விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 29
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
- 1890 - தெற்கு டகோட்டாவில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 400 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.
- 1930 - அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் (படம்) முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.
- 1996 - குவாத்தமாலாவில் அந்நாட்டு அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 36-ஆண்டு கால உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது.
அண்மைய நாட்கள்: டிசம்பர் 30 – டிசம்பர் 28 – டிசம்பர் 27