தத்தனேரி

ஆள்கூறுகள்: 9°56′30″N 78°06′26″E / 9.941800°N 78.107100°E / 9.941800; 78.107100
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தத்தனேரி
Thathaneri
புறநகர்ப் பகுதி
தத்தனேரி Thathaneri is located in தமிழ் நாடு
தத்தனேரி Thathaneri
தத்தனேரி
Thathaneri
தத்தனேரி, மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°56′30″N 78°06′26″E / 9.941800°N 78.107100°E / 9.941800; 78.107100
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்162 m (531 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்625018
தொலைபேசி குறியீடு0452xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, செல்லூர், கோரிப்பாளையம், விளாங்குடி, ஆரப்பாளையம்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி உறுப்பினர்சு. வெங்கடேசன்
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்பழனிவேல் தியாகராஜன்
இணையதளம்https://madurai.nic.in

தத்தனேரி (Thathaneri) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். தத்தனேரியில் கண்மாய் ஒன்று அமையப்பெற்று தத்தனேரிக்கும் அதன் அண்மைய ஊர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.[1]

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 162 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தத்தனேரி ஊரின் புவியியல் ஆள்கூறுகள் 9°56'30.5"N, 78°06'25.6"E (அதாவது, 9.941800°N, 78.107100°E) ஆகும்.

அருகிலுள்ள ஊர்கள்[தொகு]

மதுரை, செல்லூர், கோரிப்பாளையம், விளாங்குடி மற்றும் ஆரப்பாளையம் ஆகியவை தத்தனேரிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும்.

போக்குவரத்து[தொகு]

சாலைப் போக்குவரத்து[தொகு]

தத்தனேரியில் நான்கு வழிச் சாலை ஒன்று உள்ளது. கோரிப்பாளையம் பகுதி வழியாக தத்தனேரி நான்கு வழிச் சாலையை அடைய, செல்லூர் இரயில்வே மேம்பாலத்தின் இடது பக்கத்தில் கீழ்மட்ட சாலை ஒன்று சுமார் ரூ.9.50 கோடி செலவில் உருவாகிறது.[2] மதுரை மாநகராட்சி பேருந்து சேவைகள் மூலம் தத்தனேரி பயனடைகிறது. தத்தனேரியிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்திலேயே மதுரை - ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அமையப்பெற்றுள்ளது. மேலும், இங்கிருந்து சுமார் 3.5 கி.மீ. தூரத்தில், மதுரையின் நடுப்பகுதியில் மதுரை - பெரியார் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. மற்றும் சுமார் 4.5 கி.மீ. தொலைவில் மதுரை - அண்ணா நகர் பேருந்து நிலையம் உள்ளது. மேலும், மாட்டுத்தாவணியிலுள்ள மதுரை எம்.ஜி.ஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தொடங்கி, அண்ணா பேருந்து நிலையம், செல்லூர், தத்தனேரி வழியாக பாத்திமா கல்லூரி வரை 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் புதிய போக்குவரத்து சேவை நடைபெறுகிறது.[3]

தொடருந்து போக்குவரத்து[தொகு]

தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம், தத்தனேரியிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது.

வான்வழிப் போக்குவரத்து[தொகு]

தத்தனேரியிலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் அவனியாபுரம் பகுதியில், மதுரை வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.

மருத்துவம்[தொகு]

தத்தனேரியில் தொழிலாளர் நல மாநில ஈட்டுறுதி (இ. எஸ். ஐ.) மருத்துவமனை ஒன்று உள்ளது.[4]

மயானம்[தொகு]

தத்தனேரி, செல்லூர், கோரிப்பாளையம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள் பயனடைய, தத்தனேரியில் மயானம் ஒன்று உள்ளது.[5] எரிவாயு மூலம் செயல்படும் இரண்டு எரிவாயு ஆலைகள் கொண்ட இந்த மயானம்,[6] பழமை வாய்ந்தது.

அரசியல்[தொகு]

தத்தனேரி பகுதியானது, மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி)க்குட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் பழனிவேல் தியாகராஜன். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்தனேரி&oldid=3631723" இலிருந்து மீள்விக்கப்பட்டது