விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள் 17

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம். புதிதாக இயற்றப்பட்ட விதிகள் மூலமாக ஏற்பட்ட நிலைமையினால், கீழ்காணும் முந்தைய நிர்வாகிகளை, மேல் விக்கி மூலமாக (இரண்டு ஆண்டுகள் பங்களிப்பு, பல காரணங்களினால், நிர்வாகியாக இருந்துச் சிறப்பாக பணியாற்றியவர்கள், பங்களிக்க இயலாமல் போனதால்), நாம் இழந்துள்ளோம். எனவே, இவர்கள் அனைவரையும் மீண்டும் நிர்வாகிகளாக நியமனம் செய்ய அனைத்துப் பயனர்களும் ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இது, நம் விக்கி வளர கண்டிப்பாக உதவும் என்ற அடைப்படையில் இதை முன் வைக்கிறேன்:

இவர்களைத் தொடர்ப்பு கொள்ள தற்போது என்னால் இயலவில்லை என்றாலும், ஒரு நம்பிக்கை அடிப்படையில் இவர்களுக்கு மீண்டும், வேண்டுகோள் விடுத்தால் நிர்வாகிகளாக ஆக விரும்புவார்கள் என்ற அடைப்படையில் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். இவர்கள் பங்களிக்க வந்ததே தமிழின் மீதான ஆர்வம் என்ற காரணத்தினால் இவர்கள் நிர்வாகிகளாக ஆதரவு அளிக்கும்படி அனைத்துப் பயனர்களையும் கேட்டுக்கொள்கிறேன். நீங்களும் இந்த வேண்டுகோளை ஏற்று மீண்டும் நிர்வாகிகளாகி நம் விக்கி சிறப்படைய பங்களிக்க வருமாறு வேண்டுகிறேன். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 00:26, 2 ஏப்ரல் 2023 (UTC)

👍 விருப்பம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்களை இங்கு காண்பது மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் எண் இல்லாததால் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அன்பான கோரிக்கையுடன் என்னுடைய எண்ணை பகிர்ந்துள்ளேண் 9443394806. --கி.மூர்த்தி (பேச்சு) 00:34, 2 ஏப்ரல் 2023 (UTC)
நன்றி! நந்தகுமார் (பேச்சு) 00:49, 2 ஏப்ரல் 2023 (UTC)
உங்கள் அலைபேசியினைப் பார்க்கவும். நந்தகுமார் (பேச்சு) 00:52, 2 ஏப்ரல் 2023 (UTC)
 ஆதரவு--சத்திரத்தான் (பேச்சு) 00:41, 2 ஏப்ரல் 2023 (UTC)
உங்கள் நோக்கம் நன்னோக்கமே ஆனாலும் நம்பிக்கை அடிப்படையில் அணுக்கத்தைக் கொடுப்பது சரி இல்லை என நினைக்கிறேன். மேல் விக்கியில் நிர்வாக அணுக்கத்தை நீக்குவதற்கு முன்னரே நினைவூட்டல்கள் சென்றிருக்கும். மேலும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் இத்தகைய அணுக்கத்தை அவர்களாகக் கேட்காமல் நாமாகக் கொடுப்பது தவறாகும். அணுக்கம் என்பது பதவியல்ல பொறுப்பு என்பதால் நீக்குவதாகவோ கொடுப்பதாலோ அவர்களின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஒவ்வொரு பயனர்களாக விரும்பும் காலத்தில் மீண்டும் வேண்டுகோள்விடுத்து அணுக்கத்தைப் பெற்றுக் கொள்ளப் பரிந்துரைக்கிறேன். தற்போது ஆர்வமாகப் பங்களிப்பவர்களுக்கு அணுக்கத்தை வழங்குவோம். -நீச்சல்காரன் (பேச்சு) 06:02, 2 ஏப்ரல் 2023 (UTC)
உங்களது வருகை மகிழ்ச்சி. நீங்கள் மேலே குறிப்பிட்டவர்களில் பலர் ஆறு, ஏழு ஆண்டுகளாக ஒரு தொகுப்புகளைக் கூடச் செய்யவில்லை. இது தற்போதைய நிர்வாகிகளின் கடந்த ஆண்டு செயல்பாடு. எனவே //தற்போது ஆர்வமாகப் பங்களிப்பவர்களுக்கு அணுக்கத்தை வழங்குவோம்// எனும் கருத்தினை வரவேற்கிறேன். நன்றிஸ்ரீதர். ஞா (✉) 07:13, 2 ஏப்ரல் 2023 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 03:18, 4 ஏப்ரல் 2023 (UTC)
👍 விருப்பம்--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 11:04, 4 ஏப்ரல் 2023 (UTC)
நீச்சல்காரன் கருத்துடன் உடன்படுகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் பெயரளவில் இல்லாமல் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் முனைப்பாக எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்ற கணக்கு நமக்கு இருப்பதும், நம்முடைய வளங்களைத் திட்டமிட உதவும். நன்றி. --இரவி (பேச்சு) 06:23, 11 ஏப்ரல் 2023 (UTC)

விக்கிப்பீடியா:விக்கி நிர்வாகிகள் பள்ளி என்ற முறை இருப்பதால், நிர்வாக அணுக்கத்தை கொடுத்து, வினைத்திறனை மதிப்பீடு செய்தல் அவசியம். கடந்த முறை அணுக்கம் பெற்றவர்களில் சிலர் அதனை எதற்காகப் பெற்றனர் என்பது விளங்கவில்லை.--AntanO (பேச்சு) 13:30, 12 ஏப்ரல் 2023 (UTC)

நடப்பு வேண்டுகோள்கள்1[தொகு]

வணக்கம். நேரடியாக இவர்களைத் தொடர்ப்பு கொள்ள தற்போது என்னால் இயலவில்லை என்றாலும், கீழ்கண்டவர்களுக்கு விருப்பம் இருந்தால், இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதாக இங்குத் தெரிவித்தால் (கீழே), பயனர்களின் வாக்கெடுப்பிற்கு பின் தேவையான வாக்குகளைப் பெற்றவர்கள் நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள், நிர்வாகிகளாகி நம் விக்கி சிறப்படைய பங்களிக்க வருமாறு வேண்டுகிறேன். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 03:36, 4 ஏப்ரல் 2023 (UTC)

சத்திரத்தான்[தொகு]

@சத்திரத்தான்:

ஸ்ரீதர்[தொகு]

@Sridhar G:

மகாலிங்கம்[தொகு]

@TNSE Mahalingam VNR:

பாலு[தொகு]

(தேர்தல் ஆரம்ப நாள்: 4 ஏப்ரல் 2023 முடியும் நாள்:10 ஏப்ரல் 2023 ஆதரவு:8 எதிர்ப்பு:0 நடுநிலை:0)

நியமனம்[தொகு]

@Balu1967: விக்கிப்பீடியாவில் 4,857 கட்டுரைகளை உருவாக்கியுள்ளார். 27,145 தொகுப்புகளைச் செய்துள்ளார். விக்கிமூலம், விக்கிப்பீடியா பயிலரங்குகளை சிறப்பாக ஒருங்கிணைத்துள்ளார்.ஆசிரியர் கட்டுரைகள் , கூகுள் மொழியாக்கக் கட்டுரைகள் உட்பட கட்டுரைகளை செம்மைப்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இவருக்கு நிர்வாக அனுக்கம் வழங்குவதன் மூலம் விக்கியின் வளர்ச்சிக்கு உதவும் என்பதால் பாலு அவர்களை நிர்வாகியாக முன்மொழிகிறேன். நன்றி-- ஸ்ரீதர். ஞா (✉) 13:44, 4 ஏப்ரல் 2023 (UTC)

நியமனம் ஏற்பு[தொகு]

நன்றி ஸ்ரீதர். தமிழ் விக்கிப்பீடியாவில் மேலும் கூடுதலாகப் பங்களிப்பதற்கு நிர்வாகி என்ற அணுக்கம் கூடுதல் வசதியாக இருக்கும் என்ற காரணத்தால் நியமனத்தை ஏற்கிறேன்--Balu1967 (பேச்சு) 02:31, 5 ஏப்ரல் 2023 (UTC)

நிர்வாக அணுக்கத்தை தொடங்க விரும்பும் காலம்[தொகு]

ஆதரவு[தொகு]

  1. --நந்தகுமார் (பேச்சு) 13:47, 4 ஏப்ரல் 2023 (UTC)
  2. ----தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:37, 5 ஏப்ரல் 2023 (UTC)
  3. --கி.மூர்த்தி (பேச்சு) 06:52, 6 ஏப்ரல் 2023 (UTC)
  4. --சா. அருணாசலம் (பேச்சு) 08:15, 6 ஏப்ரல் 2023 (UTC)
  5. --கு. அருளரசன் (பேச்சு) 09:20, 6 ஏப்ரல் 2023 (UTC)
  6. --மகாலிங்கம் இரெத்தினவேலு--TNSE Mahalingam VNR (பேச்சு) 13:21, 6 ஏப்ரல் 2023 (UTC)
  7. --தாமோதரன் (பேச்சு) 09:53, 7 ஏப்ரல் 2023 (UTC)
  8. --AntanO (பேச்சு) 12:52, 10 ஏப்ரல் 2023 (UTC)

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

கேள்விகளும் கருத்துகளும்[தொகு]

  1. அதிவேகமாகக் கட்டுரைகளை உருவாக்கி, சிறந்த பங்களிப்பினை வழங்கி வரும் நீங்கள் இந்த அணுக்கத்தின் மூலம் தொடர் பங்களிப்பு குறையாதா? மேலும் உங்களது கட்டுரை ஆக்கத்தின் போதோ இயல்பான தொகுப்பின் போதோ நிர்வாக அணுக்கமில்லாததால் சிரமப்பட்டதுண்டா? பொதுவாகவே பேச்சுப் பக்கங்களில் உரையாடல்களில் உங்கள் கருத்துக்களைக் காண்பது அரிதெனும் போது நிர்வாக அணுக்கத்தைக் கொண்டு எவ்வாறு உரையாடிப் பிணக்குகளை தீர்ப்பீர்கள்? -நீச்சல்காரன் (பேச்சு) 18:49, 6 ஏப்ரல் 2023 (UTC)
  • நிர்வாக அணுக்கம் கிடைத்தால் கூடுதலாக பங்களிப்பு இருக்குமே தவிர குறையாது.
  • நிர்வாக அணுக்கமில்லாததால் சிரமப்பட்டதில்லை.
  • பேச்சுப் பக்கங்களில் தேவையானபோது கருத்துக்களை எழுதி வந்துள்ளேன். தொடர்ந்து திட்டம் நோக்கிய ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் பங்கெடுத்து வந்துள்ளேன். எனவே, விக்கி கொள்கைகளின் அடிப்படையில் தேவையான இடங்களில் துணிவான நிலைப்பாட்டை எடுக்கமுடியும் என நினைக்கிறேன்.
  • நிர்வாக அணுக்கம் அளித்தால் விக்கியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும், சீரான விக்கிநடப்புக்கும் கூடுதலாகப் பங்களிப்பேன். மேலும், விக்கி துப்பரவு பணிகளில் இன்னும் அதிகளவில் ஈடுபட முயல்வதுடன் ஏற்கனவே இருக்கும் நிருவாகிகளின் அதிக சுமைகளை குறைக்க முயற்சிக்கிறேன்.

−முன்நிற்கும் கருத்து Balu1967 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.


முடிவு[தொகு]

@Balu1967: வாக்கெடுப்புக் காலத்தில் பெற்ற 8-0-0 வாக்குகள் அடிப்படையில் நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். வாழ்த்துகள். உங்கள் நிருவாக அணுக்கம் தொடங்கும் காலம் விரைவில் தெரிவிக்கப்படும். நன்றி. -- சுந்தர் \பேச்சு 04:11, 19 ஏப்ரல் 2023 (UTC)

அரிஅரவேலன்[தொகு]

(தேர்தல் ஆரம்ப நாள்: 7 ஏப்ரல் 2023 முடியும் நாள்:13 ஏப்ரல் 2023 ஆதரவு:3 எதிர்ப்பு:3 நடுநிலை:1)

நியமனம்[தொகு]

அரிஅரவேலன் தமிழ் விக்கிப்பீடியாவில் 2012 ஆம் ஆண்டு முதல் பங்களித்து வரும் இளைய பயனர் (ஒப்பீட்டு அளவுகோல்). இவர் அரசியல் கட்டுரைகளை எழுதுவதில் மிகவும் வல்லவர். இவர், 378 புதிய பக்கங்களை உருவாக்கி உள்ளார். இதுவரையில் 2,989 பக்கங்களில் பங்களித்துள்ளார். தமிழ் ஆர்வம் மிக்கவர் (ஒப்பீட்டு அளவுகோல்). இவருக்கு நிர்வாகியாகப் பொறுப்பளிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவின் பணிகளைத் திறம்பட ஆற்றுவார் என்று நம்புகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 05:16, 7 ஏப்ரல் 2023 (UTC)

நியமனம் ஏற்பு[தொகு]

👍 விருப்பம் தங்களின் நம்பிக்கைக்கு நன்றி நந்தகுமார். நியமனத்தை ஏற்கிறேன்.

