பயனர் பேச்சு:Shanmugamp7/தொகுப்பு 1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படம்[தொகு]

File extension does not match MIME type சிக்கல் படக்கோப்புகளை பிற தளங்களில் இருந்து தரவிறக்கி இங்கு ஏற்றும் போது ஏற்படும். வலைத்தளக்காரர்கள் கோப்பு அளவைச் சுருக்க செய்யும் வேலைகளால் ஏற்படலாம். நீங்கள் எடுத்த படத்தில் இவ்வாறு சிக்கல் இருந்தால், அதனை mspaint/photoshop போன்ற மென்பொருள்கள் கொண்டு வேறு பெயரில் சேமித்து பின் பதிவேற்றிப் பாருங்கள். பிற தளங்களில் இருந்து எடுத்தவை என்றால் url கொடுங்கள் சோதித்துப் பார்க்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:36, 1 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

தொழில்நுட்ப சிக்கலை ஆராயும் முன், பதிப்புரிமை சிக்கல் வருகிறது. தமிழக அரசு தளத்திலுள்ளதை நாம் இங்கு பதிப்புரிமை சிக்கல்களால் பதிவேற்றவியலாது. இந்தியாவின் மாநில, மத்திய அரசுகள் அவர்களது படைப்புகள் அனைத்துக்கும் பதிப்புரிமையை அவர்களே வைத்துள்ளனர். விக்கிப்பீடியாவில் பயன்படுத்த கட்டற்ற பதிப்புரிமங்கள் (GFDL, CC BY SA) உடைய படங்கள் வேண்டும். எனவே அரசு வலைத்தளத்தில் உள்ள எதையும் இங்கு ஏற்ற முடியாது (துரதர்ஷ்டவசமாக :-) )--சோடாபாட்டில்உரையாடுக 15:05, 1 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]


உதவி[தொகு]

வணக்கம் நான் தமிழ் விக்கியில் சிலகணினி விளையாட்டுகளுக்கான கட்டுரைகளை உருவாக்கலாம் என நினைக்கிறன்.அவற்றின் தலைப்பை எவ்வாறு மொழிபெயர்ப்பது. எ.கா. age of empires ஐ ஏஜ் ஆப் எம்பயர்ஸ் என்பதா? அல்லது அதை தமிழில் அப்படியே மொழிபெயர்ப்பதா (பேரரசுகளின் காலங்கள்)? நன்றி.

பெயர்ச்சொற்களை அப்படியே எழுத்துப்பெயர்த்தால் போதும், மொழி பெயர்க்க வேண்டாம். எ.கா. ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ்: ரைஸ் ஆஃப் ரோம் (இது தான் நான் கடைசியாக ஆடிய பதிப்பு.. ஏஜ் ஆஃப் கிங்க்ஸ் வரை கூடத் தாங்கவில்லை :-))--சோடாபாட்டில்உரையாடுக 11:28, 14 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

சிறப்புப் பதக்கம்
மொழிபெயர்ப்பு விக்கியின் மொழிபெயர்ப்புத் தொடரில் பங்கேற்று ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தொடர்களை தமிழில் மொழிபெயர்த்தமைக்காக இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 03:43, 13 சனவரி 2012 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மிக்க நன்றி ஐயா.....இந்த ஒரு மாதத்தில் 3500 ஐ எட்டி விட்டேன்...தொடர்ந்து அதிலும் மொழிபெயர்த்து கொண்டிருக்கிறேன்...shanmugam 03:50, 13 சனவரி 2012 (UTC)[பதிலளி]
மிகப் பயனுள்ள பணி..வாழ்த்துகள் !--மணியன் 04:47, 13 சனவரி 2012 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி....shanmugam 04:58, 13 சனவரி 2012 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

பதாகையில் எழுத்துப்பிழை திருத்தியமைக்கு நன்றி :) ஸ்ரீகாந்த் 04:27, 18 சனவரி 2012 (UTC)[பதிலளி]

