பாவுலூரி மல்லனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாவுலூரி மல்லன்னா
பிறப்புகீழைச் சாளுக்கியர் (நவீன கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா)
பிரதான விருப்புகணிதம்
Major worksசார சங்கிரக கணிதம்
Influenced by

பாவுலூரி மல்லனா (Pavuluri Mallana) சுமார் 11ஆம் அல்லது 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இன்றைய ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியக் கணிதவியலாளர் ஆவார்.[1][2] 9ம் நூற்றாண்டின் சமண சமய ஆச்சாரியரும் கணித அறிஞருமான மகாவீரச்சார்யாவின் சமசுகிருத கணிதக் கட்டுரையான கணிதசாரசங்காரகம் அல்லது கணித சார சம்கிரகா என்பதை தெலுங்கில் சார சங்கிரக கணிதம் என மொழிபெயர்த்தார். இது பிரபலமாக பாவுலூரி கணிதமு என்று அழைக்கப்படுகிறது.[3][4]

கணித சார சம்கிரகா என்பது சமசுகிருதத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஒரு பிராந்திய மொழிக்கு ஒரு கணித நூலின் ஆரம்பகால மொழிபெயர்ப்பாகும். மேலும் தெலுங்கில் எழுதப்பட்ட மிகப் பழமையான அறிவியல் நூலுமாகும்.[5][6] அனைத்து திராவிட மொழியிலும் கணிதம் பற்றிய முதல் அறிவியல் ஆய்வுக் கட்டுரை இதுவே.[7] அந்த காலத்தில் ஆந்திராவில் பயன்படுத்தப்பட்ட எடைகள், அளவுகள் மற்றும் நாணயங்களின் முறையையும் மல்லனா தனது படைப்பில் விவரித்தார்.[8] மேலும் எழுகந்தி பெத்தன்னாவின் பிராகிர்ண கணிதம், பாஸ்கரனின் லீலாவதி போன்ற தெலுங்கு மொழிபெயர்ப்பு பணிகளையும் தொடர்ந்தார்.[9][10]

வாழ்க்கை[தொகு]

பாவுலூரி மல்லன்னா 11ஆம் அல்லது 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இன்றைய ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியக் கணிதவியலாளர்.[1][2] சில வரலாற்றாசிரியர்கள் இவரை கிழக்கு சாளுக்கிய மன்னர் ராஜராஜ நரேந்திரனின் சமகாலத்தவர் என்று கருதுகின்றனர். [11][12] சிலர் இவரை 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வைக்கின்றனர்.[13][14] மல்லன்னா சைவ சமயத்தைச் சேர்ந்தவர்.[15][16] மல்லன்னா என்ற பெயரைக் கொண்ட இவரது பேரனும் ஓர் பிரபல எழுத்தாளர். இருப்பினும், சில வரலாற்றாசிரியர்கள் கணிதவியலாளரான பாவுலூரி மல்லன்னா கவிஞர் மல்லன்னாவின் பேரன் என்று கருதுகின்றனர். இராஜராஜ நரேந்திரன் பிதாபுரத்திற்கு அருகிலுள்ள நவ கந்தவாடா கிராமத்தை மல்லன்னாவுக்கு தானமாக வழங்கினார். ஆனால் மானியம் எந்த மல்லன்னாவைக் குறிக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. [17][18]

பணிகள்[தொகு]

மல்லன்னா, மகாவீரச்சார்யாவின் 9 ஆம் நூற்றாண்டின் சமசுகிருத கணிதக் கட்டுரையான கணித கணிதசாரசங்காரகம் என்பதை தெலுங்கில் சார சங்கிரக கணிதம் என மொழிபெயர்த்தார். இது பிரபலமாக பாவுலூரி கணிதமு என்று அழைக்கப்படுகிறது. [3][4] இது சமசுகிருதத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஒரு பிராந்திய மொழிக்கு ஒரு கணித உரையின் ஆரம்பகால மொழிபெயர்ப்பாகும். மேலும் தெலுங்கில் எழுதப்பட்ட பழமையான அறிவியல் உரையுமாகும்.[5][19][6] மல்லன்னா ஒரு சைவனாக இருப்பதால் கணித-சார-சம்கிரகாவிலுள்ள அனைத்து சமணக் குறிப்புகளையும் சைவ சொற்களஞ்சியத்துடன் மாற்றியமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.[16] அந்த காலத்தில் ஆந்திராவில் பயன்படுத்தப்பட்ட எடைகள், அளவுகள் மற்றும் நாணயங்களின் முறையையும் மல்லன்னா தனது படைப்பில் விவரித்தார்.[8][20][21]

