விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் என்னும் இப்பக்கம், உங்களையோ அல்லது வேறொரு பயனரையோ விக்கிப்பீடியா நிர்வாகியாக்கும்படி(sysop) வேண்டி நியமிக்கும் இடமாகும். நிர்வாகிகளின் பொறுப்பு என்ன, அவர்கள் என்ன செய்வார்கள் என்று அறிய நிர்வாகிகள் பக்கம் சென்று பார்க்கவும். ஆங்கில விக்கியில் வாசிக்க வேண்டியவற்றின் பட்டியலையும் (ஆங்கிலம்) மற்றும் "எப்படி?" வழிகாட்டியையும் பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் நடப்பிலுள்ள நிர்வாகிகளின் பட்டியலுக்கு நிர்வாகிகள் பட்டியலைப் பார்க்கவும்.

பொருளடக்கம்

[தொகு] விதிமுறைகள்

[தொகு] பண்புகள்

விக்கிப்பீடியாவின் கொள்கைகளை அறிந்த, அறிமுகமானவரும், நம்பிக்கைக்குரியவருமான விக்கிப்பீடியா சமுதாய உறுப்பினரொருவருக்கே பொதுவாக நிர்வாகி தகுதி வழங்கப்படுகின்றது. நிர்வாகிகளுக்கு விக்கிப்பீடியா மீது விசேட அதிகாரமெதுவும் இல்லாவிட்டாலும், பல பயனர்களால், விசேடமாகப் புதியவர்களால் விக்கிப்பீடியாவின் தொடர்பாளர்களாகப் பார்க்கப்படுவது காரணமாக, ஓரளவு உயர்ந்த தரத்தில் மதிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் நற்பண்புகள் கொண்டவர்களாகவும், மற்றப் பயனர்களுடன் பழகும் போது நல்ல மதிப்பிடு திறன் மற்றும் பொறுமையைக் கடைப்பிடிப்பவராயும் இருக்க வேண்டும். இத்தகைய பண்புகள் நியமனம் செய்யப்படுபவர்களிடம் உள்ளனவா என்று மற்றவர்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக அவர்கள் போதிய அளவு காலம் விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்து இருந்திருக்க வேண்டும். பெரும்பாலான புதிய நிர்வாகிகள் மூன்று மாதங்களுக்கு மேல் பங்களிப்பு செய்தவர்களாயும், 1000 தொகுப்புகளுக்கு மேல் செய்தவர்களாகவும் இருக்கிறார்கள். நீங்கள் உங்களையே நியமித்துக் கொள்ளலாம். ஆனாலும் மேற்சொன்ன எதிர்பார்ப்புகளை நீங்கள் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்வது நன்று.

[தொகு] நியமன முறை

நிர்வாகி நியமனத்திற்கு நியமிக்கப்படவுள்ளவர்கள் குறித்து பிற பயனர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காகவும், வாக்களிப்பதற்காகவும், நியமனங்கள் ஏழு நாட்கள்வரை கால அவகாசம் கொடுக்கப்படும். பயனர் விருப்பு முடிவு எட்டப்படுமளவுக்குத் தெளிவில்லாதிருப்பின், இக்காலம் அதிகாரி (Bureaucrat) களினால் நீட்டிக்கப்படலாம் (பொதுவாக 80% ஆதரவு எதிர்பார்க்கப்படுகின்றது). போதிய அளவு ஆதரவைப் பெறாது எனத் தெளிவாகத் தெரியும் நியமனங்களை, தொடர்ந்து வரக்கூடிய விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றங்களைத் தவிர்ப்பதற்காக முன்னரே நீக்கி விடலாம். எனினும் பல பயனர்கள் ஒவ்வொரு நாளும் விக்கிப்பீடியாவுக்கு வருவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு போதிய அளவு கால அவகாசம் அளிப்பது விரும்பத்தக்கது. உங்கள் நியமனம் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால், மீண்டும் நியமனம் கோருமுன் போதிய அளவு காலம் விடவும்.