பரவாயில்லை திரு ஸ்ரீகாந்த்...இரண்டாம் வரிக்கு அடுத்து உள்ள இடைவெளி சற்று அதிகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.--shanmugam 04:31, 18 சனவரி 2012 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
உங்களது தொகுப்புகள் அசத்துகின்றன. எனவே, உங்களுக்கு இப்பதக்கத்தைக் கொடுத்து மகிழ்கிறேன். உங்களது சீரிய பணி சிறக்க வாழ்த்துகள். :)  சூர்யபிரகாஷ்  உரையாடுக 16:50, 21 சனவரி 2012 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி சூர்யா--shanmugam 16:55, 21 சனவரி 2012 (UTC)[பதிலளி]

வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம்[தொகு]

வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம் கட்டுரையின் வடிவமைப்பை அழகாக மெருகேற்றி பவுல் விரும்பிய வார்ப்புருவையும் இட்டு உதவியமைக்கு மிக்க நன்றிகள் !!--மணியன் 16:44, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]

எதோ என்னால் இயன்ற அளவு செய்துள்ளேன் ......--shanmugam 17:51, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]
தமிழில் வார்ப்புருவை எழிலுற ஆக்கி, கட்டுரையில் இணைத்தமைக்கு நானும் நன்றி கூறுகின்றேன். சிறு திருத்தங்களும் செய்துள்ளேன். --பவுல்-Paul 18:51, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]
நன்றி பவுல்.....நானும் கவனித்தேன்....--shanmugam 19:08, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

இந்தோனீசிய மீச்சிறு கெண்டை பக்கத்தில் படத்தைச் சேர்த்தமைக்கு நன்றி :) --செல்வா 04:18, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

பரவாயில்லை ஐயா ... அதன் வார்ப்புருவில் எதோ தவறு என நினைக்கிறேன்... சாதரணமாக கோப்பு பெயரை இட்டால் படம் தெரியவில்லை..எனவே எப்போதும் படத்தை சேர்ப்பது போல் சேர்த்துள்ளேன்....--shanmugam 04:22, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

கோவை விக்கியர் சந்திப்பு[தொகு]

வரும் ஞாயிரன்று கோவையில் விக்கியர் சந்திப்பு ஒன்று நிகழவுள்ளது. கலந்து கொள்ள அழைக்கிறேன். :-) https://meta.wikimedia.org/wiki/Meetup/Coimbatore/Coimbatore2 --சோடாபாட்டில்உரையாடுக 07:34, 7 பெப்ரவரி 2012 (UTC)

அயராத உழைப்பு![தொகு]

சண்முகம்...
நீங்கள் தூங்குவிங்களா மாட்டிங்களா...? தமிழ் விக்கிப்பீடியாவில் அயராது உழைக்கிறீர்! எனது பாராட்டுகளும் நன்றிகளும் உங்களுக்கு உரித்தாகுகின்றன. --மா. செல்வசிவகுருநாதன் 19:29, 8 பெப்ரவரி 2012 (UTC)

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி..செல்வகுருநாதன்.. எனது கணினியில் எப்போதும் விக்கியின் அண்மைய மாற்றங்கள் பக்கம் ஒரு தத்தலில் (tab) இருக்கும்...--shanmugam 02:38, 9 பெப்ரவரி 2012 (UTC)

தொடர்ந்து தமிழ் விக்கிக்குப் பன்முகப் பங்காற்றி வருகிறீர்கள். எனது உளமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்க விரும்புகிறேன். நன்றி--இரவி 20:49, 16 பெப்ரவரி 2012 (UTC)

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி... எதோ என்னால் இயன்ற அளவு பங்களிப்பை செய்து வருகிறேன்...--shanmugam 20:54, 16 பெப்ரவரி 2012 (UTC)

இலங்கையில் கல்லூரிகள்[தொகு]

சண்முகம், இலங்கையில் கல்லூரிகள் என உள்ளவை பெரும்பாலானவை உயர்தரப் பள்ளிகளே. இவை உயர் கல்வி நிலையங்கள் அல்ல. பார்க்க: இலங்கைப் பாடசாலைகள்.--Kanags \உரையாடுக 09:25, 19 பெப்ரவரி 2012 (UTC)

