பயனர் பேச்சு:Mariano Anto Bruno Mascarenhas

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்னிடம் பேச இங்கு சொடுக்கவும் .

இது ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ் உடனான உரையாடல் பக்கமாகும். எனக்கு தமிழில் ஆர்வம் அதிகம். அறிவு குறைவு. எனவே எனது எழுத்து மற்றும் இலக்கணப்பிழைகளை திருத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Please sign your comments using four tildes (~~~~). Place comments that start a new topic at the bottom of the page and give them ==A Descriptive Header==. If you're new to Wikipedia, please see Welcome to Wikipedia and frequently asked questions.

உடனடியாக பதில் தேவையெனில் மின்னஞ்சல் செய்யவும்.

நமது பழைய உரையாடல்களை வாசிக்க தொகுப்பில் பார்க்கவும்

உரையாடல்களின் தொகுப்பு


வார்ப்புரு:பயனர் புது உரையாடல்[தொகு]

எனக்கு தெரிந்த குட்டியூன்டு கணணி அறிவை வைத்து ஒரு சோதனை. தவறுகளை தெரியப்படுத்தவும் புருனோ மஸ்கரனாஸ் 16:07, 21 ஆகஸ்ட் 2006 (UTC)

வார்ப்புரு நன்று, புருனோ. -- Sundar \பேச்சு 09:28, 22 ஆகஸ்ட் 2006 (UTC)

பார்க்க-நன்றி[தொகு]

Wikipedia:கலைச்சொல் செயல்பாடுகள் ஒருங்கிணைவு --Natkeeran 17:22, 25 ஆகஸ்ட் 2006 (UTC)


மருத்துவர்கள்[தொகு]

உங்கள் சுட்டிகளுக்கு நன்றி. நிச்சியமாக பல மருத்துவர்கள் பொது சமூகத்தால் நன்கு அறியப்படவர்களாக இருக்கின்றார்கள். இருப்பினும், ஒப்பீட்டளவில் மருத்துவர்கள் அமைதியாக கடமைபுரிவர்கள். சினிமா, அரசியலுடன் வேறுபடுத்தியே அத்துறையை குறிப்பிட்டேன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். --Natkeeran 15:04, 6 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

நல்வரவு[தொகு]

டாக்டர் புருனோ மஸ்கரனாஸ் அவர்களே, தங்களுடைய கட்டுரைகள் சிலவற்றைப் படித்து மகிழ்ந்தேன். உங்கள் வரவு மிக மகிழ்வூட்டும் செய்தி. மருத்துவம், உயிரியல் பற்றி எழுத மிக ஏராளமாக உள்ளன. நீங்கள் தொடர்ந்து எழுதுவது மட்டுமில்லாமல், அருள்கூர்ந்து உங்கள் மருத்துவ நண்பர்கள் சிலரையும் அழைத்து இதில் ஈடுபடுத்துங்கள். எனக்கு மருத்துவம், உயிரியல் துறைகளில் தணியா ஆர்வம். என்னால் ஆன உதவியை கட்டாயம் செய்வேன். நானும் உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறேன். --C.R.Selvakumar 14:01, 7 அக்டோபர் 2006 (UTC)செல்வா[பதிலளி]

கணேஷின் தானியங்கி[தொகு]

புருனோ, நேற்று ஒரு நாளில் மட்டும் கணேஷின் தானியங்கி 242 புதிய கட்டுரைகளை உருவாக்கியது. விவரங்குளுக்குப் பார்க்க - Wikipedia பேச்சு:நிர்வாகிகள். இதனால் தான் கட்டுரை எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேல் விக்கி புள்ளிவிவரங்கள் உடனுக்குடன் இற்றைப்படுத்தப்படுவதில்லை. அதனால், இன்னும் அங்கு கணக்கு உயரவில்லை. எனினும், தமிழ் விக்கிபீடியா காட்டும் 5017 கட்டுரைகள் எண்ணிக்கை சரி தான். தானியங்கித் தொகுப்புகளை காண அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் தானியங்கிகளை காட்டு என்ற இணைப்பை செயற்படுத்தவேண்டும்--ரவி 05:32, 21 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

நீங்கள் என் பேச்சுப் பக்கத்தில் கட்டுரைகளின் எண்ணிக்கை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறாக உள்ளதைச் சுட்டியிருந்தீர்கள். அதற்குக் காரணம் இவை வெவ்வேறு அளவுகோல்களைக் கொண்டு எது கட்டுரை என்று முடிவு செய்வதும் வெவ்வேறு நேரங்களில் இற்றைப்படுத்தப்படுவதும் ஆகும். -- Sundar \பேச்சு 06:22, 25 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

