பெரியநாகபூண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியநாகபூண்டி
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பெரியநாகபூண்டி என்பது திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர் ஆகும்.

சமயம்[தொகு]

இங்கு நாகவள்ளி உடனுறை நாகேசுவர சுவாமி கோயில் உள்ளது. இங்கு கிறித்தவ தென்னிந்திய திருச்சபையும் உள்ளது. இங்கு இந்து சமயத்தினரும் கிறித்தவ சமயத்தினரும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

வசதிகள்[தொகு]

இங்கு அரசினர் உயர்நிலைப்பள்ளி ஒன்றும் உள்ளது. இப்பள்ளியில் ஏறத்தாழ 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு மக்கள் பயனடையும் வகையில் இரண்டு அரசு நூலகங்களும் அமைந்துள்ளன. இவ்வூரில் இரண்டு சிறு குளங்களும் மிகப்பெரிய ஒரு ஏரியும் உள்ளன.

தொழில்[தொகு]

இங்குள்ள பெரும்பாலான மக்கள் வேளாண்மையை நம்பி வாழ்கின்றனர். அருகிலுள்ள ஒருசில விளைநிலங்களில் ஏரி நீர்ப் பாசனத்தை பயன்படுத்துகின்றனர். இங்கு விளையும் பயிர்கள் நெல், கரும்பு, கேழ்வரகு, சோளம், வேர்க்கடலை மற்றும் மா போன்ற பயிர்களையும் கூலிவேலையையும் நம்பி வேலை செய்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியநாகபூண்டி&oldid=1391536" இலிருந்து மீள்விக்கப்பட்டது