ஹாட்கேட்டில் இலங்கை என அடித்ததில் இலங்கை உயர் கல்வி நிலையங்கள் என வந்தது. மேலும் கல்லூரி என்றால் இங்கே (இந்தியாவில்) உயர்கல்வி தானே.. அதனால் தான் அதை சேர்த்து விட்டேன்.. இனி திருத்திக் கொள்கிறேன்...சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி--shanmugam 09:33, 19 பெப்ரவரி 2012 (UTC)

பதக்கம்[தொகு]

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
படிப்புகளுக்கு மத்தியிலும்... ஓய்வின்றி, பல்வேறுவகைப்பட்ட பணிகளை இங்கு செய்கிறீர்கள். உங்களுக்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும்! என்றென்றும் அன்புடன்... மா. செல்வசிவகுருநாதன் 18:01, 25 பெப்ரவரி 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி செல்வகுருநாதன்.. என்னால் இயன்ற அளவு தாங்கள் பாராட்டுகளுக்கு தகுதியானவனாக இருக்க முயல்வேன்...--shanmugam 19:03, 25 பெப்ரவரி 2012 (UTC)

115.248.237.242 செய்த தொகுப்பு[தொகு]

சண்முகம், தாங்கள் புதுப்பயனர்களை வரவேற்பது உள்ளிட்ட பல்வேறு விக்கிப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுவது கண்டு மகிழ்கிறேன். யாளி கட்டுரையில் 115.248.237.242 முகவரி உடைய பயனர் செய்த தொகுப்பு சோதனை முயற்சியின் கீழ் வராது எனக் கருதுகிறேன். யாளி ஒரு கற்பனை உயிரினம் இல்லை என்று கூற முற்பட்டுள்ளதாகவே கருதுகிறேன். யாளி ஒரு கற்பனையான உயிரினம் இல்லை என்று சொல்ல இயலாது. எனவே, கற்பனை என்பதற்குப் பதில் தொன்ம உயிரினம் என்று குறிப்பிட்டுக் கட்டுரையை உரை திருத்தி உள்ளேன். குறிப்பிட்ட பயனருக்கு {{anonymous}} வார்ப்புரு இட்டுள்ளேன். நன்றி--இரவி (பேச்சு) 08:07, 2 மார்ச் 2012 (UTC)

நான் அவர் கற்பனை என்பதை நீக்கியதால் அவ்வார்ப்புருவை இட்டுவிட்டேன்..இனி சரி செய்துகொள்கிறேன்.. சுட்டி காட்டியமைக்கு நன்றி--shanmugam (பேச்சு) 08:20, 2 மார்ச் 2012 (UTC)

sq விக்கியில் உங்கள் பயனர் பெயரில் ஒருவரா? கடவுச் சொல் மீட்க முயன்றீர்களா? அது நீங்களாகக் கூட இருக்கலாம் :) எனக்கு இப்படி நேர்ந்துள்ளதால் சொல்கிறேன். அந்த மூன்று அதிகாரிப் பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் தகவல் தெரிவியுங்கள். மறுமொழி இல்லாத பட்சத்தில் மேல் விக்கியில் கோரலாம்--இரவி (பேச்சு) 14:49, 6 மார்ச் 2012 (UTC)

கடவுச்சொல் மீட்கவும் இயலவில்லை.. பயனர் பெயர் கொடுத்தால் பயனருக்கு மின்னஞ்சல் முகவரி ஏதுமில்லை என வருகிறது என நினைக்கிறேன் (Registry no address for the user "Shanmugamp7". google translated ). புதிய கணக்கு உருவாக்கி தகவல் தெரிவிக்க வேண்டுமா? அல்லது புகுபதிகை செய்யாமலேயே தகவல் தெரிவிக்க வேண்டுமா?..--shanmugam (பேச்சு) 15:18, 6 மார்ச் 2012 (UTC)

புகுபதியத் தேவை இல்லை. உங்கள் ஆங்கில விக்கி பேச்சுப் பக்கத்துக்கு இணைப்பு தாருங்கள். மின்மடல் முகவரியும் தரலாம். உங்களைத் தொடர்பு கொள்ள உதவும். மேல் விக்கியில் உதவுவோர், குறிப்பிட்ட விக்கியில் நீங்கள் முறைப்படி வினவி உள்ளீர்களா என்று பார்ப்பார்கள். --இரவி (பேச்சு) 16:04, 6 மார்ச் 2012 (UTC)

