ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா
Stanley Jeyaraja Tambiah
பிறப்பு சனவரி 16, 1929 (1929-01-16) (அகவை 84)
பிறப்பிடம் இலங்கையின் கொடி இலங்கை
வாழிடம் இலங்கை
ஐக்கிய அமெரிக்கா
தேசியம் இலங்கையர்
இனம் தமிழர்
துறை மானிடவியல்
பணி நிறுவனம் இலங்கைப் பல்கலைக்கழகம்
கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகம்
சிக்காகோ பல்கலைக்கழகம்
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள் இலங்கைப் பல்கலைக்கழகம்
கோர்னெல் பல்கலைக்கழகம்
விருதுகள் பல்சான் பரிசு (1997)
ஃபுகோக்கா ஆசியக் கலாச்சார விருது (1998)
மதம் கிறிஸ்தவம்

ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா அல்லது எஸ்.ஜே.தம்பையா (Stanley Jeyaraja Tambiah; பிறப்பு: ஜனவரி 16, 1929)[1] ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறையில்[2] பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவரது ஆய்வுத் துறைகள்: இனத்துவம், இனமுரண்பாடுகள், பௌத்தம், வன்முறையின் மானிடவியல், இனக்குழுமங்களின் வரலாறு, தாய்லாந்து, இலங்கை, மற்றும் தமிழர் போன்றன. இவர் Association for Asian Studies இனது முன்னாள் தலைவருமாவார். மானிடவியல் ஆய்வுகளுக்காக இவருக்கு 1997ம் ஆண்டுக்கான பல்சான் பரிசு வழங்கப்பட்டது.

பொருளடக்கம்

வாழ்க்கைக் குறிப்பு [தொகு]

ஸ்டான்லி தம்பையா இலங்கையில் கிறிஸ்தவ தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார். கொழும்பு சென் தோமஸ் கல்லூரியில் பள்ளிப் படிப்பை முடித்து பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். 1951இல் கலைமாணிப் பட்டம் பெற்று நியூ யோர்க் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் பட்டப் பின்படிப்பைத் தொடர்ந்தார். அங்கு 1954இல் முடித்து முனைவர் பட்டத்தைப் பெற்றார்[2].

படிப்பை முடித்துக் கொண்டு 1955 இல் இலங்கை திரும்பி இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறையில் ஆரம்பித்து விரிவுரையாளராக 1960 வரையில் பணியாற்றினார். பின்னர் சில காலம் யுனெஸ்கோவின் அனுசரனையில் தாய்லாந்து, பாங்கொக்கில் இயங்கும் Bangkok Institute for Child Studies என்ற ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார். அதன் பின்னர் 1963 முதல் 1972 வரை கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், 1973 முதல் 1976 வரை சிக்காகோ பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினார்[1]. 1976 இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்[3].

விருதுகள் [தொகு]

இவரது நூல்கள் [தொகு]

  • Sri Lanka: Ethnic Fratricide and the Dismantling of Democracy
  • Buddhism and the Spirit Cults in North-East Thailand. Cambridge University Press, 1970. ISBN 0-521-09958-7.
  • World Conqueror and World Renouncer : A Study of Buddhism and Polity in Thailand against a Historical Background (Cambridge Studies in Social and Cultural Anthropology). Cambridge University Press, 1976. ISBN 0-521-29290-5.
  • Magic, Science and Religion and the Scope of Rationality (Lewis Henry Morgan Lectures). Cambridge University Press, 1990. ISBN 0-521-37631-9.
  • Buddhism Betrayed? : Religion, Politics, and Violence in Sri Lanka (A Monograph of the World Institute for Development Economics Research). University of Chicago Press, 1992. ISBN 0-226-78950-0.
  • Leveling Crowds : Ethnonationalist Conflicts and Collective Violence in South Asia. (Comparative Studies in Religion and Society). University of California Press, 199. ISBN 0-520-20642-8.
  • Edmund Leach: An Anthropological Life. Cambridge University Press, 2002. ISBN 0-521-52102-5.

மேற்கோள்கள் [தொகு]

  1. 1.0 1.1 Anthony, Peterson. "Stanley Tambiah". Anthropology Biography Web. Emuseum @ Minnesota State University, Mankato. பார்த்த நாள் 2007-08-19.
  2. 2.0 2.1 2.2 Gewertz, Ken (1997-10-23). "Stanley Tambiah To Be Awarded Balzan Prize For Groundbreaking Work on Ethnic Violence". Harvard Gazette. http://news.harvard.edu/gazette/1997/10.23/StanleyTambiahT.html. Retrieved 2007-08-19. 
  3. "Harvard Foundation unveils portraits: Six minority faculty and administrators recognized and recognizable". Harvard Gazette. 2005-05-12. http://news.harvard.edu/gazette/2005/05.12/01-portraits.html. Retrieved 2007-08-19. 
  4. "Stanley Jeyaraja Tambiah". Fondazione Internazionale Balzan. பார்த்த நாள் 2007-08-20.
  5. "Honours". Royal Anthropological Institute of Great Britain and Ireland. பார்த்த நாள் 2007-08-19.
  6. "Huxley Memorial Medal and Lecture: Prior Recipients". Royal Anthropological Institute of Great Britain and Ireland. பார்த்த நாள் 2007-08-19.
  7. Gewertz, Ken (1998-08-06). "Stanley Tambiah To Be Awarded Fukuoka Asian Cultural Prize". Harvard Gazette. http://news.harvard.edu/gazette/1998/08.06/StanleyTambiahT.html. Retrieved 2007-08-19. 
  8. "British Academy elects Tambiah". Harvard Gazette. 2000-11-09. http://www.news.harvard.edu/gazette/2000/11.09/03-newsmakers.html. Retrieved 2007-08-19. 
  9. "The Fellowship of the British Academy". The British Academy (2006). பார்த்த நாள் 2007-08-19.

வெளி இணைப்புகள் [தொகு]