உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Ravidreams

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர்: அ. இரவிசங்கர்

முதற்பக்க அறிமுகம்

[தொகு]

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இரவி, 2005 முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்து வருகிறார். கட்டுரைகள் உரை திருத்தம், தளத்துப்புரவு, மீடியாவிக்கி இடைமுகப்புத் தமிழாக்கம், தமிழ்விக்கிக் கொள்கை உரையாடல்கள், உதவிப்பக்கங்கள் உருவாக்கம் முதலிய பணிகளில் ஈடுபடுபவர். பயிற்சிப் பட்டறைகள், ஊடகத் தொடர்பு, வலைப்பதிவுகள் மூலம் தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு, புரிதலை மேம்படுத்தி வருகிறார். 2010 தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டியின் கள ஒருங்கிணைப்புகளில் முக்கிய பங்கேற்றார். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கண்காட்சியில் தமிழ் விக்கித்திட்டங்களுக்கான சிறப்புப்பகுதி ஒன்றைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்துப் பணியாற்றினார். 2010ஆம் ஆண்டு விக்கிமேனியாவில் கூகுள் மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு பற்றிய விளக்க அறிக்கை ஒன்றை முன்வைத்தார். தமிழ் விக்சனரியின் தொடக்க நாட்களில் அத்தளத்தை ஒழுங்கு செய்து பயனர்களை ஈர்க்க வழிசெய்தார். விக்சனரியில் முதல் முறையாகத் தானியங்கி வாயிலாகச் சொற்களைப் பதிவேற்றிய திட்டத்துக்கான திட்டமிடலிலும் இயக்கத்திலும் கலந்துள்ளார். இசுரேலில் நடந்த 2011 விக்கிமேனியாவிலும் மெக்சிக்கோவில் 2015ல் நடந்த விக்கிமேனியாவிலும் கலந்து கொண்டுள்ளார்.

விக்கி ஈடுபாடுகள்

[தொகு]
  • உரை திருத்தம், துப்புரவு, தளப் பராமரிப்பு, புதுப்பயனர் வரவேற்பு, எரிதக் கண்காணிப்பு.
  • கொள்கைப் பக்கங்கள், உதவிப் பக்கங்கள் உருவாக்கம்.
  • பயிற்சிப் பட்டறைகள், ஊடகத் தொடர்புகள், வலைப்பதிவுகள் மூலம் தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு, புரிதலை மேம்படுத்தல்.
  • கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம்.
  • சூன் 2010 தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டி.
  • இந்திய விக்கிமீடியா மடற்குழுமத்தில் பங்கேற்பு.

2013 பங்களிப்பு விருப்பங்கள்

[தொகு]

2012 பங்களிப்பு விருப்பங்கள்

[தொகு]

மார்ச்சு 11, 2005 அன்று தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கத் தொடங்கி, இன்றோடு ஏழு ஆண்டுகள் முடிந்து எட்டாவது ஆண்டு தொடங்குகிறது. இந்த ஏழு ஆண்டுகளில் இணையத்தை அணுகிய நாட்களில் எல்லாம் தமிழ் விக்கிப்பீடியாவின் அண்மைய மாற்றங்களைக் காணாமல் இருந்தது இல்லை. முதல் ஆயிரம் கட்டுரைகளை உருவாக்க முனைந்தது முதல் இன்றைய வளர்ச்சியைக் காணும் வரை ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாயின் நிலை தான்.. :) தமிழ் இணையத்தில் என்னுடைய பல செயற்பாடுகளுக்கும் தொடக்கப் புள்ளி தமிழ் விக்கிப்பீடியாவே. தமிழ் விக்கிப்பீடியா வளர வளர அதனுடன் சேர்ந்து நானும் பண்பட்டு வளர்ந்துள்ளதாகவே எண்ணுகிறேன். தமிழ் விக்கிப்பீடியா எனக்கு என்ன தந்தது என்று நான் சிந்திக்கப்போவதில்லை. ஏனெனில், வேறு எங்கும் காணக்கிடைக்காத அருமையான பல நட்புகளைத் தந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், என்னுடைய வாழ்க்கைத் துணையைச் சந்தித்ததற்கு தமிழ் விக்கிப்பீடியாவே ஒரு முக்கிய காரணம் :) அவரையும் ஒரு விக்கிப்பீடியர் ஆக்க முயன்று கொண்டிருக்கிறேன் :) நல்ல குழந்தைகளைப் பெற்று அவர்களையும் விக்கிப்பீடியர்கள் ஆக்கி விட வேண்டும் என்ற கொலைவெறியும் இருக்கிறது :) வாழ்க்கைச் சூழலின் காரணமாக 2010 சூலை முதல் 2011 திசம்பர் வரை முனைப்பாகப் பங்களிக்க முடியவில்லை. இந்த ஆண்டு எனது திறன், நேரம் கிடைப்பதற்கு உட்பட்டு சில பணிகளைச் செய்ய விரும்புகிறேன்.