மீண்டும் வருக![தொகு]

வாருங்கள் புரூனோ! நெடுநாட்களுக்குப் பிறகு இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி. உங்கள் வருகை நல்வரவாகுக. பயன்வரவாகுக! உங்களைப் போல மருத்துவ நல்லறிவு கொண்டோர், ஏராளமாக இங்கே ஆக்கம் தரமுடியும். இயன்றபொழுது இயன்றவாறு பங்களித்து ஆக்கம் தர வேண்டுகிறேன்.--செல்வா 21:15, 2 ஆகஸ்ட் 2009 (UTC)

புருனோ, தமிழ் விக்கியில் மருத்துவம், நலவாழ்வு, மனித உடல் பற்றிய அடிப்படைக் கட்டுரைகள் எழுதித் தந்தால் மிகவும் நன்றாக இருக்கும். ஏற்கனவே உள்ள கட்டுரைகளின் தகவல்களை சரி பார்க்கவும் உதவுமாறு வேண்டிக் கொள்கிறேன். நன்றி--ரவி 11:46, 15 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
புருனோ, காச நோய்க் கட்டுரையில் உங்கள் கருத்தைக் கண்டேன். உங்கள் கருத்துக்கு நன்றி. வெகு நாட்களுக்குப் பிறகு இங்கு உங்களைப் பார்க்கின்றேன். ஏதும் மாற்றங்கள் தேவை எனில் மருத்துவராகிய நீங்கள் செய்து தர வேண்டுகிறேன். நன்றி.--செல்வா 23:20, 18 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

உதவமுடியுமா?[தொகு]

புரூனோ, எங்கே வெகுநாட்களாகக் காணோம்? விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#Medicine project என்னும் குறிப்பைப் பார்க்கவும். இது மிகவும் பயனுடைய ஒரு திட்டம் போல் தெரிகின்றது. இதற்கு நீங்கள் இயலும்போது உதவமுடியுமா? நானும் பங்களிக்க ஆவலாக உள்ளேன். இப்பொழுது குறுந்தகடு திட்டம் நடக்கின்றது. இதனோடு இதிலும் இயலுமாறு பங்களிக்க முடியுமா என எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். நன்றி. --செல்வா 21:04, 24 பெப்ரவரி 2012 (UTC)

மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களைக் காண மகிழ்ச்சி!

வணக்கம், Mariano Anto Bruno Mascarenhas!

வருக! வருக!

மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களைக் காண்பதில் மகிழ்கிறேன்.

நீங்கள் என்னைப் போன்றவர் என்றால், பங்களிக்க இயலாத காலத்திலும் அண்மைய மாற்றங்களைக் கவனித்தவாறே இருந்திருப்பீர்கள். எனினும், இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் செயற்பாடுகளை அறிய நமது ஆண்டு அறிக்கைகளைப் பாருங்கள். குறிப்பாக, மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரையும் உள்ளடக்கி வளர்ந்து வரும் தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தைக் காணுங்கள்.

பலரும் இணைந்து பங்களிக்கும் போது, அவ்வப்போதாவது வந்து செல்லும் போது, ஏற்கனவே இருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியாகவும் உந்துதலாகவும் இருக்கும். உங்களைப் போன்றோரிடம் இருந்து புதுப்பயனர்களும் நிறைய கற்றுக் கொள்ள இயலும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இதற்கு மேல் உங்களுக்குத் தெரியாதா என்ன :) ? உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். அன்புடன்...

--இரவி (பேச்சு) 15:05, 29 சூன் 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:02, 19 செப்டம்பர் 2013 (UTC)

இருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை[தொகு]

வணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/விமர்சனங்கள் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்.--இரவி (பேச்சு) 03:33, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சர்தார்ஜி ஜோக்ஸ்[தொகு]

