நீண்டவால் பெரும் எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீண்டவால் பெரும் எலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
லியோபோல்டாமிசு
இனம்:
லி. சபானசு
இருசொற் பெயரீடு
லியோபோல்டாமிசு சபானசு
தாம்சு, 1877

நீண்டவால் பெரும் எலி (Long-tailed giant rat)(லியோபோல்டாமிசு சபானசு) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும்.

வாழிடம்[தொகு]

இது வங்காளதேசம், கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இது முக்கியமாகத் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் தாழ்நிலம், மலை மற்றும் கீழ் மலைக் காடுகளில் வாழ்கிறது. பொதுவாக இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் காணப்படும்.[2]

விளக்கம்[தொகு]

நீண்டவால் பெரும் எலியின் உரோமம் குறுகியதாகவும், நேர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இதன் நிறம் பொதுவாக முதுகு, பிட்டம் மற்றும் முகவாய் ஆகியவற்றில் அடர் பழுப்பு நிறமாகவும், தலையின் பக்கங்களிலும் மற்றும் விலா மடிப்பு பகுதியில் தங்க-பழுப்பு நிறமாகவும் இருக்கும். வயிறு மஞ்சள்-வெள்ளை முதல் மந்தமான வெள்ளை வரை இருக்கும். மேலும் பக்கவாட்டு மற்றும் வயிற்றில் உள்ள ரோமங்களுக்கு இடையே தெளிவான வண்ண வேறுபாடு உள்ளது. இது மரப் பொந்து மற்றும் துளைகளில் கூடுகளை அமைத்து, பழங்கள், தாவரங்கள் மற்றும் பூச்சிகளை உண்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Aplin, K.; Rueda, L.; Molur, S. (2016). "Leopoldamys sabanus". IUCN Red List of Threatened Species 2016: e.T11520A22434377. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T11520A22434377.en. https://www.iucnredlist.org/species/11520/22434377. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. 2.0 2.1 Phommexay, Phansamai; Satasook, Chutamas; Bates, Paul; Pearch, Malcolm; Bumrungsri, Sara (2011-03-27). "The impact of rubber plantations on the diversity and activity of understorey insectivorous bats in southern Thailand". Biodiversity and Conservation 20 (7): 1441–1456. doi:10.1007/s10531-011-0036-x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0960-3115. http://dx.doi.org/10.1007/s10531-011-0036-x. 
  •  
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீண்டவால்_பெரும்_எலி&oldid=3742456" இலிருந்து மீள்விக்கப்பட்டது