உங்கள் வாக்கை அளிப்பதற்குக் குறிப்பிட்ட நியமிக்கப்பட்டவருடைய பகுதியைத் தொகுக்கவும். சிறிய கருத்தொன்றையும் நீங்கள் அங்கே கொடுக்கலாம், எனினும் கலந்துரையாடல்களும், பிற கருத்துக்கள் மீதான உங்கள் கருத்தும் ஒவ்வொரு நியமனத்தின் கீழும் காணப்படும் "கருத்துக்கள்" பகுதியிலேயே சேர்க்கப்பட வேண்டும். வாக்களிக்கும் போது, தயவுசெய்து நீங்கள் வாக்களிக்கும் நியமனத்தின் மொத்த வாக்குத் தொகையையும் உரியவாறு மாற்றவும். வாக்குத் தொகை மொத்தத்துக்கான குறியீட்டு வடிவம் பின்வருமாறு: (ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை).

அடையாளம் தெரியாத பயனர்கள் நியமிக்கப்படவோ, மற்றவர்களை நியமிக்கவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது. தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதி உண்டு.

[தொகு] படிமுறைகள்

  1. நீங்கள் நியமிக்க விரும்புவர் மேல் குறிப்பிட்டதுக்கு ஏற்ப பொறுப்பு உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.
  2. நீங்கள் நியமிக்க விரும்புபவரிடமிருந்து அனுமதி பெறவும்.
  3. இங்கு புதிய பகுதி ஒன்றில் அவரது பயனர் பெயரை பிரதியிடவும்.
  4. இதன் கீழ் நீங்கள் நியமிக்கும் பயனர் ஏன் ஒரு நல்ல நிர்வாகியாக இருப்பார் என்பதை விளக்கவும். அதன் கீழ் உங்கள் ஒப்பத்தை இடவும்.
  5. குறிப்பு: நியமனங்கள் சம்பந்தப்பட்ட பயனர்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். நீங்கள் ஒரு பயனரை நியமித்தால் அவருடைய பேச்சுப் பக்கத்தில் ஒரு தகவலை எழுதி அவர் இந் நியமனத்தை ஏற்றுக் கொண்டால் இப்பக்கத்தில் பதிலளிக்கும்படி கேட்டுக் கொள்ளவும்.
  6. திகதியை (00:00:00) இடவும். குறைந்தது ஏழு நாட்களுக்கு வாக்கு நடக்கும்.
  7. விக்கிப் பயனர்கள் ஆதரவு/எதிர்ப்பு/கருத்து எனது தமது நிலைப்பாடுகளை முன் வைக்க அழைக்கப்படுவார்கள்.
  8. குறிப்பிடத்தக்க ஆதரவு இருக்கும் பட்சத்தில் அந்தப் பயனர் நிர்வாகியாக இருப்பார்.

[தொகு] முந்தைய வேண்டுகோள்கள்

[தொகு] நடப்பு வேண்டுகோள்கள்

[தொகு] சண்முகம் (மே 18, 2012-மே 25, 2012) (வாக்கு: 22|0|0)

சண்முகம், தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பல்வேறு வகைகளில் பங்களித்து வருகிறார். கட்டுரையாக்கத்துடன் கட்டுரைகளில் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். பகுப்புகள் இணைக்கப்படாத கட்டுரைகளுக்கு ஆட்கேட்டு மூலம் பகுப்புகளை இணைத்து வருகிறார். மொழிபெயர்ப்பு விக்கியில் ஏராளமான சொற்றொடர்களை மொழிபெயர்த்துள்ளார். புதுப்பயனர்களை வரவேற்பதிலும் காப்புரிமை விபரங்கள் தரப்படாத படிமங்கள் பற்றியும் கவனஞ்செலுத்தி வருகிறார். விக்கித் தானுலாவி மூலமும் தொகுப்புகளைச் செய்து வருகிறார். சண்முகத்துக்கு நிருவாக அணுக்கம் அளிப்பது அவர் தனது பணிகளைத் திறம்படச் செய்வதற்கு உதவும். எனவே, சண்முகத்துக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 10:59, 18 மே 2012 (UTC)

