சொரிமுத்து அய்யனார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொரிமுத்து அய்யனார் கோயில் (Sorimuthu Ayyanar Temple), தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி முதல் கடையம் வரை அமைந்த களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அமைந்த சொரிமுத்து அய்யனார் கோயில், பாபநாசத்திற்கும், காரையார் நீர்த்தேக்கத்திற்கும் இடையே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இங்குள்ள கோயில் ஐயனாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இக்கோயில் சிங்கம்பட்டி ஜமீனின் வாரிசுகள் நிர்வகித்து வருகின்றனர். ஆடி அமாவாசை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி இக்கோயில் அய்யனாரை வழிபடுகின்றனர்.[1]

இக்கோயில் பாபநாசத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும்; திருநெல்வேலிக்கு 61 கிலோ மீட்டர் தொலைவிலும்; தென்காசிக்கு வடமேற்கே 81.4 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]