பட்டைத்தலை வாத்து
| பட்டைத்தலை வாத்து | ||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||||||
|
அக்கறை வேண்டாதவை LC (IUCN3.1) [1]
|
||||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||||
|
||||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||||
| Anser indicus (ஜான் லேதம், 1790) |
||||||||||||||||||
| வேறு பெயர்கள் | ||||||||||||||||||
|
Eulabeia indica |
பட்டைத்தலை வாத்து (Bar-headed Goose, Anser indicus), நடு ஆசியாவின் மலை ஏரிகளில் இனப்பெருக்கம் செய்து தெற்காசியாவிற்கு வலசை போகும் வாத்து இனமாகும்; மிக அதிக உயரத்தில் பறந்து செல்லும் பறவையாக இது இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[2]
பொருளடக்கம் |
உடலியல் விளக்கம் [தொகு]
மயிலை நிறமும்[3] பழுப்பு நிறமும் கூடிய உடலும் வெண்ணிற தலையும் கழுத்தும் கொண்டு விளங்கும் வாத்து; பிடரியில் காணப்படும் இரு கரும்பட்டைகள் இதன் பெயர்க்காரணமாக அமைந்தன. ஆண் வாத்திற்கும் பெண் வாத்திற்கும் வேறுபாடு காணப்படுவதில்லை [4]. அளவில் நடுத்தர வாத்து என்ற பிரிவிலுள்ள பட்டைத்தலை வாத்து, 71–76 cm (28–30 in) மொத்த நீளமும் 1.87–3.2 kg (4.1–7.1 lb) எடையும் கொண்டது. [5]
சூழலியல் [தொகு]
இதன் வெயிற்கால வாழ்விடம் மலை ஆறுகளாகும்; அங்குள்ள சிறு புல் பூண்டுகள் இதன் உணவாகும். நடு ஆசிய நாடுகளான மங்கோலியா, கசகசுதான், கிரிகிசுதான், தசிகிசுதான், மேற்கு சீனா [6], இந்தியாவில் லதாக், திபெத் [7] ஆகிய இடங்களில் பட்டைத்தலை வாத்துகள் இனப்பெருக்கம் செய்கின்றன.
படங்கள் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ BirdLife International (2012). "Anser indicus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல். Version 2012.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்த்த நாள் 26 November 2012.
- ↑ Bangor University Research & Innovation Office[1]
- ↑ தமிழ் அகரமுதலி [2]
- ↑ The Book of Indian Birds - Salim Ali பக். 380 - 1941 பதிப்பு
- ↑ about.com [3]
- ↑ IUCN செம்பட்டியல் - Geographic Range [4]
- ↑ The Book of Indian Birds - Salim Ali பக். 380 - 1941 பதிப்பு