ஜேர்விஸ் குடா பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேர்விஸ் குடா பிரதேசம்

ஜேர்விஸ் குடா பிரதேசம் (Jervis Bay Territory) என்பது ஆஸ்திரேலியாவின் ஒரு சுயாட்சி அமைப்புடைய பகுதியாகும். ஆஸ்திரேலியத் தலைநகரம் கான்பராவுக்கு கடல் வழித் தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக இப்பிரதேசத்தை நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திடம் இருந்து 1915 ஆண்டில் ஆஸ்திரேலிய நடுவண் அரசு விலைக்கு வாங்கியது. இப்பகுதி 1989 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியத் தலைநகரப் பிரதேசத்தின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. 1989 இல் தலைநகரப் பிரதேசத்துக்கு சுயாட்சி வழங்கப்பட்டதன் பின்னர் ஜேர்விஸ் குடா தனிப்பிரதேசமாக பிரதேசங்களின் நடுவண் அமைச்சினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

வரலாறு[தொகு]

பிரித்தானியாவின் ரோயல் கடற்படை அட்மிரல் ஜோன் ஜேர்விஸ் என்பவரின் நினைவாக இக்குடாவிற்கு ஜேர்விஸ் குடா எனப் பெயரிடப்பட்டது. 1819 ஆம் ஆண்டில் ஜோன் ஒக்ஸ்லி என்ற முதலாவது ஐரோப்பியர் இங்கு வந்திறங்கினார்.

மக்கள்[தொகு]

ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம், மற்றும் ஜேர்விஸ் குடா ஆகியவற்றின் அமைவு

இங்கு கிட்டத்தட்ட (2001 கணக்கெடுப்ப்பின் படி) 611 பேர் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் "கிரெஸ்வெல்" என்ற ஆஸ்திரேலிய கடற்படைத்தளத்தில் பணியாற்றுபவர்கள். தற்போது இப்பிரதேசத்தின் 90 விழுக்காட்டு நிலம் ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் நிலம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள "ரெக் குடா" (Wreck Bay) என்ற இடத்தில் பழங்குடியினர் சிலர் வாழ்கின்றனர்.

புவியியல்[தொகு]

ஜேர்விஸ் குடா ஒர் இயற்கைத் துறைமுகம் ஆகும். இது வடதெற்கே 16 கிமீ நீலத்தையும், கிழக்கு-மேற்கே 10 கிமீ நீளத்தையும் கொண்டது. கிழக்கே இது பசிபிக் பெருங்கடலில் முடிவடைகிறது. சிட்னி மாநகரில் இருந்து 150 கிமீ தெற்கே நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் வடகரையில் இது அமைந்துள்ளது.

ஜேர்விஸ் குடா

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேர்விஸ்_குடா_பிரதேசம்&oldid=3834525" இலிருந்து மீள்விக்கப்பட்டது