நன்றி மதனாஹரன்.. தளப் பராமரிப்பு பணிகளுக்கு இது உதவும் என்பதால் ஏற்றுக்கொள்கிறேன், மேலும் என்னால் இயன்ற அளவு சிறப்பாக பங்களிக்க முயல்வேன்--shanmugam (பேச்சு) 11:11, 18 மே 2012 (UTC)

[தொகு] ஆதரவு

  1. மதனாகரன் (பேச்சு) 10:59, 18 மே 2012 (UTC)
  2. தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:07, 18 மே 2012 (UTC)
  3. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு)11:22, 18 மே 2012 (UTC)
  4. 11:51, 18 மே 2012 (UTC)உழவன்+உரை..
  5. ஸ்ரீகாந்த் (பேச்சு) 11:55, 18 மே 2012 (UTC)
  6. மணியன் (பேச்சு) 13:48, 18 மே 2012 (UTC)
  7. தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:58, 18 மே 2012 (UTC)
  8. கலை (பேச்சு) 15:05, 18 மே 2012 (UTC)
  9. கிருஷ்ணபிரசாத் /உரையாடுக 15:44, 18 மே 2012 (UTC)
  10. கார்த்தி கரூர் 21.33, மே 2012.
  11. மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 16:24, 18 மே 2012 (UTC)
  12. Nan (பேச்சு) 16:56, 18 மே 2012 (UTC)
  13. பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:02, 18 மே 2012 (UTC)
  14. பவுல்-Paul (பேச்சு) 17:05, 18 மே 2012 (UTC)
  15. இந்த நிருவாக அணுக்கம் இன்னும் சிறப்பாகப் பணியாற்ற உதவும் என்பது என் நம்பிக்கை. --Kanags \உரையாடுக 22:14, 18 மே 2012 (UTC)
  16. சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 22:42, 18 மே 2012 (UTC)
  17. சோடாபாட்டில்உரையாடுக 01:37, 19 மே 2012 (UTC)
  18. மாகிர் (பேச்சு) 01:56, 19 மே 2012 (UTC)
  19. --Natkeeran (பேச்சு) 02:56, 19 மே 2012 (UTC)
  20. மயூரநாதன் (பேச்சு) 04:37, 19 மே 2012 (UTC)
  21. --சிவக்குமார் \பேச்சு 07:52, 19 மே 2012 (UTC)
  22. --எஸ்ஸார் (பேச்சு) 08:29, 19 மே 2012 (UTC)
  23. ---பயனர்:Fasly (பேச்சு)--dj fa (பேச்சு) 09:17, 19 மே 2012 (UTC)
  24. --பரிதிமதி (பேச்சு) 10:14, 19 மே 2012 (UTC)

[தொகு] எதிர்ப்பு

[தொகு] நடுநிலை

[தொகு] கருத்து

  • சண்முகம் மிகவும் பயனுள்ள பராமரிப்புப் பணிகளை சீராகச் செய்து வருகிறார். நிர்வாகப் பொறுப்பு வழங்கப்பட்டால் நிச்சயமாக சிறப்பாகப் பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. நானே அவரைப் பரிந்துரைக்க எண்ணியிருந்தேன். தக்க சமயத்தில் பரிந்துரைத்த மதனாஹரனுக்கும் நன்றிகள்.--மணியன் (பேச்சு) 13:52, 18 மே 2012 (UTC)
நன்றி மணியன். நிச்சயம் தங்கள் நம்பிக்கைக்கு ஏற்றவாறு பங்களிப்பேன்--சண்முகம் (பேச்சு) 15:11, 18 மே 2012 (UTC)

[தொகு] கேள்விகள்

[தொகு] நற்கீரனின் கேள்விகள்

பின்வரும் கேள்விகளுக்கு பதில் தந்து உதவ முடியுமா. நன்றி.

