சிறீதர ஆச்சாரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறீதரர் (Śrīdhara, Śrīdharācāryya)[1] (கிபி 870 – 930) இந்தியக் கணிதவியலாளர் மற்றும் சமசுகிருத அறிஞரும், தத்துவாதியும் ஆவார். இவர் தற்கால மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள புர்சூத் கிராமத்தில் சமசுகிருத பண்டிதரான பலதேவ ஆச்சாரியருக்கும்-அச்சோக தேவிக்கும் பிறந்தவர்.

புகழ்பெற்ற படைப்புகள்[தொகு]

  • 300 சூத்திரங்கள் கொண்ட திரிசக்திகா அல்லது பட்டிகணிதசாரம்[2] என்ற கணித நூலை இயற்றியுள்ளார்.

குறிப்பிடத்தக்க பணிகள்[தொகு]

சிறீதரரின் குறிப்பிட்டத்தக்க பணிகள்:[3]

  • இவர் பூஜ்ஜியத்தை விளக்கினர்: "பூஜ்ஜியத்தை எந்த எண்ணுடன் சேர்த்தால், கூட்டுத்தொகை அதே எண்; எந்த எண்ணிலிருந்து பூஜ்ஜியத்தைக் கழித்தால், எண் மாறாமல் இருக்கும்; பூஜ்ஜியத்தை எந்த எண்ணால் பெருக்கினால், மதிப்பு பூஜ்ஜியமாகும்".
  • படிமுறைத் தீர்வுக்கு இருபடி வாய்ப்பட்டை கண்டுபிடித்தவர்களில் முதன்மையானவர்.
  • சிறீதரர் சூத்திரம் எனும் இருபடி வாய்பாடு[4]

  • இவர் கணித்தையும், இயற்கணிதத்தையும் பிரித்து வகுத்தார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sharma, Rahul. "शून्य की व्याख्या करने वाला विद्वान : श्रीधराचार्य". ajabgajabfacts.
  2. Trisatika or Patiganitasara of Sridhara, English tr. by Venugopal D. Heroor, General ed: Dilip Kumar Rana
  3. O'Connor, J J. "Sridhara". Mac Tutor. School of Mathematics and Statistics University of St Andrews, Scotland. பார்க்கப்பட்ட நாள் September 8, 2021.
  4. Sridharacharya Formula

ஆதார நூற்பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீதர_ஆச்சாரியா&oldid=3783829" இலிருந்து மீள்விக்கப்பட்டது