பையாவூர்

ஆள்கூறுகள்: 12°03′22″N 75°34′55″E / 12.056050°N 75.581990°E / 12.056050; 75.581990
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பையாவூர்
நகரம்
புனித செபாத்தியன் கன்னையா தேவாலயம், பையாவூர்
புனித செபாத்தியன் கன்னையா தேவாலயம், பையாவூர்
பையாவூர் is located in கேரளம்
பையாவூர்
பையாவூர்
கேரளாவில் பையாவூரின் அமைவிடம்
பையாவூர் is located in இந்தியா
பையாவூர்
பையாவூர்
பையாவூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°03′22″N 75°34′55″E / 12.056050°N 75.581990°E / 12.056050; 75.581990
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்கண்ணூர்
வட்டம்தளிப்பறம்பு
அரசு
 • நிர்வாகம்கிராமப் பேரூராட்சி
பரப்பளவு
 • மொத்தம்69.34 km2 (26.77 sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்22,998
 • அடர்த்தி330/km2 (860/sq mi)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்670633
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐஎன்-கேஎல்
எழுத்தறிவு95.46%
மக்களவைத் தொகுதிகண்ணூர்
சட்டமன்றத் தொகுதிஇரிக்கூர்
சிறுமலர் பள்ளி, சந்தனகம்பாரம்

பையாவூர் (Payyavoor) என்பது இந்திய மாநிலமான கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். இது பையாவூர் பேரூராட்சியின் தலைமையகமாகவும் இருக்கிறது.

அமைவிடம்[தொகு]

பையாவூர், மாவட்டத் தலைமையகமான கண்ணூருக்கு கிழக்கே 43 கி.மீ. தொலைவிலும், வட்டத் தலைமையகமான தளிப்பரம்பாவுக்கு கிழக்கே 30 கி.மீ. தொலைவிலும், இரிட்டிக்கு 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள நகராட்சி சிறீகண்டபுரம் 10 கி.மீ தூரத்தில் உள்ளது.

சிவ விழா[தொகு]

இங்குள்ள சிவன் கோவிலில் நடைபெறும் திருவிழா மிகவும் பிரபலமானது. இது கும்ப மாதத்தின் முதல் நாளிலிருந்து பன்னிரென்டாம் நாள் வரை கொண்டாடப்படுகிறது. இந்த நகரத்தில் புனித அன்னை தேவாலயம் என்ற பெயரில் ஒரு கன்னையா கத்தோலிக்க தேவாலயம் உள்ளது.

சிவன் கோவிலில் ஊட்டு விழா[தொகு]

சிவபெருமானின் ஆலயத்தில் ஊட்டுத் திருவிழா கிராமத்தின் தனித்துவமான கொண்டாட்டமாகும். இது ஒவ்வொரு ஆண்டும் மலையாள நாட்காட்டியின்படி பன்னிரென்டாம் நாள் வரை கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடின்றி மக்கள் இந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள். குடகு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் (கருநாடகா) வேண்டுதல்களுடன் பிரசாதத்தையும் கொண்டு வருகிறார்கள். [2] திருவிழா பிப்ரவரி 12 அன்று (மகரம் 30) தொடங்கி பிப்ரவரி 24 அன்று (கும்பம் 12) முடிவடைகிறது. இந்த விழா குடகு அத்துடன் கேரளாவைச் சேர்ந்த மக்களின் 'சங்கமம்' என்று கருதப்படுகிறது. திருவிழா துவங்குவதற்கு முன்பு குடகிலிருந்து பக்தர்கள் தங்கள் கால்நடைகளௌடன் திருவிழா காலத்தில் 'பிரசாத ஊட்டம்' எனப்படும் அரிசி பிரசாதங்களுடன் கோவிலுக்கு வருகிறார்கள். இந்த திருவிழாவைப் பற்றிய பல்வேறு புராணக்கதைகள் உள்ளன.

போக்குவரத்து[தொகு]

கேரள மலை நெடுஞ்சாலை 59 இதன் வழியாக செல்கிறது. இது அருகிலுள்ள நகரங்களான செம்பேரி, உலிக்கல், இரிட்டி, நடுவில், கருவஞ்சல், அலகோடு போன்ற ஊர்களை இணைக்கிறது. கேரள மாநில நெடுஞ்சாலை 36 இங்கிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ள சிறீகண்டபுரம் நகரம் வழியாக செல்கிறது.

தேசிய நெடுஞ்சாலை 66 30 கி.மீ தூரத்திலுள்ள தளிப்பறம்பா நகரத்தில் செல்கிறது. இங்கிருந்து மங்களூரையும், மும்பையையும் வடக்குப் பகுதியிலும், கொச்சினையும், திருவனந்தபுரத்தையும் தெற்குப் பகுதியிலும் அணுகலாம். கிழக்கு நோக்கிச் செல்லும் சாலை மைசூரையும் பெங்களூரையும் இணைக்கிறது.

கண்ணூர் அருகிலுள்ள தொடர் வண்டி நிலையமாகும். 26 கி.மீ தெற்கே கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அருகிலுள்ள வானூர்தி நிலையமாகும். மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் போன்ற இடங்களிலிருந்தும் விமானச் சேவைகளும் உள்ளன.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2011, இந்திய மக்களதொகை கணக்கெடுப்பின்படி பையாவூர் கிராமத்தில் 11,373 ஆண்களும், 11,625 பெண்களும் என 22,998 மக்கள் தொகை உள்ளனர். பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 1,022 பெண்கள். இதன் பேரூராட்சி வரம்பில் 5,698 வீடுகள் உள்ளன.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://dop.lsgkerala.gov.in › node
  2. "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
  3. http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=673683
  4. censusindia.gov.in › dchb › 3...PDF Web results Kannur - DISTRICT CENSUS HANDBOOK(refer page nos:272)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பையாவூர்&oldid=3173459" இலிருந்து மீள்விக்கப்பட்டது