  • தமிழ் விக்கிப்பீடியாவில் நாம் இன்னும் மேலும் சிறப்பாகச் செய்யக் கூடிய மூன்று விடயங்களைக் கூற முடியுமா?
  • தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகள் எதிர்நோக்கும் முக்கிய சிக்கல்கள் எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
  • புதுப் பயனர் வந்து ஒருவரிக் கட்டுரைளை இடுகிறார். இதை எவ்வாறு கையாள்வீர்கள்?

--Natkeeran (பேச்சு) 01:17, 19 மே 2012 (UTC)

பதில்கள்

  1. அனைத்து விதமான கொள்கை மற்றும் வழிகாட்டுதல் பக்கங்களையும் தமிழ் விக்கிக்கேற்ப தமிழில் உருவாக்க வேண்டும். ஏற்கனவே முக்கியமான கொள்கைகள் இருந்தாலும் பலவற்றிற்கு ஆங்கில விக்கியையே நாட வேண்டியுள்ளது.
  2. ஏற்கனவே நடந்த உரையாடல்படி கட்டுரைகளை மேம்படுத்துதல் மற்றும் ஆதாரங்களைச் சேர்த்தல் ஆகியன நமது விக்கியை மேம்படுத்தும்.
  3. இப்போதுள்ள படி ஆரோக்கியமான உரையாடல்கள் மூலம் அனைத்திற்கும் தேவையான அனைத்து மாற்றங்களையும் செய்வது நமது விக்கிசமூகத்தை மேலும் சிறப்பாக்கும்.
  4. இதுதவிர முக்கிய கட்டுரைகள் உருவாக்கம் போன்றவை ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது.
  • தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தவரை அவ்வப்போது சாதி தொடர்பான கட்டுரைகளில் எழும் தொகுப்புப் போர், தானியங்கித் தமிழாக்க கட்டுரைகளை இடுபவர்கள், விசமிகள் அதிகமாக தொகுப்பதில்லை எனினும் சில நேரங்களில் செய்யும் தொகுப்புகள், பயனர் தகவல்கள் மற்றும் பதிப்புரிமை உள்ள தகவல்களை கட்டுரையில் இடுபவர்கள், இப்பகுப்பில் உள்ள பணிகளைச் செய்தல் போன்றவையே செய்ய வேண்டிய பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பணிகள் எனினும் நான் அறிந்தவரை தற்போதைக்கு பெரிய சிக்கல்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. edit warring, content dispute போன்ற சிக்கல்கள் சமூகம் இன்னும் வளரும் போது வருங்காலத்தில் நடக்க வாய்ப்புள்ளது.
  • புதுப்பயனர் ஒரு வரிக் கட்டுரையை முதலில் இட்டால் கலைக்களஞ்சியத்திற்கு பொருத்தமான கட்டுரை எனில் சிறிது மேம்படுத்தி அந்தப் பயனரிடம் வேண்டுகோள் விடுப்பேன். மீண்டும் மீண்டும் அதே போல செய்தால் குறித்த கால நீக்கல் வேண்டுகோள் விடுக்கலாம்.
அருமையான, எடுத்துக்க்காட்டுக்களுடனான பதில்கள். மிக்க நன்றிகள். --Natkeeran (பேச்சு) 02:56, 19 மே 2012 (UTC)
நல்ல பதில்கள் சண்முகம். துடிப்பான இளையவர்களின் வருகை விக்கியை செம்மைப்படுத்தட்டுமாக! -- மாகிர் (பேச்சு) 03:49, 19 மே 2012 (UTC)
[தொகு] இரவியின் கேள்விகள்

சண்முகம், பின்வரும் சூழ்நிலைகளில் உங்கள் அணுகுமுறைய அறிந்து கொள்ள விரும்புகிறேன்:

