துபை
| துபாய் إمارة دبيّ |
|||
|---|---|---|---|
|
|||
| ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாயின் அமைவு | |||
| அமைவு: | |||
| நாடு | ஐக்கிய அரபு அமீரகம் | ||
| அமீரகம் | துபாய் | ||
| நகரவாக்கம் | 9 ஜூன் 1833 | ||
| விடுதலை | 2 டிசம்பர் 1971 (பிரித்தானியாவிடம் இருந்து) |
||
| அமைப்பாளர் | மக்தூம் இப்னு பதீ இப்னு சுகைல் (1833) | ||
| தொகுதி | துபை | ||
| துணைப் பிரிவுகள் |
நகரங்களும் ஊர்களும்
|
||
| அரசு | |||
| - வகை | அரசியலமைப்பு முடியாட்சி[1] | ||
| - மன்னர் | முகம்மது இப்னு ராசிது அல்-மக்தூம் | ||
| - முடிக்குரிய இளவரசர் | ஹமதான் இப்னு முகமம்து இப்னு ராசித் அல்-மக்தூம் | ||
| பரப்பளவு [2] | |||
| - அமீரகம் | 4,114 கிமீ² (1,588.4 ச. மைல்) | ||
| மக்கள் தொகை (2008)[3] | |||
| - அமீரகம் | 22,62,000 | ||
| - அடர்த்தி | 408.18/கிமீ² (97/சதுர மைல்) | ||
| - மாநகரம் | 34,10,737 | ||
| - தேசியம் (2005) |
17.1 | ||
| நேர வலயம் | அமீரக நேரம் (ஒ.ச.நே.+4) | ||
| இணையத்தளம்: துபை அமீரகம் துபை மாநகராட்சி |
|||
துபாய் (துபாய், Dubai) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் இரண்டாவது பெரியதும், அதிலுள்ள ஒரே நகரத்தையும் குறிக்கும் வகையில் முதலாவது நகரமாகும். இது அராபியத் தீபகற்பத்தில் அராபிய வளைகுடாவின் (பாரசீக வளைகுடா) தெற்கே அமைந்துள்ளது. இது அமீரகங்களில் அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. பரப்பளவில் அபூ ழபீ அமீரகத்தை அடுத்து இரண்டாவது நிலையில் உள்ளது[4]. துபை மற்றும் அபூ ழபீ ஆகியவை மட்டுமே நடுவண் அரசின் முக்கிய தீர்மானங்களுக்கு வீட்டோ அதிகாரம் கொண்டுள்ள அமீரகங்கள் ஆகும்[5].
துபை மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நகரமாக விளங்குகின்றது. நீண்டகாலமாகவே துபாய், முத்துக் குளிப்புப் போன்றவற்றுக்காக அறியப்பட்ட இடமாக இருந்தபோதிலும், அபூ ழபீப் பகுதியிலிருந்து, "பனியாஸ்" என்னும் இனக்குழுவினர் அல்-மக்தூம் குடும்பத்தினர் தலைமையில் இவ்விடத்தில் குடியேறியதுடனேயே இதன் நவீன வரலாறு ஆரம்பமாகின்றது. துபாய் கடந்த சில ஆண்டுகளில் வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] மக்கட்டொகைப் பரம்பல்
மக்கட்தொகையைப் பொறுத்த மட்டில் துபை மட்டுமன்றி, ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாடே ஒரு தனித்தன்மை உடையதாகும். இந்நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 80 சதவிகிதம் வெளிநாட்டினராக உள்ளனர். இருப்பினும் ஆட்சி அதிகாரத்திலும், அரசுப் பணிகளிலும் பிற நாட்டினர் நுழையப் பல தடைகள் உள்ளன. மேலும், இந்நாட்டின் குடிமகனாவதற்கு கடுமையான பல சட்ட திட்டங்கள் உள்ளன. இதன் மூலம் இந்நாடு மக்கள் சிறுபான்மை இனமாகவே இருந்தாலும், நாட்டின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் உள்ளது.
துபை அமீரகத்தின் மக்கள்தொகை சுமார் 22 லட்சம் ஆகும்.
[தொகு] மதம்
துபை மட்டுமன்றி ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாடே இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் ஒரு நாடாகும்.