மகாவீரரின் படைப்புகள் எட்டு அதிகாரங்கள் அல்லது தலைப்புகளில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், மல்லன்னா அதைத் தனது மொழிபெயர்ப்பில் பத்து தலைப்புகளாக மாற்றினார். முதல் தலைப்பு பாவுலூரி கணிதம் என பிரபலமாகியுள்ளது. மற்ற அத்தியாயங்கள் (காலவரிசைப்படி): பகாகர கணிதம், சுவர்க கணிதம், மிசுர கணிதம், பின்ன கணிதம், சேத்திர கணிதம், கடகணிதம், சாயா கணிதம், சூத்ர கணிதம், மற்றும் பிரகிர்ண கணிதம்.[22] கணிதத்தின் வரலாற்றாசிரியர் ஜார்ஜ் கெவர்கிஸ் ஜோசப், "மல்லன்னாவின் மொழிபெயர்ப்பு அதன் தெளிவு மற்றும் புதுமையின் காரணமாக எதிர்கால மொழிபெயர்ப்புகளுக்கு ஒரு முன்மாதிரியாக செயல்பட்டது" என்று குறிப்பிடுகிறார்.[23]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Rao, Sonti Venkata Suryanarayana (1999) (in en). Vignettes of Telugu Literature: A Concise History of Classical Telugu Literature. Jyeshtha Literary Trust. பக். 86. https://books.google.com/books?id=fXJkAAAAMAAJ&q=Pavuluri+Mallana. 
  2. 2.0 2.1 Raju, Poolla Tirupati (1944) (in en). ... Telugu Literature (Andhra Literature). P. E. N. All-Centre, Arysangha, Malabar Hill, Bombay. பக். 20. https://books.google.com/books?id=M48OAAAAYAAJ&q=pavuluri+mallana. 
  3. 3.0 3.1 Śrīnivās, Śiṣṭlā (2007) (in en). The Body as Temple: Erotica from Telugu (2nd Century B.C. to 21st Century A.D.). Drusya Kala Deepika. பக். 24. https://books.google.com/books?id=zUJJAQAAIAAJ&q=Pavuluri+Mallana. 
  4. 4.0 4.1 (in en) History and Culture of the Andhras. Komarraju Venkata Lakshmana Rau Vijnana Sarvaswa Sakha, Telugu University. 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-86073-07-0. https://books.google.com/books?id=HTluAAAAMAAJ&q=Pavuluri+Mallana. 
  5. 5.0 5.1 Yadav, B. S.; Mohan, Man (2011-01-20) (in en). Ancient Indian Leaps into Mathematics. Springer Science & Business Media. பக். 206. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8176-4695-0. https://books.google.com/books?id=nwrw0Lv1vXIC&q=mathematician+andhra&pg=PA206. 
  6. 6.0 6.1 Murthy, H. V. Sreenivasa (1975) (in en). History and Culture of South India, to 1336 A.D.. Vivek Prakashan. https://books.google.com/books?id=QMEBAAAAMAAJ&q=eluganti+peddana. 
  7. Murthy, Kothapalli Radhakrishna (1987) (in en). The Economic Conditions of Mediaeval Āndhradēsa: A.D. 1000-A.D. 1500. Sri Venkateswara Publications. பக். 10. https://books.google.com/books?id=PkAuAAAAMAAJ&q=Pavuluri+Mallana. 
  8. 8.0 8.1 (in en) History and Culture of the Andhras. Komarraju Venkata Lakshmana Rau Vijnana Sarvaswa Sakha, Telugu University. 1995. பக். 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-86073-07-0. https://books.google.com/books?id=HTluAAAAMAAJ&q=Pavuluri+Mallana+measures. 
  9. (in en) The Gazetteer of India: History and culture. Publications Division, Ministry of Information and Broadcasting. 1973. பக். 454. https://books.google.com/books?id=BXEMAAAAIAAJ&q=eluganti+peddana. 
  10. Luniya, Bhanwarlal Nathuram (1978) (in en). Life and Culture in Medieval India. Kamal Prakashan. பக். 305. https://books.google.com/books?id=2wFuAAAAMAAJ&q=eluganti+peddana. 
  11. The Journal of Sanskrit Academy, Osmania University. 13. Osmania University. Sanskrit Academy. 1991. பக். 11. https://books.google.com/books?id=bmFjAAAAMAAJ&q=pavuluri+Mallana. 
