தானேசுவர் மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தானேசுவர் மகாதேவர் கோயில்
[[Image:
தானேசுவர் மகாதேவர் கோயில்
|280px|alt=|]]
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:அரியானா
மாவட்டம்:குருச்சேத்திர மாவட்டம்
அமைவு:பழைய குருச்சேத்திர நகரம்
கோயில் தகவல்கள்

தானேசுவர் மகாதேவர் கோயில், (Sthaneshwar Mahadev Temple) சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழமையான ஒரு கோயிலாகும். இந்த கோயில், இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் குருஷேத்ரா மாவட்டத்தில் உள்ள பழைய குருஷேத்ரா நகரத்தில் அமைந்துள்ளது. இங்குதான் பாண்டவர்கள் கிருஷ்ணருடன் சேர்ந்து மகாபாரதப் போரில் வெற்றி பெற சிவனிடம் பிரார்த்தனை செய்து ஆசி பெற்றனர் என்று கருதப்படுகிறது. [1] ஒன்பதாவது குருவான ஸ்ரீ தேக் பகதூர் தானேசுவர் தீர்த்தத்திற்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் தங்கியிருந்தார், இந்த கோவிலுக்கு அருகில் ஒரு குருத்வாரா உள்ளது.

இது, மகாவிஷ்ணுவுக்கும் தாதீசிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தாதீசி தேவதைகளை வென்ற இடம் என்று சொல்லப்படுகிறது.

வரலாறு[தொகு]

தானேசுவர் என்றழைக்கப்படும் இக் கோயில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, அதனால், தற்போது தானேசர் நகரம் அல்லது குருக்ஷேத்திர நகரம் என்று அழைக்கப்படுகிறது. பழங்கால நகரமான தானேசுவரின் பிரதான தெய்வமாக இக் கோயில் உள்ளது. புராணக்கதைகள் அதன் தொன்மையை மகாபாரத காலகட்டத்திற்கு வைக்கின்றன. கிருஷ்ணர், பாண்டவர்களுடன் சேர்ந்து இங்கு வந்து, சிவபெருமானை வழிபட்டு, மகாபாரதப் போரில் வெற்றிபெறுவதற்காக வரம் பெற்றதாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணர் விசேஷமாக, ஓ கடவுளே “மகேஸ்வரா” நான் எந்த சூழ்நிலையிலும் பாண்டவர்களை (தர்மத்தை) பாதுகாப்பேன், ஆனால் என்னால் கட்டுப்படுத்த முடியாத சில சக்திவாய்ந்த அஸ்திரங்கள் கௌரவர்களிடம் உள்ளன. (கௌரவர்கள் யாராலும் கட்டுப்படுத்த முடியாத கொடிய அஸ்திரம் கொண்டவர்கள் என்று நம்பப்படுகிறது). மகாகாலன் என்று அழைக்கப்படும் சிவபெருமானைத் தவிர, வேறு எவராலும் அதை தடுக்க இயலாது. அதனால், தர்மம் வெல்வதற்கு உதவி செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார் என வரலாறு கூறுகிறது. இந்த கோயிலை தரிசிக்காமல் குருக்ஷேத்திரத்திற்கு மகாகால யாத்திரை சென்றால் அது முழுமையற்றதாகவும் பலனற்றதாகவும் கருதப்படுகிறது. தானேசுவரத்தின் வர்தனப் பேரரசின் நிறுவனர் புஷ்பபூதி, தனது ராஜ்ஜியத்தின் தலைநகருக்கு தானேசுவர் சிவனின் பெயரை சூட்டினார். இந்த கோயில், மூன்றாவது பானிபட் போருக்கு முன்பு குஞ்ச்புராவில் அகமது ஷா அப்தாலியை வென்றதன் நினைவாக மராட்டியப் படைகளின் தளபதியான சதாசிவ்ராவ் பாவ் என்பவரால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. [2]

புராணம்[தொகு]

கோயிலை ஒட்டியுள்ள குளத்தின் நீர் புனிதமானது என்று புராணம் கூறுகிறது. இந்த குளத்தின் சில துளிகள் தண்ணீர் மன்னன் பான் என்பவரின் தொழுநோயைக் குணப்படுத்தியது என சொல்லப்படுகிறது. இந்த பழமையான, புனிதமான கோவிலுக்கு வருகை தராமல் குருக்ஷேத்திர யாத்திரை முழுமையடையாது என்று நம்பப்படுகிறது. குளமும் கோயிலும் தானேசர் நகரத்திலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது, இது இந்த கோயிலின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. சிவபெருமான் முதன்முதலில் இங்கு லிங்க வடிவில் வழிபட்டதாகவும் நம்பப்படுகிறது.யமுனை கரையில் தவம் செய்த மகாபாரத நாயகர்களின் மூதாதையரான முனிவர் குரு, வழிபட்ட இடமென்றும், பெரும் வீரரான பரசுராமர் பல சத்திரியர்களைக் இங்கு கொன்றார் என்றும் புராணங்கள் கூறுகிறது.


தெய்வத்தைப் பற்றி[தொகு]

தானேசுவர் கோயில் சிவபெருமானின் உறைவிடம் ஆகும். இந்த நகரம் பேரரசர் ஹர்ஷவர்தனாவின் தலைநகராக செயல்பட்டது. குவிமாடம் வடிவ கூரையுடன் கூடிய கோயில் ஒரு பிராந்திய வகை கட்டிடக்கலையைப் பின்பற்றுகிறது. மேற்கூரையின் முகப்பில் உயரமான சிகரத்துடன் 'ஆம்லா' வடிவில் உள்ளது. இங்குள்ள லிங்கம் பழமையானது. மேலும், உள்ளூர் மக்களால் இன்றும் வணங்கப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. "Religious Places in Kurukshetra: Sthaneswar Mahadev Mandir". Kurukshetra District website. Archived from the original on 2014-08-22. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08.
  2. "Sthaneshwar is dedicated to Lord Shiva and Marathas". Kurukshetra District website. Archived from the original on 2020-10-10. பார்க்கப்பட்ட நாள் 2019-06-08.

வெளி இணைப்புகள்[தொகு]