இந்நாட்டில் வாழும் வெளிநாடினர்களில் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் உள்ளனர். இவற்றுள் இஸ்லாமியர், கிருத்துவர்கள் மற்றும் இந்துக்கள் பெருமளவில் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் ஒரு இஸ்லாமிய நாடாக இருந்த போதும், அங்கு வசிக்கும் மற்ற மதத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நாடாகவே உள்ளது. எனவே அனைத்து மத மக்களும் இங்கே நல்லிணக்கத்தோடு வாழ்கின்றனர்.
[தொகு] துபை பொருளாதாரம்
2008 தரவுகளின் படி துபையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 82.11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்[6]. துபை ஐக்கிய அரபு அமீரகங்களில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய அமீரகம் ஆகும். அபூ ழபீயை விட நிலப்பரப்பிலும், எண்ணெய் வளத்திலும் பல மடங்கு சிறிய ஒரு அமீரகம் துபை. துபை அமீரகத்தின் தொடக்க கால வளர்ச்சிக்கு, அதன் எண்ணெய் வளம் காரணமாகவும், போதுமானதாகவும் இருந்தது. ஆனால் துபாயின் எண்ணெய் வளம் அதன் தொடர் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது என்பதை அந்த அமீரகத்தின் அரசாங்கம் உணர்ந்ததே இருந்தது. இதன் காரணமாக, துபை அரசு எண்ணெய் சாரா பிற தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டது. வெளிநாட்டு மூலதனத்தை அதிகரிக்கும் பொருட்டு அரசு நடைமுறைப்படுத்திய திட்டங்களின் விளைவாக துபை கடந்த முப்பது ஆண்டுகளில் பொருளாதரத்தில் பல மடங்கு வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக 2005-ல் வெளிநாட்டவர்கள் துபையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் சொத்து வாங்க அனுமதி அளித்தது வெளிநாட்டு முதலீடு பெருக ஒரு முக்கிய காரணம் ஆகும்.
துபையின் கட்டுமானத் துறை, 2004 தொடங்கி ஐந்து ஆண்டுகள் அசாதாரண வளர்ச்சியை அடைந்தது. இதற்கு இந்தியா, இங்கிலாந்து, உருசியா, ஈரான், பாகித்தான் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளில் இருந்து வந்த முதலீடுகள் பெரும் காரணமாகஅமைந்தது. 2008 ஆண்டு இறுதி வாக்கில் துபையின் கட்டுமானத் துறையும் அதை நம்பி இருந்த துபையின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சியை அடைந்தன. இந்த வீழ்ச்சிக்கு உலகப் பொருளாதாரப் பின்னடைவு மற்றும் அளவுக்கு அதிகமாக அதிகரித்த சொத்துக்களின் மதிப்பு ஆகியவை முக்கிய காரணங்கள்.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- துபை தேசிய அருங்காட்சியகம்
- துபை ஷொப்பிங் விழா - உலகக் கிராமம்
- அமீரகக் கோபுரம்
- ஜபல் அலி சுதந்திர வலயம்
- துபை மரீனா
- துபை பாம் தீவு அபிவிருத்தி
- துபை விளையாட்டு நகரம்
- துபை விழா நகரம்
- துபை இணைய நகரம்
- துபை ஊடக நகரம்
- துபை அறிவுக் கிராமம்
- புர்ஜ் துபை அபிவிருத்தி
- புர்ஜ் அல்-அரபு
- துபை மெட்ரோ ரயில் துபை மெட்ரோ
- துபை மால் (துபை ஷொப்பிங் சென்டர்)
- துபை அமீரகக் கோபுரம்
- பர்துபை
- புர்ஜ் கலீஃபா
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "UAE Constitution". Helplinelaw.com. பார்த்த நாள் 21 July 2008.
- ↑ ஐக்கிய அரபு அமீரகத்தின் பரப்பளவு செயற்கைத் தீவுகளையும் உள்ளடக்கியது.
- ↑ "Dubai: Profile of geographical entity including name variants. World Gazetteer.
- ↑ "United Arab Emirates: metropolitan areas". World-gazetteer.com.
- ↑ The Government and Politics of the Middle East and North Africa. D Long, B Reich. p.157
- ↑ ""Gross Domestic Product (GDP) of the Emirate of Dubai 2006–2008"". Dubai Statistics Centre.
|
|||||