புசுபா குசரால் அறிவியல் நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புசுபா குசரால் அறிவியல் நகரம்
Pusupa Gujral Science City
உருவாக்கம்மார்ச் 19, 2005
வகைஅறிவியல் மையம்
சட்ட நிலைஅரசு
நோக்கம்கல்வி
தலைமையகம்கபுர்தலா
தலைமையகம்
சேவை பகுதி
கபுர்தலா, ஜலந்தர்
இயக்குனர்
டாக்டர். ஆர் எஸ் கான்பூர்
தாய் அமைப்பு
இந்திய அரசு மற்றும் பஞ்சாப் அரசாங்கத்தின் கூட்டு திட்டம்.
வலைத்தளம்pgsciencecity.org/index.htm
கருத்துகள்பார்வையாளர்:

புசுபா குசரால் அறிவியல் நகரம் (Pusupa Gujral Science City) (இந்தி:पुष्पा गुजराल साइंस सिटी) எனும் இந்த அறிவியல் மையம், இந்திய பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜலந்தர் நகரின் கபுர்த்தலா சாலையில் அமைந்துள்ளது. வட இந்தியாவின் மாபெரும் திட்டத்தில் உருவாக்கப்பட்ட இவ்வறிவியல் நிலையம், 72 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது.[1]

வரலாறு[தொகு]

இந்திய சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் 15-வது பிரதமருமான ஐ. கே. குஜரால் (1919-2012) என்பவரால், 1997-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் நாள் அடிக்கல் நடப்பட்ட இந்த அறிவியல் நகரம், இந்திய இராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரியும், மற்றும் முப்படைகளின் தளபதியாகவும் இருந்த, 'சுனித் பிரான்சிஸ் ரோட்ரிகஸ்' (Sunith Francis Rodrigues) என்பவரால் 2005-ம் ஆண்டு, மார்ச்சு 19-ல் துவங்கப்பட்டது.[2]

திட்டம்[தொகு]

இந்திய நடுவம் மற்றும் பஞ்சாப் மாநில அரசும் ஒருங்கிணைந்த ஒரு கூட்டு திட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த அறிவியல் நகரம், ரூபாய் () 100 கோடி மதிப்பீட்டில் உருவான செயற்திட்டமாகும். இத்திட்டத்தில் நிலம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திய பஞ்சாப் அரசு சார்பில் ரூபாய் () 30 கோடி செலவிடப்பட்டது. மற்ற ஏனைய உட்கட்டமைப்புகள், காட்சிக்கூடங்கள், மற்றும் ஆய்வுக்கூடங்கள் போன்ற பிற அமைப்புகளுக்காக இந்திய நடுவண் அரசு ரூபாய் () 70 கோடிகள் முதலீடு செய்து இத்திட்டத்தை நிறைவேற்றியதாக மூலாதாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[3]


பிரிவுகள்[தொகு]

ஜலந்தர்-கபுர்த்தலா சாலையில் உள்ள இந்த புசுபா குசரால் அறிவியல் மையத்தில், பல்வேறு அறிவியல் காட்சிவிளக்க அமைப்புகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. அவை, இயற்பியல், உயிரியல், சமூக அறிவியல், தொழில் நுட்பவியல், விவசாயம், மனித பரிணாமம், அணு அறிவியல், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், மற்றும் உயிரியல் தொழில் நுட்பம் போன்ற பல்வேறு பிரிவுகளில் இங்கு காட்சி விளக்க அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், லேசர் காட்சிகள் மற்றும் விமானப்பயண உணர்வை அளிக்கும் ‘உருவகப்படுத்தும்’ (Simulation) இயந்திரங்கள் போன்றவையும் இங்கு பார்வையாளர்களை உற்சாகமூட்டுவதாக அமைந்திருக்கின்றன.[4]



சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Pushpa Gujral Science City". www.mapsofindia.com (ஆங்கிலம்). 2013-06-28. பார்க்கப்பட்ட நாள் 2016-07-22.
  2. "PRIDE FOR PUNJAB - PUSHPA GUJRAL SCIENCE CITY". www.kapurthalaonline.com (ஆங்கிலம்). 2016. Archived from the original on 2016-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-07-22.
  3. "About". www.pgsciencecity.org (ஆங்கிலம்). © 2008. Archived from the original on 2013-08-05. பார்க்கப்பட்ட நாள் 2016-07-23. {{cite web}}: Check date values in: |date= (help); Text "Pushpa Gujral Science City" ignored (help)
  4. "Pushpa Gujral Science City". www.bharatonline.com (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-22.