நிர்வாக அணுக்கத்தை தொடங்க விரும்பும் காலம்[தொகு]

ஆதரவு[தொகு]

  1. --பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 00:52, 8 ஏப்ரல் 2023 (UTC)
    நன்றி அரிஅரவேலன் (பேச்சு) 14:11, 12 ஏப்ரல் 2023 (UTC)
  2. --நந்தகுமார் (பேச்சு) 08:52, 8 ஏப்ரல் 2023 (UTC)
    நன்றி அரிஅரவேலன் (பேச்சு) 14:12, 12 ஏப்ரல் 2023 (UTC)
  3. --சா. அருணாசலம் (பேச்சு) 17:26, 8 ஏப்ரல் 2023 (UTC)
    நன்றி அரிஅரவேலன் (பேச்சு) 14:12, 12 ஏப்ரல் 2023 (UTC)

நடுநிலை[தொகு]

பதிப்புரிமை என்பது சிக்கலானதே. விக்கிமீடியத்திட்டங்கள் பன்னாட்டு பதிப்புரிமைச் சட்டங்களைக் கொண்ட கட்டகம். இவரால் எத்தகைய கட்டுரைகளில் இச்சிக்கல் எழுந்துள்ளது என நான் ஆயவில்லை. பதிப்புரிமை குறித்து CIS-A2K அளித்த பயிற்சியில் பங்கு கொண்டும் அதுகுறித்த புரிந்துணர்வு எனக்கு வர சில ஆண்டுகள் தேவைப்பட்டன. அதன் பிறகே, பொதுவகத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்த நாட்டுடைமை நூல்களைப் பேணும் முறைகளை, பிற மொழியினருடன் இணைந்து(பிரெஞ்சு, தெலுங்கு, வங்க மொழி) உருவாக்க முடிந்தது. அதுபோல இவருக்கும் காலம் தேவைப்படலாம். --உழவன் (உரை) 14:04, 10 ஏப்ரல் 2023 (UTC)

தொடக்க காலத்தில் இணையத்திலிருந்து பெற்ற சில ஒளிப்படங்களை (ஈ.வெ.கி.சம்பத் படம் உள்ளிட்ட சில) பதிவேற்றிய பொழுது பதிப்புரிமை பற்றிய வினாகள் எழுந்தன. தற்பொழுது பதிப்புரிமை பற்றி கற்றுக்கொண்டிருக்கிறேன். - அரிஅரவேலன் (பேச்சு) 14:11, 12 ஏப்ரல் 2023 (UTC)

எதிர்ப்பு[தொகு]

  1. --AntanO (பேச்சு) 13:04, 10 ஏப்ரல் 2023 (UTC)
    நன்றி அரிஅரவேலன் (பேச்சு) 14:12, 12 ஏப்ரல் 2023 (UTC)
  2. --சிறந்த பங்களிப்பாளர் எனினும் விக்கிப்பீடிய நடைமுறைகளைக் இன்னும் கற்றுக் கொண்டு அணுக்கம் பெறலாம். நீச்சல்காரன் (பேச்சு) 15:42, 12 ஏப்ரல் 2023 (UTC)
  3. பராமரிப்புப் பணிகள் அல்லது குமுகாயத்துடன் இணைந்து பணியாற்றுதல் ஆகியவற்றை இதுவரை செய்யவில்லை எனும் காரணத்தினால் இந்த நியமனத்தை எதிர்க்கிறேன். விக்கிப்பீடியா எனும் கலைக்களஞ்சியத்தின் கூறுகளை புரிந்துகொள்ள வேண்டும் எனும் எதிர்பார்ப்பும் ஒரு காரணமாகும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:34, 13 ஏப்ரல் 2023 (UTC)

கேள்விகளும் கருத்துகளும்[தொகு]

வணக்கம் திரு. @அரிஅரவேலன்:

  1. விக்கிப்பீடியா எனும் உலகளாவிய கலைக்களஞ்சியத்தின் ஒரு பகுதியான தமிழ் விக்கிப்பீடியா குறித்த உங்களின் புரிதலை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
  2. தங்களுக்கு நிர்வாக அணுக்கம் அளிக்கப்பட்டால், அதன் மூலமாக எவ்வகையானப் பணிகளைச் செய்ய இயலும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதனைத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:13, 9 ஏப்ரல் 2023 (UTC)
1.இதில் ஒருவர் நேரடியாகக் கட்டுரை எழுத இயலாது. மாறாக உரிய சான்றடைவுகளோடு தரவுகளைத் திரட்டி, தொகுத்து, பகுத்து, சீர்படுத்தி, உரிய தரவுகளோடு தமிழிமொழியில் வழங்கும் களஞ்ச்சியத்தர்வுத்தளமே தமிழ் விக்கிபீடியா.
2. நீக்கப்பட்ட கட்டுரைகளின் வரலாற்றை நோக்கி, போதிய சான்றுகள் இல்லாததால் நீக்கப்பட்ட கட்டுரைகளில் உரிய சான்றுகளைத் தேடிச் சேர்த்து அவற்றை மீள்வித்தல்.
3. பிழைசெய்துகற்றல் (Learning through trail and error) என்பது ஒரு கற்றல்முறை. அவ்வகையிலேயே படிமங்கள் பற்றிய பதிப்புரிமையைக் கற்றுககொண்டிருக்கிறேன். அரிஅரவேலன் (பேச்சு) 14:41, 12 ஏப்ரல் 2023 (UTC)

வணக்கம் திரு. @அரிஅரவேலன்: தங்களின் பதில்களுக்கு நன்றி. எனது கருத்துகளை கீழே பதிவு செய்துள்ளேன்:

  1. கலைக்களஞ்சியத்திற்கு சான்றுகள் முக்கியம் என்பதையே நீங்களும் கருதுகிறீர்கள். ஆனால், சான்றுகள் குறித்த உங்களின் நிலைப்பாட்டில் முரண்கள் இருந்துள்ளதை கவனித்துள்ளேன். சான்றுகள் குறித்த பிரச்சனைகளால், கட்டுரை உருவாக்கத்தையே நிறுத்திவிட்டதாகவும் ஒருமுறை குறிப்பிட்டுள்ளீர்கள். இவ்வித நிலைப்பாட்டுடன் ஒருவர் நிர்வாகப் பொறுப்பினை எவ்விதம் ஏற்று நடத்த இயலும் எனும் ஐயம் என்னிடம் உள்ளது.
  2. விக்கிப்பீடியாவில் நிர்வாகி அல்லது நிர்வாகம் என்பது பதவியன்று; அது ஒரு பொறுப்பு. நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு கூடுதல் அணுக்கங்கள் தரப்படுகின்றன, அவ்வளவே. அந்தப் பொறுப்பினை ஏற்பதற்கு முன்னர், அது சார்ந்த பணிகளை ஏற்கனவே செய்திருந்தால்தான் / முன்னெடுத்திருந்தால்தான் நிர்வாகப் பொறுப்பினை திறம்பட செய்ய இயலும். இப்பணிகளை நீங்கள் செய்திருப்பதாக எங்குமே காண இயலவில்லை.
  3. நீங்கள் எழுதிய கட்டுரையின் உள்ளடக்கங்கள் குறித்து தங்களிடம் எழுப்பப்படும் கேள்விகள், ஐயங்களுக்கு பதிலளிப்பதை நீங்கள் அண்மைக்காலங்களில் தவிர்ப்பதை கவனித்துள்ளேன். எடுத்துக்காட்டு: பேச்சு:உலகத் திருக்குறள் மாநாடு. இத்தகைய நிலைப்பாட்டுடன் ஒருவர் நிர்வாகியாக இங்கு எப்படி செயல்பட இயலும்?
  4. நிர்வாகியாக செயல்பட இருப்பவர் தொடர்ச்சியான பணிகள் வாயிலாக விக்கியின் இருப்பையும், தரத்தையும் நிலைநிறுத்த வேண்டும். இதனைச் செய்வதற்கு அவர் அச்செயல்களில் ஏற்கனவே ஆர்வத்துடன் ஈடுபட்டிருக்க வேண்டும். பராமரிப்பு, புதிய பயனர்களுக்கு வழிகாட்டல், தீக்குறும்புகளைக் களைதல், தமிழ் விக்கிப்பீடியா குமுகாயத்துடன் கலந்துரையாடல், முன்னெடுப்புகளில் பங்காற்றுதல், ஆலோசனைகள் வழங்குதல் ஆகியன குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சில ஈடுபாடுகள் ஆகும். நிர்வாகிப் பொறுப்பு ஏற்க இருப்பவரிடம் இச்செயல்பாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

எனவே, எனது எதிர்ப்பு வாக்கினை பதிவுசெய்ய இருக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:20, 13 ஏப்ரல் 2023 (UTC)

மிக்க நன்றி அரிஅரவேலன் (பேச்சு)

______________________________________________________________

  1. பதிப்புரிமை, குறிப்பிடத்தக்கமை போன்ற விக்கிப்பீடியாவின் முக்கிய பகுதிகளில் உங்கள் புரிந்துணர்வு ஃ தெளிவில் மாற்றுக்கருத்து இருப்பதாக உணர்ந்துள்ளேன். இது பற்றிய உங்கள் பதில் என்ன? தற்போதுகூட நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளிலும், பதிவேற்றிய படிமங்களிலும் சிக்கல் உள்ளது. நீங்கள் நிர்வாகியாக தெரிவு செய்யப்பட்டால் அவற்றை எவ்வாறு அணுகுவீர்கள்?

_______________________________________________________________

குறிப்பு: இங்குள்ள கேள்விகளுக்கு கட்டாயம் பதில் அளிக்கவும். பதில் அளிக்காமல் நிர்வாகத் தெரிவு அடுத்த கட்டம் செல்லாது. தற்போதைக்கு எதிர்ப்பு வாக்கைப் பதிவுசெய்கிறேன். உங்களிடம் விக்கி கொள்கை தொடர்பில் தெளிவாக பதில் கிடைத்தால், அதனை மாற்றிவிடுவேன். --AntanO (பேச்சு) 13:03, 10 ஏப்ரல் 2023 (UTC)

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 00:22, 12 ஏப்ரல் 2023 (UTC)

முடிவு[தொகு]

பயனர் அரிஅரவேலன் பெற்றுள்ள வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் (3-3-1) இப்போது அவருக்கு நிருவாகி அணுக்கம் வழங்கவியலாது. -- சுந்தர் \பேச்சு 04:36, 17 ஏப்ரல் 2023 (UTC)

மகாலிங்கம்[தொகு]

(தேர்தல் ஆரம்ப நாள்: 4 ஏப்ரல் 2023 முடியும் நாள்:10 ஏப்ரல் 2023 ஆதரவு:13 எதிர்ப்பு:0 நடுநிலை:0). தேர்தல் நிறைவு பெற்ற நாள்: 10 ஏப்ரல் 2023. - செல்லாத வாக்கு: 1.

நியமனம்[தொகு]

@TNSE Mahalingam VNR: விக்கிப்பீடியாவில் 1207 கட்டுரைகளை உருவாக்கி தொடர்ந்து பங்களித்து வந்துள்ளார். விக்கிபீடியா தொடர்பாக இணைய வழி, நேர்முகப் பயிலரங்குகளில் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளார். ஆசிரியர் கட்டுரைகள் , கூகுள் மொழியாக்கக் கட்டுரைகள் உட்பட கட்டுரைகளை செம்மைப்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இவருக்கு நிர்வாக அனுக்கம் வழங்குவது விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். எனவே, மகாலிங்கம் அவர்களை நிர்வாகியாக முன்மொழிகிறேன். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 13:19, 4 ஏப்ரல் 2023 (UTC)

நியமனம் ஏற்பு[தொகு]

நன்றி ஸ்ரீதர். தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல்வேறு பணிகளில் முழுமையாகப் பங்களிப்பதற்கு நிர்வாகி என்ற அணுக்கம் கூடுதல் வசதியாக இருக்கும் என்ற காரணத்தால் நியமனத்தை ஏற்கிறேன். --TNSE Mahalingam VNR (பேச்சு) 13:26, 4 ஏப்ரல் 2023 (UTC)

நிர்வாக அணுக்கத்தை தொடங்க விரும்பும் காலம்[தொகு]

ஆதரவு[தொகு]