அவ்வாறே செய்கிறேன்..உடனடி உதவிக்கு மிக்க நன்றி இரவி--shanmugam (பேச்சு) 16:05, 6 மார்ச் 2012 (UTC)

முதற்பக்க அறிமுகம் வேண்டல்[தொகு]

உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சண்முகம் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவல், புகைப்படத்தைப் பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி--இரவி (பேச்சு) 14:52, 6 மார்ச் 2012 (UTC)

Y ஆயிற்று- சரிபார்த்துக் கொள்ளவும் இரவி--shanmugam (பேச்சு) 17:03, 6 மார்ச் 2012 (UTC)

நன்றி, சண்முகம். இன்றில் இருந்து இரு வாரங்களுக்குத் தங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 12:31, 7 மார்ச் 2012 (UTC)

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி இரவி.. என்னால் இயன்ற அளவு பங்களிக்க முயல்வேன்--shanmugam (பேச்சு) 12:48, 7 மார்ச் 2012 (UTC)

விக்கி பராமரிப்பு வார்ப்புருக்கள்[தொகு]

சண்முகம், எவரேனும் ஒரு நிருவாகப் பயனர் அண்மைய மாற்றங்களில் வரும் பொருத்தமில்லா தொகுப்புகளைக் கண்டு உடனுக்கு உடன் நீக்கி விடுவது வழமை. எனவே, delete போன்ற வார்ப்புருக்களை இடுவது தங்களுக்குக் கூடுதல் பணிச்சுமையாகவே தோன்றுகிறது. பழைய கட்டுரைகளில் ஏதேனும் பொருத்தமில்லாமல் தென்பட்டால் இத்தகைய வார்ப்புருக்களை இடலாம். நன்றி--இரவி (பேச்சு) 15:01, 6 மார்ச் 2012 (UTC)

நான் IRC #cvn-sw வில் பல நேரங்களில் இருப்பேன்.. அப்படி இருக்கும்போது அங்கே tiny article created என வந்தால் அப்படியே சொடுக்கி சரிபார்த்து தொடுப்பிணைப்பி மூலம் delete வார்ப்புவை இட்டு விடுவேன்.. இது ஒரு பெரிய பணியாக தோன்றவில்லை.. இருந்தாலும் இது த.விக்கி போன்ற குறைந்த அண்மைய மாற்றங்கள் கொண்ட விக்கிக்கு தேவையில்லாத பணி எனவே தோன்றுகிறது.. இனி நிறைய நேரம் நீக்கப்படாமல் இருக்கும் பக்கங்களுக்கு மேலும் பதிப்புரிமை மீறக்கூடிய பக்கங்களுக்கு மட்டும் இவார்ப்புருவை இடுகிறேன் சரிதானே.. --shanmugam (பேச்சு) 15:10, 6 மார்ச் 2012 (UTC)
ஆங்கில விக்கி போன்ற பெரிய விக்கிகளுக்கு எவ்வளவு கட்டுரை உருவாக்கப்பட்டது என்பதை அண்மைய மாற்றங்களில் பார்ப்பது கடினம்.. எனவே அங்கே அந்தந்த பகுப்புகள் மூலம் அதை அடையாளம் காண அவ்வாறு செய்கிறார்கள் என நினைக்கிறேன்.. ஏனெனில் நான் ஆங்கில விக்கியில் எதாவது செய்யச் சென்றால் new page patrolling சென்று இதை (வார்ப்புரு இடுவதை )மட்டும்தான் செய்வேன் :):)--shanmugam (பேச்சு) 15:38, 6 மார்ச் 2012 (UTC)

ஆம், த. வி. போன்ற சிறிய விக்கிகளில் இவ்வாறு வார்ப்புரு இடும் தேவை இல்லை--இரவி (பேச்சு) 16:04, 6 மார்ச் 2012 (UTC)

பக்கங்களை நகர்த்தல்[தொகு]