வணக்கம். புருனோ. நீங்கள் கூடலுக்கான கருத்துகள் கூறும் இடத்தில் சர்தார்ஜி ஜோக் என்று கூறி ஒரு நகைச்சுவையை கூறியிருந்தீர்கள். நானும் இதுபோல் முன்பு கூறியதுண்டு. பிற்பாடு இந்திய விடுதலை நாள் என்று பேச்சில் மட்டும் கூறப்படும் ஒரு நாளில் என் கைப்பேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. சர்தார்ஜிகளில் பிச்சைக்காரர் கிடையாது. அனைவரும் உழைப்பவர்கள். அதில் ஆங்கிலேயரை எதிர்த்து உண்மையாக போராடியவர்கள் பலர் உள்ளனர். அதனால் அவர்களை மட்டம்தட்ட ஆங்கிலேயன் உருவாக்கியது தான் சர்தார்ஜி ஜோக்சு என்ற தகவல்தான் அது. அதை பார்த்ததும் எனக்கு அவர்கள் மீது பெருமளவு மதிப்பு உயர்ந்தது. நான் அவ்வாறு நகைச்சுவைகளை கூறுவதை நிறுத்திவிட்டேன். நீங்களும் இனிமேல் இதுபோல் ஒரு பிரிவு மக்களை நகைச்சுவை என்ற பெயரில் புண்பட வைக்க வேண்டாம் என்பது என் வேண்டுகோள். இதுபோல் புகுத்தப்பட்ட நகைச்சுவைகள் அனைத்து மொழிகளிலும் இனங்களிலும் உள்ளன. இன்னொரு உதாரணமாக நான் குப்பனோ சுப்பனோ கிடையாது என்ற சொற்றொடர்களையும் எடுத்துக்கொள்ளலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:20, 3 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சார்.
<<சர்தார்ஜிகளில் பிச்சைக்காரர் கிடையாது. அனைவரும் உழைப்பவர்கள். >> என்பதற்கும் இந்த நகை புனைவிற்கும் தொடர்பில்லை. இந்த நகை புனைவில் அவர்களை பிச்சைக்காரராகவோ அல்லது உழைக்காதவர்களாகவோ காட்டவில்லையே. அந்த நகைச்சுவை நான் எழுதியது அல்ல. சொல்லப்போனால் நீங்கள் குறிப்பிட்ட இரு காரணங்களுக்காத்தான் சர்தார்ஜி நகைத்துணுக்குகள் வர ஆரம்பித்தன என்பது ஆய்வாளர்களின் கருத்து
<<அதனால் அவர்களை மட்டம்தட்ட ஆங்கிலேயன் உருவாக்கியது தான் சர்தார்ஜி ஜோக்சு என்ற தகவல்தான் அது.>>அது தவறான தகவல். இந்த நகைத்துணுக்குகளை உருவாக்கியது இந்தியாவில் உள்ள பிறரே. குறிப்பாக பணியாக்கள் . சீக்கியர்கள் இதே நகைச்சுவையை பணியா ஜோக்ஸ் என்று எதிர்ப்பு காட்டுவதும் உண்டு . . ஆதாரம் Handoo, Jawaharlal; Lutz Röhrich and Sabine Wienker-Piepho (1998) [1990]. "Folk Narrative and Ethnic Identity: The 'Sardarji' Joke Cycle". Storytelling in Contemporary Societies. Tübingen: Gunther Narr. pp. 155–161. ISBN 978-3-8233-4475-9. OCLC 23274712. மற்றும் Sen, Soumen (2004). Khasi-Jaintia Folklore ; Context, Discourse, and History. Chennai: National Folklore Support Centre. p. 11. ISBN 81-901481-3-3. OCLC 56096400. . . . . எனவே எதற்கு எடுத்தாலும் ஆங்கிலேயரை மட்டம் தட்டி வரும் செல்லிடப்பேசி குறுஞ்செய்திகளையும், மேலனுப்பப்படும் மின்னஞ்சல்களையும், நிலைத்தகவல்களையும் நம்ப வேண்டாம்
அதே நேரம் <<அதை பார்த்ததும் எனக்கு அவர்கள் மீது பெருமளவு மதிப்பு உயர்ந்தது. நான் அவ்வாறு நகைச்சுவைகளை கூறுவதை நிறுத்திவிட்டேன். நீங்களும் இனிமேல் இதுபோல் ஒரு பிரிவு மக்களை நகைச்சுவை என்ற பெயரில் புண்பட வைக்க வேண்டாம் என்பது என் வேண்டுகோள். >> இதை ஏற்றுக்கொள்கிறேன். வருங்காலத்தில் இது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க முயல்கிறேன்
சுட்டிகாட்டியமைக்கு நன்றி . அன்புடன் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 04:51, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் தமிழ் விக்கிப்பீடியர்களின் நடுநிலையும் கண்ணியமும் சிலிர்க்க வைக்குதய்யா :) --இரவி (பேச்சு) 04:54, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஓ. நல்லது. உங்களிடம் நான் கூறியது நன்றாகப் போயிற்று. நானும் பல விடயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:35, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உங்களுக்கான செய்தி[தொகு]

