லவேண்டும். தேவையில்லையென்றால் மாற்றிவிடுகின்றேன். தற்பொழுது அவற்றில் மேற்குறிப்பை இடுகின்றேன்.--செல்வம் தமிழ் 04:51, 7 மே 2009 (UTC)


இவற்றை இழுவைச்சட்டத்தின் மூலம் மாற்ற முயற்சி செய்தேன் முடியவில்லை. மீண்டும் முயற்சி செய்து பார்க்கின்றேன். உங்களால் முடிந்தால் இழுவைச் சட்டம் தகவற்பெட்டி யில் முயற்சிக்கவும் இல்லையென்றால் தள முகவரி (இழுவை தகவற்பெட்டி- collapsible) கொடுங்கள் நான் முயற்சிக்கின்றேன்.--செல்வம் தமிழ் 05:17, 7 மே 2009 (UTC)

ஆங்கிலப் பயன்பாடு

[தொகு]

செல்வம், மிகவும் தகவற் செறிவுள்ள கட்டுரைகளை எழுதுகிறீர்கள். என் நன்றியும் பாராட்டுகளும். ஆனால், தேவையில்லாத இடங்களில் கூட ஏன் ஆங்கில, பிற மொழி அடைப்புக்குறிகளை இடுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. எ.கா. சிறை என்பதற்கு ஜெயில் என்று அடைப்புக் குறிக்குள் குறிப்பிடுகிறீர்கள். காவல் நிலையம் என்பதற்கு பி. எஸ் (அதாவது Police station என்பதன் சுருக்கம்) என்று குறிப்பிடுகிறீர்கள். இவற்றைத் தவிர்க்கலாம் என்பது என் வேண்டுகோள். விக்கிப்பீடியா பேச்சு:அடைப்புக்குறிகளுக்குள் ஆங்கிலம் பார்க்கலாம்--ரவி 20:20, 11 மே 2009 (UTC)[பதிலளி]

சென்னை மாநகரக் காவல் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.