சண்முகம், பக்கங்களை வேறு தலைப்புக்கு நகர்த்தும் போது, அதன் உரையாடல் பக்கத்தையும் சேர்த்து நகர்த்துங்கள்.--Kanags \உரையாடுக 08:20, 7 மார்ச் 2012 (UTC)

நான் நகர்த்தவில்லை சிறீதரன்... வழிமாற்றி பக்கங்களின் பேச்சுப் பக்கத்தில் உரையாடலை ஆரம்பித்து விட்டேன்..இபோதுதான் புரிந்தது அதை யாரும் சாதாரணமாக கட்டுரையை படிக்கும் போது பார்க்க இயலாது என்பது.இனி சரிசெய்து கொள்கிறேன்.. நன்றி:)--shanmugam (பேச்சு) 11:40, 7 மார்ச் 2012 (UTC)

முதற்பக்கத்தில் உங்கள் அறிமுகம்[தொகு]

சண்முகம், உங்கள் அறிமுகத்தை முதற்பக்கத்தில் கண்டு மகிழ்ந்தேன்! நல்வாழ்த்துகள்! மிக நன்றாக இங்கும் திரான்சிலேட்டு விக்கியிலும் பங்களித்து வருகின்றீர்கள். என் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கின்றேன். --செல்வா (பேச்சு) 19:51, 7 மார்ச் 2012 (UTC)

உங்களைப் போன்ற துடிப்பான மாணவர்கள் தங்கள் கல்விப்பளுவிற்கும் இடையே தமிழ் விக்கிக்கு பங்களிப்பது மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்புகளையும் கொடுக்கிறது. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 01:16, 8 மார்ச் 2012 (UTC)
மிக்க நன்றி செல்வா, மணியன்... தங்களைப் போன்றோர்களின் ஊக்கங்களே என்னை மென்மேலும் பங்களிக்கத் தூண்டுகின்றன.. --shanmugam (பேச்சு) 01:44, 8 மார்ச் 2012 (UTC)
உங்களைப் பற்றி இன்று தான் அறிந்தேன். ஊக்கமாகப் பங்களித்து வருவதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மணியன் மேலே கூறியிருப்பதையும் வழிமொழிகிறேன். --இரா. செல்வராசு (பேச்சு) 02:14, 8 மார்ச் 2012 (UTC)
மிக்க நன்றி செல்வராசு..--shanmugam (பேச்சு) 02:27, 8 மார்ச் 2012 (UTC)
மிக்க நன்றி தேனி.எம்.சுப்பிரமணி..:)--shanmugam (பேச்சு) 02:39, 8 மார்ச் 2012 (UTC)
அறிமுகம் கண்டேன். மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் சண்முகம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:52, 8 மார்ச் 2012 (UTC)
மிக்க நன்றி சஞ்சீவி சிவகுமார்..--shanmugam (பேச்சு) 05:00, 8 மார்ச் 2012 (UTC)
  • சண்முகம், தாங்கள் ஆற்றிவரும் விக்கிப் பணிக்குப் பாராட்டு! பணி தொடர வாழ்த்துகின்றேன்!--பவுல்-Paul (பேச்சு) 05:11, 8 மார்ச் 2012 (UTC)
மிக்க நன்றி பவுல்--shanmugam (பேச்சு) 05:16, 8 மார்ச் 2012 (UTC)
  • சண்முகம்... உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! வாழ்த்துகள்!

இந்த நேரத்தில் உங்களிடம் ஒரு கோரிக்கை: நீங்கள் இதுவரை செய்யாத (எனக்குத் தெரிந்தவரையில்) ஒரு பணி இருக்கிறது... உங்களின் நண்பர்கள் மத்தியில் தமிழ் விக்கிப்பீடியா குறித்து பரப்புரை செய்து அவர்களையும் பங்கு பெறச் செய்யுங்கள். (தமிழில் எழுதப் பயப்படுபவர்களை, ஆங்கிலத்தில் எழுதுமாறு கேட்கலாம்.) உங்களைப் போன்ற கல்லூரி மாணவர்கள், தங்களின் படிப்பு மற்றும் பிற முன்னேற்ற முயற்சிகளுக்கு ஒதுக்கியது போக., மீதமுள்ள நேரத்தை இம்மாதிரியான கலைக்களஞ்சிய விரிவுபடுத்தலுக்கு செலவிட்டால்... அவர்களின் அறிவும் விருத்தியடையும்; இந்த சமுதாயமும் மொழியும் நற்பலன்களைப் பெறும்! நன்றி!
[கூடுதல் வேண்டுகோள்: இயந்திரப் பொறியியல் குறித்த கட்டுரைகள் நிறைய உருவாக்க வேண்டியுள்ளது. இணைந்து செய்யலாமா?] --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:27, 8 மார்ச் 2012 (UTC)

தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி செல்வகுருநாதன்..கண்டிப்பாக என் நண்பர்கள் மத்தியில் சொல்கிறேன்..
இயந்திரப் பொறியியல் பற்றியும் கண்டிப்பாக எழுதலாம்(எழுத வேண்டும்:) ), நீங்கள் தலைப்புகளை சொல்லுங்கள்.. இருவரும் சேர்ந்தே எழுதலாம்... இயந்திர மின்னனுவியல் பற்றியும் எழுத வேண்டும்.. ரோபோ பற்றிய ஒரு கட்டுரை இருக்கிறது.. ஆனால் அது கூகிள் தமிழாக்கக் கட்டுரை.. அதை திருத்த மிகவும் கஷ்டமாக இருந்ததது. எனவே அதனை நீக்கிவிட்டு புதிதாக எழுதிவிடலாம் என திருத்தாமல் விட்டுவிட்டேன்.. கலைச்சொற்கள் நிறைய தேவைப்படும் என நினைக்கிறேன்.. --shanmugam (பேச்சு) 02:26, 9 மார்ச் 2012 (UTC)

தங்களின் முதற்பக்க அறிமுகம் கண்டேன்(சற்றே தாமதத்துடன்).மகிழ்ச்சி. கற்கும் பணிக்கிடையிலும் விக்கியில் தங்களின் பங்களிப்பு பாராட்டுதலுக்குரியது..தங்களின் பணி விக்கியில் தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்!..--பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:50, 11 மார்ச் 2012 (UTC)

மிக்க நன்றி :)--shanmugam (பேச்சு) 08:35, 11 மார்ச் 2012 (UTC)

ஊடகப்போட்டி[தொகு]

இங்கு சற்று விவரித்துள்ளேன்.உடன் பதில் எழுத இயலவில்லை.அதற்காக வருந்துகிறேன். உங்கள் மின்னஞ்சலைஅனுப்புக.எனதுtha.uzhavanஅட் ஜிமெயில் டாட் காம். பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

சிறப்பு:Emailuser உபயோகப்படுத்தலாமே... எனினும் தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.--shanmugam (பேச்சு) 12:48, 8 மார்ச் 2012 (UTC)
மேலே கூறியவற்றை இன்னும் 3,4 நாட்களில் கவனித்தால் நன்றாக இருக்கும்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
ஏற்கனவே பகுப்பக்கம் செய்து வருகிறேன் தகவலுழவன்.. பார்க்க [1]... கண்டிப்பாக மேலே கூறியவற்றையும் இன்றைக்குள் சரிசெய்ய முயல்கிறேன்--shanmugam (பேச்சு) 06:16, 17 மார்ச் 2012 (UTC)
ஓ..நன்றி.பெயர் மாற்றலை இன்று முடித்து விடுவேன்.நீங்கள் பகுப்பாக்கலைத்தொடரக் கேட்டுக்கொள்கிறேன்.வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

சுட்டியமைக்கு நன்றி![தொகு]

  1. பார்க்க: பேச்சு:பத்தாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)
  2. சிவா எனும் பெயரில் தொடங்கப்பட்ட பக்கத்தை பயனர் பக்கத்திற்கு நகர்த்தியது குறித்து...