  • புதிய பயனர்களின் ஒருவரிக் கட்டுரைகள் பற்றிய தங்கள் அணுகுமுறை நன்று. இதே புதுப்பயனர் ஒரு முதியவராக, விக்கி நடைமுறைகளைப் புரிந்து கொள்ள முடியாதவராக இருக்கிறார். அவர் இடும் உள்ளடக்கம் பயனுள்ளதாக இருந்தாலும் கலைக்களஞ்சிய நடையில் இல்லை. இதனை எப்படி அணுகுவீர்கள்?
  • பேச்சு:காப்பி போன்ற உரையாடலில் இரு பயனர்கள் தங்கள் கருத்துகளில் விடாப்பிடியாக மாற்றி மாற்றிக் கட்டுரையைத் தொகுத்துக் கொண்டிருந்தால் அதனை எப்படி அணுகுவீர்கள்?
  • தமிழ் விக்கிப்பீடியா கொள்கைகள் / நடைமுறைகளில் எவை மிகக் கடுமையாக உள்ளதாக நினைக்கிறீர்கள்? எவை அளவுக்கு மீறி மிகவும் இளக்கமாக உள்ளதாக எண்ணுகிறீர்கள்? தமிழ் விக்கிப்பீடியாவை மேம்படுத்த புதிதாக சில கொள்கைகளை உருவாக்கலாம் எத்தகைய கொள்கைகளை உருவாக்கலாம் என இரு எடுத்துக்காட்டுகள் தருவீர்களா?
  • ஒரு நிறுவனம் அல்லது பயனர் பல ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தி ஒரே பயனர் கணக்கின் கீழ் கட்டுரைகளைப் பதிவேற்றும் போது வரக்கூடிய சிக்கல் என்ன? இதில் உங்கள் அணுகுமுறை / நிலைப்பாடு என்னவாக இருக்கும்? சிக்கலாக நீங்கள் கருதக்கூடியதை எவ்வாறு தீர்க்க முனைவீர்கள்?

நன்றி--இரவி (பேச்சு) 08:20, 19 மே 2012 (UTC)