  1. --நந்தகுமார் (பேச்சு) 13:40, 4 ஏப்ரல் 2023 (UTC)
  2. --பயனர்: சத்திரத்தான் --சத்திரத்தான் (பேச்சு) 13:53, 4 ஏப்ரல் 2023 (UTC)
  3. ----தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:37, 5 ஏப்ரல் 2023 (UTC)
  4. கலைக்களஞ்சியத்தை வளர்தெடுப்பதில், ஆசிரியர்கள் உள்ளிட்ட அறிஞர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இதனால்தான் தமிழ் விக்கிப்பீடியாவின் வெவ்வேறு காலகட்டங்களில் ஆசிரியர்களின் பங்களிப்பிற்காக தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அவ்வகையில், தமிழ் விக்கிப்பீடியாவில் அறிமுகமாகி, தொடர்ந்து குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினை செய்துவருபவர் திரு. மகாலிங்கம். ஒரு நிர்வாகிக்கு இருக்கவேண்டிய 'கலைக்களஞ்சியம் குறித்தான புரிதல்' இவருக்கு இருப்பதாகக் கருதுகிறேன். உரிய பண்புப் பாங்கினையும் திரு. மகாலிங்கம் கொண்டிருப்பதால், இவருக்கு எனது ஆதரவினைத் தெரிவிக்கின்றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:10, 5 ஏப்ரல் 2023 (UTC)
  5. --கி.மூர்த்தி (பேச்சு) 06:51, 6 ஏப்ரல் 2023 (UTC)
  6. --சா. அருணாசலம் (பேச்சு) 08:15, 6 ஏப்ரல் 2023 (UTC)
  7. --கு. அருளரசன் (பேச்சு) 09:19, 6 ஏப்ரல் 2023 (UTC)
  8. கண்காணிக்கும் அனுபவமிருப்பதாலும் நிர்வாகப் பணிக்கான அணுகுமுறை இருப்பதாலும் நிர்வாக அணுக்கத்தை உரியமுறையில் பயன்படுத்துவார் எனக் கருதுகிறேன் -நீச்சல்காரன் (பேச்சு) 19:01, 6 ஏப்ரல் 2023 (UTC)
  9. பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 05:37, 7 ஏப்ரல் 2023 (UTC)
  10. --தாமோதரன் (பேச்சு) 09:52, 7 ஏப்ரல் 2023 (UTC)
  11. --Kanags \உரையாடுக 23:13, 7 ஏப்ரல் 2023 (UTC)
  12. --AntanO (பேச்சு) 12:51, 10 ஏப்ரல் 2023 (UTC)
  13. நடுநிலையாளர். தமிழ்நாட்டு பள்ளிக் கல்வியியல் சூழலை எனக்கு உணர்த்தியவர். விக்கிமூலம் குறித்து எனக்குள் இருந்த தயக்கங்களை நீக்கியவர்களில் ஒருவர்.உழவன் (உரை) 13:28, 10 ஏப்ரல் 2023 (UTC)
  14. --இரவி (பேச்சு) 06:16, 11 ஏப்ரல் 2023 (UTC)

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

கேள்விகளும் கருத்துகளும்[தொகு]

முடிவு[தொகு]

@TNSE Mahalingam VNR: வாக்கெடுப்புக் காலத்தில் பெற்ற 13-0-0 வாக்குகள் அடிப்படையில் நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். வாழ்த்துகள். உங்கள் நிருவாக அணுக்கம் தொடங்கும் காலம் விரைவில் தெரிவிக்கப்படும். நன்றி. -- சுந்தர் \பேச்சு 04:40, 17 ஏப்ரல் 2023 (UTC)


நம்பிக்கை வைத்து ஆதரவளித்த நிர்வாகிகள், மூத்த பயனர்கள், தமிழ் விக்கிப்பீடியா சமூக நண்பர்கள், ஆதரவான கருத்துகளைத் தெரிவித்தவர்கள் அனைவருக்கும் நன்றி.--TNSE Mahalingam VNR (பேச்சு) 14:00, 17 ஏப்ரல் 2023 (UTC)

ஸ்ரீதர்[தொகு]

(தேர்தல் ஆரம்ப நாள்: 4 ஏப்ரல் 2023 முடியும் நாள்:11 ஏப்ரல் 2023 ஆதரவு:13 எதிர்ப்பு:0 நடுநிலை:0).- செல்லாத வாக்கு: 0.

நியமனம்[தொகு]

ஸ்ரீதர் தமிழ் விக்கிப்பீடியாவில் 2017 ஆம் ஆண்டு முதல் பங்களித்து வரும் துடிப்புள்ள இளைய பயனர். இவர் பல்வேறு போட்டிகளில் தனது தனிப்பட்ட விரைவான பங்களிப்பு மூலம் தமிழ் விக்கிப்பீடியா சிறப்பான இடத்தை வெல்ல துணைபுரிந்துள்ளார். துப்புரவு, பரப்புரை போன்ற பணிகளிலும் பணிமனைகளை நடத்துவதிலும் இணைய வழியிலும் நேரடியாகவும் சிறப்பான பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். இவருக்கு நிர்வாகியாகப் பொறுப்பளிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவின் பணிகளைத் திறம்பட ஆற்றுவார் என்று நம்புகிறேன். --TNSE Mahalingam VNR (பேச்சு) 02:35, 5 ஏப்ரல் 2023 (UTC)

நியமனம் ஏற்பு[தொகு]

பொறுப்புணர்ந்து செயல்படுவேன் எனும் நம்பிக்கை இருப்பதால் ஏற்கிறேன். நன்றி - ஸ்ரீதர். ஞா (✉) 15:35, 5 ஏப்ரல் 2023 (UTC)

நிர்வாக அணுக்கத்தை தொடங்க விரும்பும் காலம்[தொகு]

ஆதரவு[தொகு]

