சிங் அரசமரபு
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| சீன வரலாறு | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| பண்டைய | |||||||
| 3 Sovereigns and 5 Emperors | |||||||
| சியா அரசமரபு 2100–1600 கிமு | |||||||
| சாங் அரசமரபு 1600–1046 கிமு | |||||||
| சவு அரசமரபு 1045–256 BCE | |||||||
| Western Zhou | |||||||
| Eastern Zhou | |||||||
| Spring and Autumn Period | |||||||
| போரிடும் நாடுகள் காலம் | |||||||
| பேரரசு | |||||||
| சின் அரசமரபு 221 கிமு–206 கிமு | |||||||
| ஆன் அரசமரபு 206 BCE–220 CE | |||||||
| மேற்கு ஆன் | |||||||
| Xin Dynasty | |||||||
| கிழக்கு ஆன் | |||||||
| மூன்று இராச்சியங்கள் 220–280 | |||||||
| வேய்i, சூ & வூ | |||||||
| யின் அரசமரபு 265–420 | |||||||
| மேற்கு யின் | 16 இராச்சியங்கள் 304–439 |
||||||
| கிழக்கு யின் | |||||||
| Southern & Northern Dynasties 420–589 |
|||||||
| சுயி அரசமரபு 581–618 | |||||||
| தாங் அரசமரபு 618–907 | |||||||
| ( Second Zhou 690–705 ) | |||||||
| 5 அரசமரபுகள் & 10 அரசுகள் 907–960 |
Liao Dynasty 907–1125 |
||||||
| சொங் அரசமரபு 960–1279 |
|||||||
| Northern Song | W. Xia | ||||||
| Southern Song | Jin | ||||||
| யுவான் அரசமரபு 1271–1368 | |||||||
| மிங் அரசமரபு 1368–1644 | |||||||
| சிங் அரசமரபு 1644–1911 | |||||||
| தற்காலம் | |||||||
| சீனக் குடியரசு 1912–present | |||||||
| சீன மக்கள் குடியரசு 1949–present |
சீனக் குடியரசு (தாய்வான்) 1912–present |
||||||
|
தொடர்புடைய கட்டுரைகள்
|
|||||||
சிங் அரசமரபு (Qing Dynasty, சீன மொழி: 清朝 சிங் சாவ்) அல்லது பெரும் சிங் (大清 டா சிங்) என்பது, சீனாவை ஆண்ட இறுதி அரச மரபு ஆகும். 1644 தொடக்கம் 1912 ஆம் ஆண்டு வரை ஆட்சி நடத்திய இவ் அரசமரபுபை மாஞ்சு அரசமரபு எனவும் அழைப்பதுண்டு. இது, இன்றைய வடகிழக்குச் சீனாவைச் (மஞ்சூரியா) சேர்ந்த மாஞ்சு என்ற துங்குசிய இனக்குழுவான நுர்ஹாசியால் நிறுவப்பட்டது. 1644 இல் தொடங்கி சீனாவையும் அதைச் சூழ்ந்த பகுதிகளையும் உள்ளடக்கிய பேரரசானது. தொடக்கத்தில் பிந்திய ஜின் வம்சம் என்ற பெயரில் 1616 இல் உருவாகி 1636 இல் சிங் எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1644 இல் இந்த அரசமரபு பெய்ஜிங்கைக் கைப்பற்றியது. 1646 ஆம் ஆண்டளவில் இதன் ஆட்சி இன்றைய சீனாவின் பெரும் பகுதிகளுக்கு விரிவடைந்தது. எனினும் 1683 ஆம் ஆண்டிலேயே முழுச் சீனாவையும் இதன் ஆட்சிக்குள் கொண்டுவர முடிந்தது.
இதன் ஆட்சிக்காலத்தில் சிங் அரசமரபு சீனக் கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்து விட்டது. இதன் படைபலம் 1800 களில் பெரிதும் குறைந்துவிட்டதுடன், வெளிநாட்டு அழுத்தங்கள், உள்நாட்டுக் குழப்பங்கள், போர்த் தோல்விகள் என்பவற்றை எதிர்கொள்ள வேண்டியும் ஏற்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிக்குப் பின் சிங் வம்சம் சரியத் தொடங்கியது. சின்ஹாய்ப் புரட்சியைத் தொடர்ந்து, பேரரசர் புயியின் சார்பில் பேரரசி டொவேஜர் லோங்யு ஆட்சி உரிமையைக் கைவிட்டபோது சிங் அரசமரபு முடிவுக்கு வந்தது.