பதில்கள்

  • முதலில் அக்கட்டுரையை கலைக்களஞ்சிய நடைக்கு மாற்றி விட்டு அந்த பயனருக்கு விளக்க முயல்வேன். பிறகும் அந்த பயனருக்கு புரியவில்லை எனில் அதற்குரிய tag (விக்கியாக்கம், துப்புரவு) போன்றவற்றை இணைத்து விடுவேன் (நேரம் கிடைக்கும்போது நானோ மற்ற பயனர்களோ கலைக்களஞ்சிய நடைக்கு மாற்றிவிடக்கூடுமல்லவா அதனால்).
  • கட்டுரையை விடாமல் தொகுத்துக் கொண்டிருந்தால் கட்டுரையை காப்பு செய்து விட்டு உரையாடல் பக்கத்தில் உரையாடி முடிவுக்கு வரச்சொல்லலாம். அப்படியும் ஒரு முடிவுக்கு வரவில்லையெனில் மற்ற விக்கியர்களின் கருத்துக்களைக் கேட்டு அனைவரின் முடிவுக்கேற்ப சரியான கருத்தை சேர்க்க முயல்வேன்.
  • தமிழ் விக்கி கொள்கைகளைப் பொறுத்த வரை மிக கடுமையாகவோ அல்லது மிக இளக்கமாகவோ உள்ளதாக எதுவும் எனக்கு தோன்றவில்லை. நான் சில பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட சரியான கொள்கைகள் மற்றும் வழிகாட்டி பக்கங்களை தேடியபோது சில தமிழ் விக்கியில் இல்லை அல்லது பகுதியாக இருந்தது (எனவே அவற்றை முழுவதுமாக உருவாக்க வேண்டும் என்பது எனது விருப்பம்).
புதிதாக கொள்கைகளை உருவாக்குவது என்பது ஒரு குறிப்பிட்ட சூழல் வரும்போது அதற்கேற்றவாறு உருவாக்கலாம் என கருதுகிறேன். எகாவாக ஏதாவதொன்றை பற்றி உரையாடல் வரும்போது அதற்கேற்ற கொள்கைளை உருவாக்கலாம் என்பது எனது கருத்து. உதவி மற்றும் வழிகாட்டுதல் பக்கங்களை உடனே தமிழில் உருவாக்குவது நல்லது. எகாவாக தற்போது ஒரு தொகுத்தல் முரண்பாடு தொடர்பான உரையாடலில் en:Help:Edit conflict இதையே கூற வேண்டியிருந்தது.
en:Category:Wikipedia_humor போன்ற சில கொள்கைகள் பயனர்களுக்கு இடையே இறுக்கத்தை குறைக்க இயலும். மேலும் புதிய கொள்கைகள் பற்றி கூறவேண்டுமானால் விக்கியில் நடக்கும் நிகழ்வுகளைப் பொறுத்து தேவைப்படும் கொள்கைகளை அனைவரின் கருத்தையறிந்து உருவாக்குவதே சிறந்தது என்பது எனது கருத்து.
  • ஒரு நிறுவனத்தின் பல ஊழியர்கள் ஒரே பயனர் கணக்கின் கீழ் பல கட்டுரைகளைத் தொகுப்பது சரியானதில்லை என எனக்குத் தோன்றுகிறது (முதலில் அவ்வாறு பலர் ஒரே கணக்கின் கீழ் தொகுப்பது கொள்கைப்படி சரியா? நானறிந்தவரை தவறு என்றே நினைக்கிறேன்). இங்கு பங்களிப்பவர்கள் யாவரும் தன்னார்வலர்களே. ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் ஒரே கணக்கின் கீழ் பங்களிக்க செய்வதென்பது மற்ற பங்களிப்பாளர்களின் மதிப்பை குறைக்கலாம். எனவே தனித்தனி கணக்குகளில் பங்களிக்க செய்யலாம். நிறுவனம் பணிக்கு அமர்த்துவதன் மூலம் உருவாக்கப்படும் கட்டுரைகள் தரமிக்கதா என ஆராய வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கலாம். அப்படியும் தரமற்ற கட்டுரைககளை பதிவேற்றினால் அனைத்து பயனர்களின் கருத்துக்கேற்ப தடுப்பது அல்லது நீக்குவது குறித்து முடிவு செய்யலாம்.--சண்முகம் (பேச்சு) 10:16, 19 மே 2012 (UTC)

[தொகு] ஸ்ரீகாந்த் (மே 19, 2012-மே 26, 2012) (வாக்கு: 13|0|0)

பயனர் ஸ்ரீகாந்த் தமிழ் விக்கிப்பீடியாவில் கடந்த மூன்றாண்டுகளாகவும் ஆங்கில விக்கியில் 2007 முதலும் பங்களித்து வருகிறார். கட்டுரைத் திருத்தங்களில் மட்டுமல்லாமல் விக்கித் தொழில்நுட்பம் சார்ந்து தனது சிறப்பான பங்களிப்புகளைத் தருகிறார். மீடியாவிக்கி வழு மேலாண்மை, நிரலாக்கம், நீட்சிகள் சோதனை போன்றவற்றில் இவர் திறமையாகச் செயல்பட இவருக்கு நிருவாக அணுக்கம் உதவும். எனவே, ஸ்ரீகாந்திற்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கின்றேன். --Kanags \உரையாடுக 03:24, 19 மே 2012 (UTC)