தவறுதான், மன்னிக்கவும். நம் சக பயனர் ஒருவர் செய்ததைப் பார்த்து நானும் அதே போல செய்துவிட்டேன். ஆனால் அப்படி செய்வது சரியல்ல; இது போன்ற பிரச்னை உள்ளது. கொஞ்சம் பொறுங்கள், நடந்த தவறை பழுது நீக்குதல் (repair) செய்கிறேன். என்னால் முடியாவிட்டால், நிர்வாகி ஒருவரின் உதவியை நாடுகிறேன். (இணையத்தள இணைப்புக் குறைபாடு ஒரு வாரமாக படுத்துகிறது!) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:18, 10 மார்ச் 2012 (UTC)

மன்னிப்பெல்லாம் எதற்கு செல்வகுருநாதன்.. இது ஒன்றும் பெரிய தவறு அல்லவே.. நகர்த்தலை எப்போது செய்யலாம் எனில் ஒரு புகுபதிகை செய்த பயனர் தன்னுடைய விவரங்களை தனிக்கட்டுரையாக உருவாக்கினால் அப்போது அவருடைய பயனர் வெளிக்கு நகர்த்தலாம்.. அந்த பக்கத்தை நீக்கச் சொல்லிவிடுங்கள் சரியாகிவிடும்...நமக்குள் எதற்கு மன்னிப்பெல்லாம்..அப்போதே அதை சரிசெய்திருப்பேன்.. இருந்தாலும் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றுதான் அவ்வாறு செய்யவில்லை..
அப்புறம் பத்தாம் நாள் குருச்சேத்திரப் போர் பற்றி நீங்கள் எழுதுங்கள்... ஆங்கில உள்ளடக்கம் இருந்ததால் அதை நீக்க வேண்டுகோள் விடுத்தேன்.. தாங்கள் யாரிடமும் கேட்க வேண்டியதில்லை.. தாராளமாக நீக்கல் வேண்டுகோளை நீக்கிவிட்டு தங்களால் விரிவாக்கம் செய்ய இயலுமெனில் செய்யலாம்:)..(இரவி த.விக்கிக்கு நீக்கல் வேண்டுகோள் விடுப்பது தேவையில்லை என கூறியுள்ளார் எனினும் பழக்கதோஷம் போக மாட்டேன் என்கிறது :) )--shanmugam (பேச்சு) 14:26, 10 மார்ச் 2012 (UTC)

குருச்சேத்திரப் போரின் முதல் 9 தினங்கள் குறித்து எழுதிவிட்டேன். மீதமுள்ள 9 தினங்கள் குறித்து எழுதவேண்டும். இது ஒரு நிலுவையில் உள்ள வேலையாகும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:13, 10 மார்ச் 2012 (UTC)

நன்றி[தொகு]

உங்கள் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன். உங்களைப் போன்ற பலரும் தமிழ் விக்கிப்பீடியாவின் இணைந்து பங்களிப்பதே, இன்னும் கூடிய உற்சாகத்துடன் அனைவரையும் பங்களிக்க வைக்கிறது. நன்றி.--இரவி (பேச்சு) 07:17, 14 மார்ச் 2012 (UTC)

கடம்பு, சுள்ளி மலர்கள்[தொகு]

அன்புள்ள சண்முகம், உங்கள் தொண்டையும், துடிப்பையும் பாராட்டுகிறேன். கடம்பு என்னும் மலரைச் சுள்ளி மலரோடு இணைத்துள்ளீர்கள். சான்று இருந்தால் தெரிவிக்கவும். இன்றேல் கடம்ப மலர் கட்டுரையை முன்பு இருந்தது போல் பிரித்துவிடவும். கடம்பு மலர் பற்றிய சங்ககாலச் செய்திகளை விரிவாக இணைக்கவேண்டியுள்ளது. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 12:34, 18 மார்ச் 2012 (UTC)
சுள்ளிமலர் என்பது கடப்பம்பூ. கடம்பு என்னும் மரத்தில் பூக்கும் பூ....
வணக்கம் ஐயா.. தாங்கள் மேற்கண்ட வரியை சுள்ளிமலர் கட்டுரையில் கொடுத்திருந்ததால் அவ்வாறு செய்தேன்... இவ்விரண்டும் வெவ்வேறேனில் கடப்பம்பூ என்ற கட்டுரையை சொடுக்குங்கள்.. அதில் (கடப்பம்பூ இலிருந்து வழிமாற்றப்பட்டது) என வரும்.. அதில் கடப்பம்பூ என்பதை சொடுக்கி தொகுவை அழுத்தி redirect[[சுள்ளி மலர்]] என இருப்பதை நீக்கிவிட்டு புது உள்ளடக்கத்தை சேர்த்துவிடுங்கள்...நன்றி...(ஒரு சிறு வேண்டுகோள் என்னுடன் உரையாட என் உரையாடல் பக்கத்தை உபயோகப்படுத்துங்கள்.. தவறுதலாக பயனர் பக்கத்தை உபயோகப்படுத்தி விட்டீர்கள் என நினைக்கிறேன்..) --shanmugam (பேச்சு) 13:25, 18 மார்ச் 2012 (UTC)

