ராதா சரண் குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராதா சரண் குப்தா
பிறப்பு1935 ஆம் ஆண்டு
குர்சராய், சான்சி
தேசியம்இந்தியன்
துறைகணிதத்தின் வரலாறு
பணியிடங்கள்பிர்லா இன்சுடிடியூட் ஆப் டெக்னாலசி, மெசுரா
கல்வி கற்ற இடங்கள்லக்னோ பல்கலைக்கழகம், ராஞ்சி பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்தெ. அ. சரசுவதி அம்மா
விருதுகள்பத்மசிறீ (2023)
கென்னத் ஓ.மே பரிசு (2009)

ராதா சரண் குப்தா (Radha Charan Gupta) இன்றைய உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள குர்சராய் சான்சியில் 1935 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இந்திய கணித வரலாற்றாசிரியர் ஆவார்.

ராதா சரண் குப்தாவின் ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

குப்தா லக்னோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அப்பல்கலைக்கழகத்தில் 1955 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டமும், 1957 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டமும் பெற்றார். தனது முனைவர் பட்டத்தை 1971 ஆம் ஆண்டு ராஞ்சி பல்கலைக்கழகத்தில் கணித வரலாற்றில் முடித்தார். [1]

ராஞ்சி பல்கலைக்கழகத்தில் இந்திய கணித வரலாற்றாசிரியர் தெ.அ.சரசுவதி அம்மாவிடம் தனது ஆய்வுப் பணியை மேற்கொண்டார். பின்னர் லக்னோ கிறிசுதவக் கல்லூரியில் விரிவுரையாளராக 1957 ஆம் ஆண்டு முதல் 1958 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 1958 ஆம் ஆண்டு அவர் பிர்லா இன்சுடிடியூட் ஆப் டெக்னாலஜி, மேஸ்ராவில் சேர்ந்தார். 1982 ஆம் ஆண்டு முழுப் பேராசிரியர் பதவி வழங்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டு கணிதம் மற்றும் தர்க்கவியல் வரலாற்றின் எமரிட்டசு பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றார். [1] பிப்ரவரி 1995 ஆம் ஆண்டு அறிவியல் வரலாற்றின் சர்வதேச அகாடமியின் தொடர்புடைய உறுப்பினரானார். [2]

வேலை செய்த இடம்[தொகு]

1969 ஆம் ஆண்டு குப்தா இந்தியக் கணிதத்தில் இடைக்கணிப்பு [3] உரையாற்றினார். இவர் கோவிந்தசுவாமின் மற்றும் சைன் அட்டவணைகளின் இடைச்செருகல் பற்றி எழுதினார். மேலும், பரமேசுவராவின் படைப்புகள் பற்றிய "சுழற்சி நாற்கரத்தின் சுற்றளவுக்கான பரமேசுவர ஆட்சி" என்ற கட்டுரையை அளித்தார்.

குறிப்பிடத்தக்க விருதுகள்[தொகு]

1991 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய அறிவியல் அகாடமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1994 ஆம் ஆண்டு இந்திய கணித ஆசிரியர் சங்கத்தின் தலைவராக ஆனார். [1] 1979 ஆம் ஆண்டு "கணித பாரதி" என்ற இதழை நிறுவினார்.

2009 ஆம் ஆண்டில், பிரிட்டிசு நாட்டு கணிதவியலாளர் ஐவர் கிராட்டன்-கின்னசு உடன் இணைந்து கென்னத் ஓ.மே பரிசைப் பெற்றார். [4] [5] [6] இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. [7]

2023 ஆம் ஆண்டில், இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் இவரது பங்களிப்புகளுக்காக இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Awarding of the K.O. May Prize from பன்னாட்டு கணித ஒன்றியம்
  2. "Radha-Charan Gupta". International Academy of the History of Science.
  3. R.C Gupta (1969) "Second Order of Interpolation of Indian Mathematics", Indian Journal of History of Science 4: 92-94
  4. "Indian professor wins prestigious mathematics prize". https://www.deccanherald.com/content/80128/indian-professor-wins-prestigious-mathematics.html. 
  5. "Radha Gupta Will Receive Kenneth O. May Prize at ICM 2010". அமெரிக்கக் கணிதவியல் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 12 July 2010.
  6. "Indian professor chosen for prestigious mathematics prize". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 8 July 2010.
  7. "First Indian to get Prize in ICM2010" (PDF).
  8. "Padma Awards 2023 announced". Ministry of Home Affairs, Govt of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராதா_சரண்_குப்தா&oldid=3800277" இலிருந்து மீள்விக்கப்பட்டது