  1. --வசந்தலட்சுமி (பேச்சு) 03:08, 5 ஏப்ரல் 2023 (UTC)
  2. ----தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:37, 5 ஏப்ரல் 2023 (UTC)
  3. கலைக்களஞ்சியத்தை வளர்தெடுப்பதில், ஆசிரியர்கள் உள்ளிட்ட அறிஞர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இதனால்தான் தமிழ் விக்கிப்பீடியாவின் வெவ்வேறு காலகட்டங்களில் ஆசிரியர்களின் பங்களிப்பிற்காக தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அவ்வகையில், தமிழ் விக்கிப்பீடியாவில் அறிமுகமாகி, தொடர்ந்து குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினை செய்துவருபவர் திரு. சிறீதர். ஒரு நிர்வாகிக்கு இருக்கவேண்டிய 'கலைக்களஞ்சியம் குறித்தான புரிதல்' இவருக்கு இருக்கிறது. தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காக களத்தில் இறங்கி உழைத்தல், முன்னெடுப்புகளைப் பரிந்துரைத்து ஒருங்கிணைத்தல், தானறிந்த தொழினுட்பங்களைப் பயன்படுத்தி வேலைகளைத் துரிதப்படுத்துதல், தொடர்ந்து கற்று செயலாக்கம் செய்யும் முனைப்பு ஆகிய குணநலன்களுக்காக திரு. சிறீதர் அவர்களுக்கு எனது ஆதரவினைத் தெரிவிக்கின்றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:53, 6 ஏப்ரல் 2023 (UTC)
  4. --நந்தகுமார் (பேச்சு) 06:19, 6 ஏப்ரல் 2023 (UTC)
  5. --கி.மூர்த்தி (பேச்சு) 06:52, 6 ஏப்ரல் 2023 (UTC)
  6. --சா. அருணாசலம் (பேச்சு) 08:15, 6 ஏப்ரல் 2023 (UTC)
  7. --கு. அருளரசன் (பேச்சு) 09:20, 6 ஏப்ரல் 2023 (UTC)
  8. நிர்வாக அணுக்கம் தேவைப்படக் கூடிய துப்புரவுப் பணிகளைத் தொடர்ந்து செய்துவருகிறார். நீச்சல்காரன் (பேச்சு) 19:08, 6 ஏப்ரல் 2023 (UTC)
  9. பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 05:36, 7 ஏப்ரல் 2023 (UTC)
  10. --தாமோதரன் (பேச்சு) 09:48, 7 ஏப்ரல் 2023 (UTC)
  11. --Kanags \உரையாடுக 23:13, 7 ஏப்ரல் 2023 (UTC)
  12. --AntanO (பேச்சு) 12:52, 10 ஏப்ரல் 2023 (UTC)
  13. --இரவி (பேச்சு) 06:15, 11 ஏப்ரல் 2023 (UTC)

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

கேள்விகளும் கருத்துகளும்[தொகு]

முடிவு[தொகு]

@Sridhar G: வாக்கெடுப்புக் காலத்தில் பெற்ற 13-0-0 வாக்குகள் அடிப்படையில் நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். வாழ்த்துகள். உங்கள் நிருவாக அணுக்கம் தொடங்கும் காலம் விரைவில் தெரிவிக்கப்படும். நன்றி. -- சுந்தர் \பேச்சு 04:41, 17 ஏப்ரல் 2023 (UTC)

அனைவருக்கும் நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 09:46, 17 ஏப்ரல் 2023 (UTC)

சத்திரத்தான்[தொகு]

(தேர்தல் ஆரம்ப நாள்: 6 ஏப்ரல் 2023 முடியும் நாள்:12 ஏப்ரல் 2023 ஆதரவு: 9 எதிர்ப்பு:0 நடுநிலை:0).- செல்லாத வாக்கு: 0.

நியமனம்[தொகு]

சத்திரத்தான் (பிச்சைமுத்து மாரியப்பன்) தமிழ் விக்கிப்பீடியாவில் 2020 ஆம் ஆண்டு முதல் பங்களித்து வரும் இளைய பயனர் (ஒப்பீட்டு அளவுகோல்). இவர் அறிவியல் கட்டுரைகளை எழுதுவதில் மிகவும் வல்லவர். இவர், 5,918 புதிய பக்கங்களை உருவாக்கி உள்ளார். இதுவரையில் 10,048 பக்கங்களில் பங்களித்துள்ளார். ஒரு நாளைக்கு சராசரியாக 29 முறை பங்களித்து வருகிறார். இவருக்கு நிர்வாகியாகப் பொறுப்பளிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவின் பணிகளைத் திறம்பட ஆற்றுவார் என்று நம்புகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 15:23, 6 ஏப்ரல் 2023 (UTC)

நியமனம் ஏற்பு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் எனது பங்களிப்பின் அடிப்படையில் என் மீது நம்பிக்கை கொண்டு, அடுத்த நிலைக்குப் பரிந்துரைக்கும் அனுபவமிக்க பயனர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன், தொகுப்புகளை உருவாக்கும் அளவிற்கு, தொகுப்புகளை மேம்படுத்தும் நோக்கிலும் என்னுடைய பங்களிப்பு தொடரும். நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 17:06, 6 ஏப்ரல் 2023 (UTC)

நிர்வாக அணுக்கத்தை தொடங்க விரும்பும் காலம்[தொகு]

ஆதரவு[தொகு]

  1. பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 05:37, 7 ஏப்ரல் 2023 (UTC)
  2. --தாமோதரன் (பேச்சு) 09:55, 7 ஏப்ரல் 2023 (UTC)
  3. --சா. அருணாசலம் (பேச்சு) 00:30, 8 ஏப்ரல் 2023 (UTC)
  4. --நந்தகுமார் (பேச்சு) 08:52, 8 ஏப்ரல் 2023 (UTC)
  5. --மிகச்சிறந்த ஆர்வலர். விக்கியின் வழமைகளை முறையாகப் பின்பற்றுபவர். விக்கிப்பீடியாவை வளர்த்தெடுப்பதில் ஆர்வமும் முனைப்பும் மிக்கவர். சிறப்பாகப் பணியாற்றும் வல்லமை மிக்கவர். நிர்வாகி என்ற பொறுப்பில் சிறப்பாகச் செயல்படுவார் என்று நம்பிக்கை உள்ளது. மகாலிங்கம் இரெத்தினவேலு
  6. --கி.மூர்த்தி (பேச்சு) 04:11, 10 ஏப்ரல் 2023 (UTC)
  7. உடன் பணியாற்றும் பயனர்கள் வழங்கும் பரிந்துரைகளை ஏற்று, விக்கியின் நடைமுறைகளைப் பின்பற்றுபவர். தொடர்ந்து கற்று, அவற்றைச் செயல்படுத்த விரும்புபவர். தமிழ் விக்கிப்பீடியாவின் குமுகாயத்துடன் ஒருங்கிணைந்துப் பங்காற்றி, தமிழ் விக்கிப்பீடியாவை வளர்க்க ஆர்வம் கொண்டுள்ளவர். இத்தகு செயல்பாடுகளின் காரணமாக திரு. சத்திரத்தான் அவர்களுக்கு எனது ஆதரவினைத் தெரிவிக்கிறேன். நிர்வாகப் பணிகளை கற்றறிந்து அப்பணியை இவர் செய்வார் என உறுதியாக நம்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:43, 10 ஏப்ரல் 2023 (UTC)
  8. --AntanO (பேச்சு) 12:54, 10 ஏப்ரல் 2023 (UTC)
  9. விக்கியினங்கள் திட்டத்திலும் செயற்படுபவர். பெரும்பாலான ஆங்கில விக்கிப்பீடிய உயிரிய வகைப்பாடு என்பது இற்றைப்படுத்தாமலேயே உள்ளன. ஆனால், தமிழில் இவரின் விலங்கின வகைப்பாடு மிகச்சிறப்பு. தொடர்ந்து பல்வேறு இந்திய விக்கிமூலப் போட்டியிலும் சிறப்பாக செயற்படும் பன்முக விக்கிமீடியப் பங்களிப்பாளர். --உழவன் (உரை) 13:35, 10 ஏப்ரல் 2023 (UTC)