பதக்கம்

[தொகு]
இரவி உங்கள் அயராத அரும்பணியையும் வழிகாட்டுதலையும் கருதி என் உவப்பை தெரிவிக்க இப்பதக்கத்தை அளிக்கின்றேன்-செல்வா
  • இரவி, உங்கள் பங்களிப்பால் விக்கியும் வளர்ந்தது, நீங்களும் வளர்ந்தீர்கள் என்பதைக் கேட்கும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. பயனர்களுக்குத் தொழில்நுட்ப உதவியளித்து, வழிகாட்டி, அவர்கள்தம் எழுத்துத் திறமை மேம்படுவதற்கும் துணைசெய்து வருகின்றீர்கள். உங்கள் சீரிய பணி தடையின்றி தொடர்ந்திட வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்!--பவுல்-Paul (பேச்சு) 20:06, 10 மார்ச் 2012 (UTC)
இரவி, இல்லறத்தில் ஏழாண்டு அரிப்பு என்று (ஆங்கிலச் சொல்லாடல்) அன்பில் தொய்வு ஏற்படுவதாகக் கூறுவார்கள்.:) விக்கிபாற் கொண்ட உங்கள் அன்பு குன்றாதிருக்கட்டும். இந்த ஏழாண்டுகளில் மிகச்சிறந்தமுறையில் தமிழ்விக்கியின் நிர்வாகக் கட்டமைப்பிற்கும் தரம் பேணலுக்கும் சீரிய பங்களித்துள்ளீர்கள். பல பிணக்குகளில் இருநிலைகளுக்கும் இடையே பொதுவான தீர்வு காண விழைந்துள்ளீர்கள். ஆதர்சத்திற்கும் நிதர்சத்திற்கும் (சட்டென்று தமிழ்ச்சொல் வரவில்லை..மன்னிக்க!) பாலமாக அமைந்திருந்தீர்கள். என்னைப் போன்றவர்களை பலரை பதிவுலகிலிருந்து இங்கு கொணர்ந்து வழிகாட்டியுள்ளீர்கள். வாழ்க உங்கள் விடாமுயற்சி !! வளர்க உங்கள் சீரிய பணி !!--மணியன் (பேச்சு) 01:36, 11 மார்ச் 2012 (UTC)


சிறந்த வழிகாட்டுனர் பதக்கம்
உதவிகளுக்கு நன்றி.இப்பதக்கம் உங்களுக்கு பொருத்தமானது. Aathavan jaffna (பேச்சு) 14:23, 28 மார்ச் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


சிறந்த ஒருங்கிணைப்பாளர்
தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாம் ஆண்டு விழாக் கொண்டாத்தை சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தியமைக்காக சிறந்த ஒருங்கிணைப்பாளர் என்னும் பட்டம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். --Anton (பேச்சு) 02:07, 28 செப்டம்பர் 2013 (UTC)

வழமையாக நீங்கள்தான் சக பயனர்களுக்கு பதக்கம் வழங்கவீர்கள். அதில் கொஞ்சம் மாற்றம் இருக்கட்டுமே! :) --Anton (பேச்சு) 02:07, 28 செப்டம்பர் 2013 (UTC)