[தொகு] ஆதரவு

  1. Kanags \உரையாடுக 03:24, 19 மே 2012 (UTC)
  2. --Natkeeran (பேச்சு) 03:33, 19 மே 2012 (UTC)
  3. இவருக்கு நிருவாக அணுக்கம் இல்லை என்றே தெரியவில்லையே ;) --மணியன் (பேச்சு) 03:47, 19 மே 2012 (UTC)
  4. too late -- மாகிர் (பேச்சு) 03:52, 19 மே 2012 (UTC)
  5. சண்முகம் (பேச்சு) 04:03, 19 மே 2012 (UTC)
  6. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:23, 19 மே 2012 (UTC)
  7. மயூரநாதன் (பேச்சு) 04:38, 19 மே 2012 (UTC)
  8. --Nan (பேச்சு) 04:40, 19 மே 2012 (UTC)
  9. --கிருஷ்ணபிரசாத் /உரையாடுக 04:43, 19 மே 2012 (UTC)
  10. இவர் நிர்வாகியில்லையா? -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:51, 19 மே 2012 (UTC)
  11. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:45, 19 மே 2012 (UTC)
  12. --சிவக்குமார் \பேச்சு 07:55, 19 மே 2012 (UTC)
  13. --எஸ்ஸார் (பேச்சு) 08:29, 19 மே 2012 (UTC)
  14. ----கலை (பேச்சு) 10:07, 19 மே 2012 (UTC)
  15. --பரிதிமதி (பேச்சு) 10:15, 19 மே 2012 (UTC)
  16. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 10:17, 19 மே 2012 (UTC)

[தொகு] எதிர்ப்பு

[தொகு] நடுநிலை

[தொகு] கேள்விகள்

  • சிறீக்காந்த், நீங்கள் ஆங்கில விக்கிப்பீடியா நடைமுறைகளை நன்கு அறிந்தவர். தமிழ் விக்கிப்பீடியாவை மேம்படுத்த ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள எந்த விதமான நடைமுறைகள் / கொள்கைகளை இங்கு அறிமுகப்படுத்தலாம் என்று இரு எடுத்துக்காட்டுகள் தர முடியுமா?
  • நீங்கள் ஒரு நுட்பவியலாளர் என்ற முறையில் பல விசயங்களைத் தானியக்கமாகச் செய்யலாம் என்று எண்ணக்கூடியவர். தமிழ் விக்கிப்பீடியாவில் அவ்வாறு செய்யலாம் என்று எண்ணக்கூடிய பணிகள் என்ன? தானியக்கமாகச் செய்வதால் சமூகத்தின் உளநிலையில், செயல்பாட்டு முறையில் ஏதேனும் மாற்றங்கள் / தாக்கங்கள் இருக்கும் என்று எண்ணி, தானியக்கமாகச் செய்ய வேண்டாம் என்று எண்ணக்கூடிய விசயம் ஏதும் உள்ளதா?
  • நீங்கள் ஒரு பயனராக உங்கள் கருத்துகளை மிகக் கடுமையாகவும், நேரடியாகவும் முன்வைப்பவர் என்று அறிவேன் :) ஆனால், நிருவாகப் பயனர்களின் மொழி நடை, உரையாடும் பாங்கு மற்ற பயனர்களின் நடத்தை மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. இச்சூழ்நிலையில், நீங்கள் நிருவாகி ஆன பிறகு உங்கள் உரையாடல் பாங்கு எவ்வாறு இருக்கும்?
  • சில வேளைகளில், தமிழ்ச் சமூக நோக்கு, தமிழ் மரபு போன்ற உரையாடல் நடக்கும் இடங்களில், ஆங்கில விக்கி நடைமுறைகளையும் உலகாளவிய நோக்கையும் வலியுறுத்தியுள்ளீர்கள். வருங்காலத்தில் இவ்விரண்டு அணுகுமுறைகளையும் எவ்வாறு எதிர்கொள்வீர்கள்? எச்சூழ்நிலையில், எதை முன்னிறுத்தலாம்? தொலைநோக்காக கருதியும், தமிழ்ச் சூழலின் போதாமைகளை எண்ணியும் சில நடைமுறைகளை விட்டுக் கொடுக்காலமா? சில மாறுபட்ட, புதிய கொள்கைகளை உருவாக்கலாமா?
  • தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தப் பயன்பாடு குறித்த சிக்கலை எவ்வாறு தீர்க்க முனைவீர்கள்?

