கே. ஆனந்த ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. ஆனந்த ராவ்
கே. ஆனந்த ராவ்
பிறப்பு1893
சென்னை
தேசியம்இந்தியா
துறைகணிதவியல்
பணியிடங்கள்சென்னை மாகாணக் கல்லூரி
ஆய்வு நெறியாளர்ஜீ. ஹெச். ஹார்டி
முனைவர் பட்ட 
மாணவர்கள்
கே. சந்திரசேகரன்,

வி. கணபதி அய்யர்,

எஸ். மீனாட்சிசுந்தரம், எஸ்.எஸ்.பிள்ளை,

ஸி.டீ. ராஜகோபால்,

டீ. விஜயராகவன்
அறியப்படுவதுஆனந்தராவ் தேற்றம், பகுவியல்

கே. ஆனந்த ராவ் (1893 - 1966) சீனிவாச இராமானுசனுடைய காலத்திய கணித வல்லுனர். இராமானுசன் இளவயதிலேயே இறந்தபிறகு, இருபதாவது நூற்றாண்டின் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது பத்தாண்டுகளில், அக்காலத்திய சென்னையின் கணிதவானில் ஒரு முன்மாதிரியான விண்மீனாகத் திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் பேராசிரியர் வைத்தியநாதசுவாமியுடன், பிற்காலத்தில் வரப்போகும் இந்தியாவின் சிறந்த சில கணிதவல்லுனர்களை உருவாக்கினவர்.

பிறப்பும் கல்வியும்[தொகு]

சென்னையில் 1893 இல் பிறந்தார். பள்ளியிலும் கல்லூரியிலும் சிறந்து விளங்கினார். 1914 இல் கேம்பிரிட்ஜ் சென்று ஜீ. ஹெச். ஹார்டியின் மாணவராகச் சேர்ந்தார். உயர்ந்த பரிசான ஸ்மித் பரிசைத் தட்டிக்கொண்டார். அங்கு முனைவர் பட்டம் பெற்றபிறகு 1919 இல் சென்னை திரும்பினார்.

பணிகள்[தொகு]

சென்னையில் வந்ததுமே மாகாணக் கல்லூரியில் பேராசிரியராக எடுத்துக்கொள்ளப்பட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு வைத்தியநாதசுவாமியும் சென்னை வந்து சேர்ந்தார். இருவருமாக சென்னையை கணித ஆய்வுக்கு உகந்த சூழ்நிலை உடையதாகச் செய்தனர். இதனால் அவர்களிருவரும் பல சிறந்த கணிதவியலர்களை உருவாக்க முடிந்தது.

சாதனைகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Historical notes by M.S. Raghunathan, Current Science Vol.85 No.4, 25 Aug 2003 pp. 526–536.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆனந்த_ராவ்&oldid=2378415" இலிருந்து மீள்விக்கப்பட்டது