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

கேள்விகளும் கருத்துகளும்[தொகு]

  1. தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களது பங்களிப்பு சிறப்பானது. ஆனால் அதன் அடுத்த நிலையாக நிர்வாக அணுக்கம் என்று ஏன் சொல்ல வேண்டும்? அணுக்கத்தைக் கொண்டு உங்களை மதிப்பிட வேண்டாம். எப்போதும் உங்களது பங்களிப்பு முன்னோடியாக உள்ளது. உங்களின் விக்கி கொள்கை சார்ந்த உரையாடலையோ புதுப் பயனர்களுக்கான வழிகாட்டல் கருத்துக்களையோ நான் பார்க்காததால் இக்கேள்வி எழுகிறது. நிர்வாக அணுக்கத்தைக் கொண்டு என்னென்ன பணிகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள் எனக் கூற இயலுமா? -நீச்சல்காரன் (பேச்சு) 19:48, 6 ஏப்ரல் 2023 (UTC)
வணக்கம். அண்மையில் இணைந்து தொகுப்பில் கவனம் செலுத்தியதால் அதிக அளவில் வழிகாட்டுதலில் பங்கெடுக்கவில்லை என்பது உண்மை. இருப்பினும் கடந்த ஆண்டு நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான (மதுரை) பயிலரங்கின் போது பயிற்சியின் மாணவர்களின் தொகுப்களைத் திருத்தியதில் பங்கேற்று உள்ளேன். விக்கிப்பீடியா குறித்த பரப்புரைகளிலும் ஈடுபட்டுள்ளேன். கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் பங்களிப்பு குறைவாக உள்ளதை மேம்படுத்துவதே எனது நோக்கம். நிர்வாக அணுக்கத்தினால் வழமையான தொகுப்பினைத் தவிரக் கூடுதல் பங்களிப்பினை வழங்க முடியும் என்பது எனது கருத்து. --சத்திரத்தான் (பேச்சு) 00:11, 7 ஏப்ரல் 2023 (UTC)

முடிவு[தொகு]

@சத்திரத்தான்: வாக்கெடுப்புக் காலத்தில் பெற்ற 9-0-0 வாக்குகள் அடிப்படையில் நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். வாழ்த்துகள். உங்கள் நிருவாக அணுக்கம் தொடங்கும் காலம் விரைவில் தெரிவிக்கப்படும். நன்றி. -- சுந்தர் \பேச்சு 04:42, 17 ஏப்ரல் 2023 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா முன்னோடிகள் அனைவருக்கும் என்னுடைய நன்றி. பொறுப்பினை உணர்ந்து செயல்படுவேன். நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 10:37, 17 ஏப்ரல் 2023 (UTC)

சா அருணாசலம்[தொகு]

(தேர்தல் ஆரம்ப நாள்: 7 ஏப்ரல் 2023 முடியும் நாள்:13 ஏப்ரல் 2023 ஆதரவு:9 எதிர்ப்பு:0 நடுநிலை:0)

நியமனம்[தொகு]

சா அருணாசலம் தமிழ் விக்கிப்பீடியாவில் 2015 ஆம் ஆண்டு முதல் பங்களித்து வருபவர். இவர், 22,148 தொகுப்புகளை செய்துள்ளார். இதுவரையில் 7,786 பக்கங்களில் பங்களித்துள்ளார். சுற்றுக்காவல் பணியில் ஆர்வம் மிக்கவர். தொடர்ந்து சுற்றுக்காவலில் ஈடுபட்டு வருகிறார். தீக்குறும்புகளை முன்னிலை ஆக்கி வருகிறார். இவருக்கு நிர்வாகியாகப் பொறுப்பளிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவின் பணிகளைத் திறம்பட ஆற்றுவார் என்று நம்புகிறேன்.--கு. அருளரசன் (பேச்சு) 13:45, 7 ஏப்ரல் 2023 (UTC)

நியமனம் ஏற்பு[தொகு]

👍 விருப்பம் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரது நம்பிக்கைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வேன். நியமனத்தை ஏற்கிறேன். --சா. அருணாசலம் (பேச்சு) 17:41, 7 ஏப்ரல் 2023 (UTC)

நிர்வாக அணுக்கத்தை தொடங்க விரும்பும் காலம்[தொகு]

ஆதரவு[தொகு]

  1. --தாமோதரன் (பேச்சு) 13:58, 7 ஏப்ரல் 2023 (UTC)
  2. --நந்தகுமார் (பேச்சு) 16:24, 7 ஏப்ரல் 2023 (UTC)
  3. --Kanags \உரையாடுக 23:13, 7 ஏப்ரல் 2023 (UTC)
  4. --பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 00:51, 8 ஏப்ரல் 2023 (UTC)
  5. --கி.மூர்த்தி (பேச்சு) 09:01, 8 ஏப்ரல் 2023 (UTC)
  6. --மகாலிங்கம் இரெத்தினவேலு
  7. --AntanO (பேச்சு) 13:04, 10 ஏப்ரல் 2023 (UTC)
  8. --உழவன் (உரை) 13:41, 10 ஏப்ரல் 2023 (UTC)
  9. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:53, 12 ஏப்ரல் 2023 (UTC)

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

கேள்விகளும் கருத்துகளும்[தொகு]

வணக்கம் @சா அருணாசலம்: தங்களுக்கு நிர்வாக அணுக்கம் அளிக்கப்பட்டால், அதன் மூலமாக எவ்வகையானப் பணிகளைச் செய்ய இயலும் என நினைக்கிறீர்கள் என்பதனை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நிர்வாக அணுக்கத்தின் பலனாக எவற்றையெல்லாம் நீங்கள் கருதுகிறீர்கள் என்பதனையும் நீங்கள் கூறலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:14, 9 ஏப்ரல் 2023 (UTC)