இது உரையாடலுக்கிடையில் வருவதால் உங்கள் கவனத்துக்கு இங்கு வைக்கிறேன். - சுந்தர் \பேச்சு 11:57, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சுந்தர், விக்கிப்பீடியா:பயனர் மீது அவதூறு செய்வதை தடுத்தல் குறித்த தெளிவான ஒரு திட்டத்தை நீங்கள் இறுதிபடுத்திய பிறகே என்னால் இது குறித்து மேலும் கூற முடியும். எனவே விக்கிப்பீடியா:பயனர் மீது அவதூறு செய்வதை தடுத்தல் (வரைவு) முதலில் இறுதி செய்து விட்டு, இது குறித்து மேலும் உரையாடலாம் என்பது என் கருத்து புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 12:04, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்[தொகு]

புருனோ, (குறந்தது விக்கிக்குள்) என்னை சார் என்று அழைக்க வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். விக்கிமுறைப்படியே சுந்தர் என்று அழையுங்கள். :) வேறு இழையில் இது தேவையற்ற திசைமாற்றமாக இருக்கும் என்பதால் உங்கள் பேச்சுப்பக்கத்தில் இடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 15:02, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சரி சுந்தர் சார் :) :) புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 15:11, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஐயோ, முடியல புருனோ. :) -- சுந்தர் \பேச்சு 15:22, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உங்களுக்கு நேர்ந்த அவதூறுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம்[தொகு]

புருனோ, அண்மையில் ஒரு தடை செய்யப்பட்ட போலிக் கணக்கில் இருந்து தங்களைப் பற்றிய அவதூறுச் செய்தி வந்திருந்தது. இது தொடர்பாக, தமிழ் விக்கிப்பீடியாவில் நெடுநாள் பங்களிக்கும் பயனர் என்ற முறையில், தமிழ் விக்கிப்பீடியர் சார்பாக நான் உங்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பிட்ட அவதூறுச் செய்தியை விக்கி வரலாற்றில் இருந்து நிலையாக நீக்குவதற்கான நடவடிக்கை எடுப்போம். மீண்டும் இவ்வாறான அவதூறுகள் வராமல் இருப்பதற்கான காப்பு நடவடிக்கைகளை எடுக்க முனைவோம். நன்றி.--இரவி (பேச்சு) 17:24, 24 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் நன்றி ரவி. இவ்வளவு நாளும் இதை கூற முடியாத அளவிற்கு இங்கு பலருக்கு பனிச்சுமை இருந்ததாக நல்நோக்குடன் கருதுகிறேன் #AssumingGoodFaith புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 17:54, 24 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:54, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கொள்கை வகுத்தல் வழிகாட்டல்[தொகு]

புருனோ, அவதூறுகளைத் தடுப்பது, விக்கிப்பீடியா சார்பாக முறையற்றுச் செயற்படுவது தொடர்பான கொள்கை முன்மொழிவுகளை முன்னெடுத்தமைக்கு நன்றி. விக்கிப்பீடியா:கொள்கை வகுத்தல் பக்கம் உங்களுக்கு உதவியாக இருக்கலாம். தகுந்த இடங்களில், கொள்கைகளுக்குப் பதிலாக வழிகாட்டல் பக்கங்களை உருவாக்கவும் முனையலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:36, 9 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஒரு வேண்டுகோள்[தொகு]

வணக்கம் Mariano Anto Bruno Mascarenhas! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:48, 17 மே 2014 (UTC)[பதிலளி]

துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய குறிப்பிடத்தக்கமை வரையறை[தொகு]

வணக்கம். ஒரு துடுப்பாட்ட இரசிகராக, துடுப்பாட்டக்காரர்களின் குறிப்பிடத்தக்கமை வரையறை தொடர்பாக உங்கள் கருத்து தேவைப்படுகிறது. பார்க்க: விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை வாக்கெடுப்பு. பின்னணி உரையாடலுக்கு, பகுப்பு பேச்சு:துடுப்பாட்டக்காரர்கள் பார்க்கவும். நன்றி.--இரவி (பேச்சு) 13:15, 17 மே 2014 (UTC)[பதிலளி]

விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Mariano Anto Bruno Mascarenhas!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--Mohamed ijazz (பேச்சு) 10:19, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015[தொகு]

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மதனாகரன் (பேச்சு) 07:08, 9 சூலை 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mariano_Anto_Bruno_Mascarenhas&oldid=2698802" இலிருந்து மீள்விக்கப்பட்டது