பதிப்புரிமை மீறல்[தொகு]

சண்முகம், பதிப்புரிமை மீறல் தெரியவந்தால் தயங்காமல் உடனே முன்நிலையாக்கிவிடுங்கள் -- மாகிர் (பேச்சு) 13:15, 26 மார்ச் 2012 (UTC)

சரி மாகிர்--shanmugam (பேச்சு) 13:21, 26 மார்ச் 2012 (UTC)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்[தொகு]

தங்களுடைய தகவலுக்கு நன்றி. அவர் நீக்கிய காரணம் சரியாகத்தெரியாததால் நான் அதை சேர்த்தேன். அதை நீக்கி விடுகிறேன். Abdul raja (பேச்சு) 18:34, 26 மார்ச் 2012 (UTC)

நன்றி Abdul raja.. தங்களுடைய பேச்சுப் பக்கத்திலேயே பதிலளிக்கலாம்.. என் கவனிப்புப் பட்டியலில் இருக்கும்.. :)--shanmugam (பேச்சு) 18:38, 26 மார்ச் 2012 (UTC)

நீலம் மலர்[தொகு]

அன்புள்ள சண்முகம், இந்தப் பக்கத்துக்கு வருவதை நீங்கள் விரும்பவில்லை என்பதை அறிவேன். என்றாலும் எய்தவன் இருக்க அம்பை நோகமுடியாது. தமிழின் எதிர்காலம் என்னைப் போன்ற கிழட்டுப்பயல்கள் கையில் இல்லை. உங்களைப் போன்ற இளைஞர் கையில்தான் உள்ளது. நீலம் மலர் பேச்சு பாருங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 06:53, 29 மார்ச் 2012 (UTC)

ஐயா தங்களைப் போன்ற அறிஞர்கள் இல்லமால் எங்களைப் போன்றோர் எதுவும் செய்ய இயலாது.. தங்களின் கேள்விக்கு அங்கேயே பதிலத்துள்ளேன்.. மேலும் இந்தப் பக்கத்திற்கு நீங்கள் வருவதை நான் எப்போதும் விரும்பாமல் இருந்ததில்லை...நன்றி... ஒரு சிறு விண்ணப்பம் //எய்தவன் இருக்க அம்பை நோகமுடியாது//. என்பதன் பொருள் எனக்கு விளங்கவில்லை.. சற்று விளங்குமாறு கூறினால் நன்று..--shanmugam (பேச்சு) 09:50, 29 மார்ச் 2012 (UTC)

சன்முகம், தானுலவியில் நன்கு பரிச்சயமாகி இருந்தால், பராமரிப்புப் பணிகள் உங்களால் இயலுமானால், தனிக்கணக்கு (with bot as suffix) தொடங்கி அணுக்கம் கோருங்கள். அல்லது இன்னும் சிறிது காலம் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். பார்க்க:தானுலவி -- மாகிர் (பேச்சு) 03:59, 31 மார்ச் 2012 (UTC)

இப்போதைக்கு பகுப்பு மாற்றம் மற்றும் உரையை சேர்த்தல் மட்டும் ஓரளவிற்கு பயிற்சி எடுத்தாகியாயிற்று மாகிர்.. மற்ற வசதிகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. விரைவில் தானியங்கி கணக்கு உருவாக்கி விடலாம்.. :)--shanmugam (பேச்சு) 04:05, 31 மார்ச் 2012 (UTC)