  12. Rao, S. Balachandra (1998) (in en). Indian Mathematics and Astronomy: Some Landmarks. Jnana Deep Publications. பக். 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-900962-0-1. https://books.google.com/books?id=3MzaAAAAMAAJ&q=pavuluri+Mallana. 
  13. Vēṅkaṭakr̥ṣṇarāvu, Bhāvarāju (1973) (in en). History of the Eastern Chalukyas of Vengi, 610-1210 A.D.. Andhra Pradesh Sahitya Akademi. https://books.google.com/books?id=1ZIBAAAAMAAJ&q=Pavuluri+Mallana. 
  14. Satyanarayana, Kambhampati (1975) (in en). From stone age to feudalism. People's Publishing House. பக். 331, 365. https://books.google.com/books?id=Nda1AAAAIAAJ&q=Pavuluri+Mallana. 
  15. G. V., Subrahmanyam (1997). Ayyappa Paniker. ed (in en). Medieval Indian Literature: Surveys and selections. Sahitya Akademi. பக். 536, 537. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-260-0365-5. https://books.google.com/books?id=KYLpvaKJIMEC&dq=pavuluri+Mallana&pg=PA536. 
  16. 16.0 16.1 P. Chenna Reddy, தொகுப்பாசிரியர் (2006) (in en). Mahāsenasiri: Riches of Indian Archaeological & Cultural Studies : a Felicitation Volume in Honour of Dr. I. K. Sarma. Sharada Publishing Company. பக். 584. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-88934-38-6. https://books.google.com/books?id=wv5tAAAAMAAJ&q=pavuluri+Mallana. 
  17. Suryanarayana, Kolluru (1986) (in en). History of the Minor Chāḷukya Families in Medieval Āndhradēśa. B.R. Publishing Corporation. பக். 247. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7018-330-3. https://books.google.com/books?id=f6seAAAAMAAJ&q=Pavuluri+Mallana. 
  18. Yashoda Devi (1993–1995). The history of Andhra country, 1000 A.D.-1500 A.D.. New Delhi: Gyan Pub. House. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-212-0438-0. இணையக் கணினி நூலக மையம்:29595404. 
  19. Ramakrishna, G.; Gayathri, N.; Chattopadhyaya, Debiprasad (1983) (in en). An Encyclopaedia of South Indian Culture. K.P. Bagchi. பக். 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8364-1188-1. https://books.google.com/books?id=BIkeAAAAMAAJ&q=Pavuluri+Mallana. 
  20. Hemalatha, B. (1991) (in en). Life in Medieval Northern Andhra: Based on the Inscriptions from the Temples of Mukhalingam, Srikurmam, and Simhachalam. Navrang. பக். 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7013-086-4. https://books.google.com/books?id=cdq1AAAAIAAJ&q=Pavuluri+Mallana+measures. 
  21. Pramila, Kasturi (2002) (in en). Economic and Social Conditions of Āndhra Deśa, A.D. 1000 to 1323 A.D.. Bharatiay Kala Prakashan. பக். 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-86050-92-7. https://books.google.com/books?id=xOrsAAAAMAAJ&q=Pavuluri+Mallana+measures. 
  22. Krishnamurthi, Salva (1994) (in en). A History of Telugu Literature. Institute of Asian Studies. https://books.google.com/books?id=UJBkAAAAMAAJ&q=Pavuluri. 
  23. George Gheverghese Joseph (2016-07-28) (in en). Indian Mathematics: Engaging With The World From Ancient To Modern Times. World Scientific. பக். 431. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-78634-063-4. https://books.google.com/books?id=XIj4DAAAQBAJ&q=Pavuluri+Mallana&pg=PA431. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவுலூரி_மல்லனா&oldid=3802815" இலிருந்து மீள்விக்கப்பட்டது