பெரிலியம் ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிலியம் ஐதராக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பெரிலியம் ஐதராக்சைடு
வேறு பெயர்கள்
நீரேறிய பெரிலியம்
இனங்காட்டிகள்
13327-32-7 N
ChEBI CHEBI:35102 Y
ChemSpider 24727701 N
EC number 236-368-6
Gmelin Reference
1024
InChI
  • InChI=1S/Be.2H2O/h;2*1H2/q+2;;/p-2 Y
    Key: WPJWIROQQFWMMK-UHFFFAOYSA-L Y
  • InChI=1/Be.2H2O/h;2*1H2/q+2;;/p-2
    Key: WPJWIROQQFWMMK-NUQVWONBAB
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த ஐதராக்சைடு பெரிலியம் ஐதராக்சைடு
பப்கெம் 25879
வே.ந.வி.ப எண் DS3150000
SMILES
  • O[Be]O
பண்புகள்
BeH2O2
வாய்ப்பாட்டு எடை 43.03 g·mol−1
தோற்றம் Vivid white, opaque crystals
அடர்த்தி 1.92 g cm−3[1]
உருகுநிலை 1,000 °C (1,830 °F; 1,270 K)
குறைவாகக் கரையும்
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-904 kJ mol−1[2]
நியம மோலார்
எந்திரோப்பி So298
47 J·mol−1·K−1[3]
வெப்பக் கொண்மை, C 1.443 J K−1
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் புற்றுநோயாக்கும் தன்மை
Lethal dose or concentration (LD, LC):
4 mg kg−1 (intravenous, rat)
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் அலுமினியம் ஆக்சைடு

மக்னீசியம் ஐதராக்சைடு

மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பெரிலியம் ஐதராக்சைடு (Beryllium hydroxide) என்பது அமிலத்திலும் காரத்திலும் கரையக்கூடிய ஒர் ஈரியல்பு ஐதராக்சைடு ஆகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு Be(OH)2 பெரைல் மற்றும் பெர்டிராண்டைட்டு[4] தாதுக்களில் இருந்து பெரிலியம் உலோகத்தைப் பிரித்தெடுக்கும்போது உடன் விளைபொருளாக பெரிலியம் ஐதராக்சைடு கிடைக்கிறது. இவ்வுப்பின் கரைசலுடன் காரத்தைச் சேர்க்கும்போது கூழ்மம் போன்ற ஆல்பா வடிவம் உருவாகிறது. தொடர்ந்து இதைச் சூடுபடுத்தினால் அல்லது இடையூறின்றி அப்படியே வைத்திருந்தால் சாய்சதுர வடிவ β- வடிவ வீழ்படிவாக கிடைக்கிறது[5]. துத்தநாக ஐதராக்சைடு Zn(OH)2 போன்றே இதுவும் நான்முக பெரிலியம் மையங்களைக் கொண்டுள்ளது.[6]

வேதிவினைகள்[தொகு]

காரங்களுடன் வினைபுரிகையில் இது காரத்தில் கரைந்து நான்கு ஐதராக்சிடோபெரைலேட் எதிர்மின் அயனியாக உருவாகிறது. சோடியம் ஐதராக்சைடு கரைசலுடன்[7] பின்வருமாறு வினை நிகழ்கிறது,

2NaOH(aq) + Be(OH)2(s) → Na2Be(OH)4(aq)

அமிலங்களுடன் வினைபுரியும் போது பெரிலியம் உப்புகள் உருவாகின்றன.[7] உதாரணமாக கந்தக அமிலத்துடன் புரியும் வினையில் பெரிலியம் சல்பேட்டு உருவாகிறது.

Be(OH)2 + H2SO4 → BeSO4 + 2H2O

பெரிலியம் ஐதராக்சைடு 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீர் நீக்கப்பட்டு கரையும் தன்மை கொண்ட வெண்மை நிறத் துகளான பெரிலியம் ஆக்சைடு உண்டாகிறது.:[7]

Be(OH)2 → BeO + H2O

மேலும் இதை அதிக வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் அமிலத்தில் கரையாத பெரிலியம் ஆக்சைடாக மாறுகிறது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
  2. Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed.. Houghton Mifflin Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-618-94690-X. https://archive.org/details/chemicalprincipl0000zumd_u9g0. 
  3. Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed.. Houghton Mifflin Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-618-94690-X. https://archive.org/details/chemicalprincipl0000zumd_u9g0. 
  4. Jessica Elzea Kogel, Nikhil C. Trivedi, James M. Barker and Stanley T. Krukowski, 2006, Industrial Minerals & Rocks: Commodities, Markets, and Uses, 7th edition, SME, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87335-233-5
  5. Mary Eagleson, 1994, Concise encyclopedia chemistry, Walter de Gruyter, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-011451-8
  6. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  7. 7.0 7.1 7.2 7.3 Egon Wiberg, Arnold Frederick Holleman (2001) Inorganic Chemistry, Elsevier பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிலியம்_ஐதராக்சைடு&oldid=3849058" இலிருந்து மீள்விக்கப்பட்டது