👍 விருப்பம் --மணியன் (பேச்சு) 03:16, 28 செப்டம்பர் 2013 (UTC)
👍 விருப்பம் இருநாட்கள் விக்கிப்பீடியர்களை சந்திக்கவும், அளவளாவ வாய்ப்பும் ஏற்படுத்தி தந்தமைக்காகவும், சட்டை அச்சுப்பணியில் இறுதி இருநாட்கள் மிகத்தீவிரமாக களப்பணியாளராக செயல்பட்டு எனக்கு ஓய்வளித்தமைக்கும் மிக்க நன்றிங்க. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:59, 30 செப்டம்பர் 2013 (UTC)
👍 விருப்பம் ஏற்கனவே கொண்டாட்டத்தின்போது பங்களிப்பாளர் அறிமுகத்தில் உங்களை வாழ்த்தி நான் அளித்த தமிழ் விக்கிப்பீடியா செயல்வீரர் பட்டத்தை இங்கும் பதிகிறேன், இரவி.

👍 விருப்பம்மகாலிங்கம் (பேச்சு) 11:48, 18 சூலை 2017 (UTC)

👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:37, 2 அக்டோபர் 2013 (UTC)
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:54, 2 அக்டோபர் 2013 (UTC)
👍 விருப்பம் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 08:27, 2 அக்டோபர் 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா செயல்வீரர்
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் விக்கிப்பீடியா முன்னெடுத்த முக்கிய திட்டங்கள் அனைத்திலும் அயராது உழைத்து முக்கிய பங்காற்றி வெற்றிபெறச் செய்தமைக்காக உங்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா செயல்வீரர் எனும் பட்டம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இத்திட்டங்களில் உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள். -- சுந்தர் \பேச்சு 11:27, 30 செப்டம்பர் 2013 (UTC)
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 11:56, 30 செப்டம்பர் 2013 (UTC)
👍 விருப்பம்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:12, 1 அக்டோபர் 2013 (UTC)
👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:37, 2 அக்டோபர் 2013 (UTC)
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:53, 2 அக்டோபர் 2013 (UTC)
👍 விருப்பம் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 08:27, 2 அக்டோபர் 2013 (UTC)
👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:42, 2 அக்டோபர் 2013 (UTC)
👍 விருப்பம் -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 06:10, 8 அக்டோபர் 2013 (UTC)
👍 விருப்பம் -- சிவகார்த்திகேயன் (பேச்சு) 04:52, 27 திசம்பர் 2013 (UTC)
செயல்நயம் மிக்கவர் பதக்கம்
இரவி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காக பரப்புரை மேற்கொள்வதற்கும் விக்கிக்கான உங்களின் உழைப்பையும் பாராட்டி செயல் நலம் மிக்கவர் என்ற இப்பதக்கத்தை அகம் மகிழ்ந்து வழங்குகிறேன். ஆர்.பாலா (பேச்சு) 23:58, 10 சூன் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம் வாழ்த்துக்கள் இரவி அவர்களே!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:26, 11 சூன் 2014 (UTC)
👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:28, 11 சூன் 2014 (UTC)
வாழ்த்துக்கள் இரவி --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:52, 11 சூன் 2014 (UTC)
மெய்வாழ்வுப் பதக்கம்
இரவி, தமிழ்விக்கியில் நீங்கள் செலவிடும் நேரம் மற்றும் உழைப்பிற்காக அகம் மகிழ்ந்து இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன். இரா.பாலா (பேச்சு) 11:15, 5 செப்டம்பர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம் தங்கள் விக்கிப்பணி தொடர என் வாழ்த்துக்கள்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:25, 5 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 04:47, 6 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்-- பல்வேறு அம்சங்களிலும் தமிழ் விக்கி தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருப்பதற்கு இரவியின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. உண்மையில் என்னைப்போன்ற பயனர்களின் பங்களிப்புக்கள் அவருடைய பங்களிப்பு இல்லாமல் உரிய பயனைப் பெறுவது கடினம். அவருக்கு எனது வாழ்த்துக்கள். இந்தப் பதக்கத்தை அவருக்கு வழங்கிய பயனர் இரா.பாலாவுக்கு எனது நன்றிகள். --- மயூரநாதன் (பேச்சு) 05:21, 6 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம் உங்கள் தன்னலமற்ற விக்கிப்பணிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள் இரவி! --நந்தகுமார் (பேச்சு) 06:29, 6 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:54, 6 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:30, 8 செப்டம்பர் 2014 (UTC)
சிறந்த வழிகாட்டுனர் பதக்கம்
இரவிசங்கர் தாங்கள் எனக்கு பல உதவிகள் செய்துள்ளீர்கள் உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன் உங்கள் பணி மென்மேலும் தொடர்வதற்கு வேண்டிய எல்லா நலங்களும் உங்களுக்குக் கிடைக்க எனது வாழ்த்துக்கள். -- mohamed ijazz(பேச்சு) 07:42, 2 அக்டோபர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:23, 2 அக்டோபர் 2014 (UTC)
👍 விருப்பம்--இரா.பாலா (பேச்சு) 08:27, 2 அக்டோபர் 2014 (UTC)
👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:12, 2 அக்டோபர் 2014 (UTC)
👍 விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:17, 2 அக்டோபர் 2014 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துக்கள் இரவி அவர்களே!!!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:09, 2 அக்டோபர் 2014 (UTC)
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 01:22, 3 அக்டோபர் 2014 (UTC)

