முதலமைச்சர் (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Coat of arms of Sri Lanka, showing a lion holding a sword in its right forepaw surrounded by a ring made from blue lotus petals which is placed on top of a grain vase sprouting rice grains to encircle it. A Dharmacakra is on the top while a sun and moon are at the bottom on each side of the vase.
இக்கட்டுரை
இலங்கை அரசியலும் அரசும்
தொடரின் ஒரு பகுதி

இலங்கையில் முதலமைச்சர் (Chief Minister) எனப்படுபவர் மாகாண மட்டத்தில் அமைந்த உள்ளூராட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்படுபவரைக் குறிக்கும். மாகாண சபையின் ஆட்சிக்குட்பட்ட நிறைவேற்று அதிகாரங்களை இவர் கொண்டிருப்பார். மாகாண சபையில் அதிக இடங்களைக் கொண்டிருக்கும் கட்சி அல்லது அரசியல் கூட்டணியின் உறுப்பினர்கள் முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பர். மாகாண சபையின் ஆறு ஆண்டுகால ஆட்சிக் காலத்திற்கு இவர் பதவியில் இருக்கலாம். மாகாண ஆளுனர் குறிப்பிட்ட மாகாணத்தின் தலைவராக இருப்பார், ஆனால் அவர் பொதுவாக சம்பிரதாயபூர்வப் பணிகளிலேயே ஈடுபடுவார்.

இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒன்பது முதலமைச்சர்கள் பதவியில் உள்ளனர்.

தற்போதைய முதலமைச்சர்கள்[தொகு]

மாகாணம் படம் தற்போதைய முதலமைச்சர் கட்சி பணியில் பணிக்காலம் முடிவு முன்னையோர்
மத்திய மாகாணம் சரத் ஏக்கநாயக்க இலங்கை சுதந்திரக் கட்சி 18 சூன் 2004
கிழக்கு மாகாண சபை நஜீப் அப்துல் மஜீத் இலங்கை சுதந்திரக் கட்சி 18 செப்டம்பர் 2012 சிவனேசத்துரை சந்திரகாந்தன்
வடமத்திய மாகாணம் எஸ். எம். ரஞ்சித் இலங்கை சுதந்திரக் கட்சி 18 செப்டம்பர் 2012
வட மாகாண சபை C. V. Vigneswaran.jpg க. வி. விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழரசுக் கட்சி 7 அக்டோபர் 2013 கொழும்பின் நேரடி ஆட்சி
வடமேற்கு மாகாணம் தயசிரி ஜயசேகர இலங்கை சுதந்திரக் கட்சி 3 அக்டோபர் 2013
சபரகமுவா மாகாணம் மகீலபால ஹேரத் இலங்கை சுதந்திரக் கட்சி 16 சூன் 2004
தெற்கு மாகாணம் சண் வியஜலால் டி சில்வா இலங்கை சுதந்திரக் கட்சி 10 சூன் 2004
ஊவா சசீந்திரா ராஜபக்ச இலங்கை சுதந்திரக் கட்சி 20 ஆகத்து 2009
மேற்கு மாகாணம் பிரசன்னா ரணதுங்க இலங்கை சுதந்திரக் கட்சி 4 மே 2009

அதிகாரங்கள் தொடர்பான தீர்ப்புகள்[தொகு]

  • மாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் நடுவண் அரசின் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கே உண்டு என்றும், அவ்வதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு இல்லை என்றும் இலங்கை உயர்நீதிமன்றம் 2014 ஆகத்து 4 இல் தீர்ப்பளித்தது. வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேசுவரனுக்கு எதிராக மாகாண செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் இவ்வழக்கைத் தொடுத்திருந்தார்.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=முதலமைச்சர்_(இலங்கை)&oldid=1701692" இருந்து மீள்விக்கப்பட்டது