நன்றி.--இரவி (பேச்சு) 08:20, 19 மே 2012 (UTC)

[தொகு] பார்வதிஸ்ரீ (மே 19, 2012-மே 26, 2012) (வாக்கு: 8|0|0)

பார்வதிஸ்ரீ அவர்கள் கட்டுரை ஆக்கம், திருத்தம், ஒழுங்குபடுத்தல் பணிகளிலும், தமிழ் விக்கிப்பீடியாவை பல முனைகளில் அறிமுகப்படுத்துவதிலும், ஊடகப் போட்டி, குறுவட்டுத் திட்டம் போன்ற பல்வேறு செயற்பாடுகளிலும் மிகச் சிறப்பாகப் பங்களித்து வருகிறார். தமிழாரிசியர் என்ற வகையிலும் சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறார். இவரை நிர்வாகியாகப் பெறுவது தமிழ் விக்கிப்பீடியாவிற்கும், விக்கித் திட்டங்களுக்கும் வளம் சேர்க்கும். பார்வதிஸ்ரீ அவர்களுக்கு நிர்வாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கின்றேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 05:43, 19 மே 2012 (UTC)

[தொகு] ஆதரவு

  1. --Natkeeran (பேச்சு) 05:45, 19 மே 2012 (UTC)
  2. --Kanags \உரையாடுக 05:46, 19 மே 2012 (UTC)
  3. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:52, 19 மே 2012 (UTC)
  4. --Nan (பேச்சு) 06:03, 19 மே 2012 (UTC)
  5. சண்முகம் (பேச்சு) 06:16, 19 மே 2012 (UTC)
  6. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:46, 19 மே 2012 (UTC)
  7. --சிவக்குமார் \பேச்சு 07:56, 19 மே 2012 (UTC)
  8. --எஸ்ஸார் (பேச்சு) 08:29, 19 மே 2012 (UTC)
  9. மயூரநாதன் (பேச்சு) 09:04, 19 மே 2012 (UTC)
  10. ----கலை (பேச்சு) 10:07, 19 மே 2012 (UTC)
  11. --பரிதிமதி (பேச்சு) 10:15, 19 மே 2012 (UTC)
  12. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 10:18, 19 மே 2012 (UTC)

[தொகு] எதிர்ப்பு

[தொகு] நடுநிலை

[தொகு] கருத்து

[தொகு] கேள்விகள்

  • மேலும் பல புதிய பயனர்களை ஈர்க்க, இருக்கிற பயனர்களை இன்னும் உற்சாகமாக பங்களிக்க வைக்க, என்ன வகையான முயற்சிகளைத் தமிழ் விக்கிப்பீடியா மேற்கொள்ளலாம் என்று எண்ணுகிறீர்கள்? தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகள் ஏதேனும் பங்களிப்பு ஆர்வத்தைக் குன்றச் செய்வதாக, போதிய உதவியை அளிக்காமல் உள்ளதாக எண்ணுகிறீர்களா? இவற்றை எப்படித் தீர்க்க முனைவீர்கள்?
  • ஒரு புதிய கட்டுரைப் பக்கம் தவறானது எனக் கருதி உடனடியாக நீக்கி விடுகிறீர்கள். ஆனால், கட்டுரையை உருவாக்கிய பயனர் தொடர்ந்து கடுமையான மறுப்பு தெரிவித்து உரையாடுவதோடு மட்டும் அல்லாமல் மீண்டும் மீண்டும் அக்கட்டுரையை உருவாக்க முனைகிறார். இதனை எப்படி அணுகுவீர்கள்?
  • தமிழ் விக்கிப்பீடியாவின் மொழி நடை குறித்த சில உரையாடல்கள் தங்களுக்கு அயர்வளிப்பதாகவும் நேர விரயமாக உள்ளதாகவும் என முன்பு குறிப்பிட்டு உள்ளீர்கள். ஒரு தமிழாசிரியர் என்ற முறையிலும் ஒரு நிருவாகப் பயனர் என்ற முறையிலும் வருங்காலத்தில் இச்சிக்கலைத் தீர்க்க தமிழ் விக்கிப்பீடியர்கள் என்ன வகையான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று எண்ணுகிறீர்கள்?

நன்றி--இரவி (பேச்சு) 08:37, 19 மே 2012 (UTC)

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்