பதக்கம்

[தொகு]
சிறந்த உழைப்பாளர் பதக்கம்
விக்கிப்பீடியா பத்தாண்டுக் கொண்டாட்டங்கள் - சென்னைக் கூடலை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்தமைக்காக இப்பதக்கத்தை வழங்கி மகிழ்கிறேன் :) சிவகோசரன் (பேச்சு) 08:58, 13 அக்டோபர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:05, 13 அக்டோபர் 2013 (UTC)

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:08, 13 அக்டோபர் 2013 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 15:00, 13 அக்டோபர் 2013 (UTC)

பிற பயனர் கணக்குகள்

[தொகு]
  • விக்கிமீடியா இந்தியா அலுவல் சார் கணக்கு: பயனர்:Ravidreams (WMIN). தற்போது இந்நிறுவனத்தில் பணியில் இல்லை என்பதால் இக்கணக்கு பயன்பாட்டில் இல்லை. 2014 செப்டம்பர் முதல் 2016 மார்ச் வரை இந்நிறுவனத்தில் திட்ட இயக்குநராக முழுநேரப் பணியாற்றினேன்.
  • விக்கிமீடியா அறக்கட்டளை அலுவல் சார் கணக்கு: பயனர்:RAyyakkannu (WMF). பொறுப்புத் துறப்பு: தற்போது இந்நிறுவனத்தில் பணியில் இல்லை. இந்தக் கணக்கின் மூலம் பதிவேற்றிய தொகுப்புகள் அலுவல் முறையானவை. வழமையான மற்ற தொகுப்புகள் யாவும் தன்னார்வமாக பயனர்:Ravidreams கணக்கின் ஊடாகவே பதிவேற்றப்படும். என்னுடைய அன்றாடப் பணிக்கு உட்பட்டு நான் என்ன வேலைகளை விக்கிப்பீடியா திட்டங்கள் தொடர்பாக செய்தேன் என்பதை இங்கு காணலாம். 2016 இறுதி முதல் ஆகஸ்ட் 2018 வரை இந்நிறுவனத்தில் ஆசியா, கிழக்கு ஐரோப்பா பகுதிகளுக்கான வட்டார நிறுவனக் கூட்டுறவுகள் மேலளாரகப் பணியாற்றினேன்.


வெளி இணைப்புகள்

[தொகு]
தமிழ்99 இப் பயனர் தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்துகிறார்.


இந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ravidreams&oldid=4150732" இலிருந்து மீள்விக்கப்பட்டது