@Selvasivagurunathan m: வணக்கம் ஐயா. தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி மற்றும் தரம் இவற்றிற்காக தொடர்ந்து உழைப்பேன். தெரிந்தவை தவிர தெரியாதவற்றை உரையாடல் மூலமாக கலந்து ஆலோசித்து நல்ல முடிவுகளை எடுப்பேன். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 03:23, 10 ஏப்ரல் 2023 (UTC)

@சா அருணாசலம்: நீங்கள் நேரடியாகப் பதிலளிக்கவில்லை என்றாலும், தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நிலைநிறுத்துவதற்குரிய பராமரிப்புப் பணிகளை தொடர்ந்து செய்வீர்கள் என்பதனைத் தெரிவித்துள்ளீர்கள். கட்டுரைகளுக்காக பங்களிப்பதோடு, தமிழ் விக்கிப்பீடியாவை நடத்திச் செல்வது ஒரு நிர்வாகிக்குரிய முக்கியப் பொறுப்பாக பொதுவாக உணரப்படுகிறது. சிறப்பாக பணியாற்றிட எனது வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:52, 12 ஏப்ரல் 2023 (UTC)

நன்றிங்க ஐயா -- சா. அருணாசலம் (பேச்சு) 14:57, 12 ஏப்ரல் 2023 (UTC)


முடிவு[தொகு]

@சா அருணாசலம்: வாக்கெடுப்புக் காலத்தில் பெற்ற 9-0-0 வாக்குகள் அடிப்படையில் நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். வாழ்த்துகள். உங்கள் நிருவாக அணுக்கம் தொடங்கும் காலம் விரைவில் தெரிவிக்கப்படும். நன்றி. -- சுந்தர் \பேச்சு 04:44, 17 ஏப்ரல் 2023 (UTC)

Almighty34[தொகு]

(தேர்தல் ஆரம்ப நாள்: 8 ஏப்ரல் 2023 முடியும் நாள்:14 ஏப்ரல் 2023 ஆதரவு: 9 எதிர்ப்பு:0 நடுநிலை:0)

நியமனம்[தொகு]

தாமோதரன் தமிழ் விக்கிப்பீடியாவில் 2018 முதல் பங்களித்து வருகிறார். இவர், 19,744 தொகுப்புகளை செய்துள்ளார். இதுவரையில் 600 இற்கும் அதிகமான பக்கங்களை உருவாக்கியுள்ளார். குறிப்பாக இவர் சுற்றுக்காவல் பணியிலேயே அதிகம் ஆர்வமாக உள்ளவர். இவர்களைப் போன்றவர்களே நமக்கு அதிகம் தேவை. இவருக்கு நிர்வாகியாக அணுக்கம் அளிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவின் பணிகளை மேலும் திறம்பட ஆற்றுவார் என நம்புகிறேன்.--Kanags \உரையாடுக 23:13, 7 ஏப்ரல் 2023 (UTC)

நியமனம் ஏற்பு[தொகு]

Kanags & Nan அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரது நம்பிக்கைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வேன். இந்த நியமனத்தை ஏற்று அதைக் கற்று செயல்பட விரும்புகிறேன்.--தாமோதரன் (பேச்சு) 01:40, 8 ஏப்ரல் 2023 (UTC)

நிர்வாக அணுக்கத்தை தொடங்க விரும்பும் காலம்[தொகு]

ஆதரவு[தொகு]

  1. --சா. அருணாசலம் (பேச்சு) 00:30, 8 ஏப்ரல் 2023 (UTC)
  2. --பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 00:53, 8 ஏப்ரல் 2023 (UTC)
  3. --நந்தகுமார் (பேச்சு) 03:44, 8 ஏப்ரல் 2023 (UTC)
  4. --Kanags \உரையாடுக 04:45, 8 ஏப்ரல் 2023 (UTC)
  5. --கி.மூர்த்தி (பேச்சு) 09:02, 8 ஏப்ரல் 2023 (UTC)
  6. --AntanO (பேச்சு) 13:05, 10 ஏப்ரல் 2023 (UTC)
  7. --உழவன் (உரை) 13:43, 10 ஏப்ரல் 2023 (UTC)
  8. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:21, 11 ஏப்ரல் 2023 (UTC)
  9. -- ஸ்ரீதர். ஞா (✉) 16:03, 12 ஏப்ரல் 2023 (UTC)

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

கேள்விகளும் கருத்துகளும்[தொகு]

வணக்கம் @Almighty34: தங்களுக்கு நிர்வாக அணுக்கம் அளிக்கப்பட்டால், அதன் மூலமாக எவ்வகையானப் பணிகளைச் செய்ய இயலும் என நினைக்கிறீர்கள் என்பதனை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நிர்வாக அணுக்கத்தின் பலனாக எவற்றையெல்லாம் நீங்கள் கருதுகிறீர்கள் என்பதனையும் நீங்கள் கூறலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:22, 9 ஏப்ரல் 2023 (UTC)

@Selvasivagurunathan m: வணக்கம் ஐயா. நிர்வாக அணுக்கம் பெறுவதன் மூலமாக தவறான பக்கங்களை நீக்குவது, விசமப்பயனர்களைத் தடுப்பது போன்ற பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வது ஏதுவாக இருக்கும் என கருதுகிறேன். இந்த நியமனத்தை ஏற்று அதைக் கற்று செயல்பட விரும்புகிறேன். என்னால் முடிந்தவரை தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பங்களிப்பை வழங்குவேன்--தாமோதரன் (பேச்சு) 05:47, 10 ஏப்ரல் 2023 (UTC)

@Almighty34: பதில்கள் தந்தமைக்கு நன்றி. அனைவரும் பங்களிக்கத்தக்க வகையில் இருக்கும் விக்கிப்பீடியாவை பராமரிப்பது மிகவும் முக்கியம். அந்தப் பணியினை தொடர்ந்து செய்ய விரும்பும் தங்களுக்கு எனது வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:20, 11 ஏப்ரல் 2023 (UTC)

நன்றி ஐயா--தாமோதரன் (பேச்சு) 04:09, 11 ஏப்ரல் 2023 (UTC)


முடிவு[தொகு]

@Almighty34: வாக்கெடுப்புக் காலத்தில் பெற்ற 9-0-0 வாக்குகள் அடிப்படையில் நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். வாழ்த்துகள். உங்கள் நிருவாக அணுக்கம் தொடங்கும் காலம் விரைவில் தெரிவிக்கப்படும். நன்றி. -- சுந்தர் \பேச்சு 04:45, 17 ஏப்ரல் 2023 (UTC)