கிறிஸ்டியான் ஹைஜன்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் Christiaan Huygens |
|
|---|---|
கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் |
|
| பிறப்பு | ஏப்ரல் 14 1629 |
| பிறப்பிடம் | ஹேக், நெதர்லாந்து |
| இறப்பு | ஜூலை 8 1695 (அகவை 66) |
| இறப்பிடம் | ஹேக், நெதர்லாந்து |
| வாழிடம் | நெதர்லாந்து, பிரான்ஸ் |
| தேசியம் | டச்சு |
| துறை | இயற்பியலாளர், கணிதவியலாளர் |
| பணி நிறுவனம் | லண்டன் ரோயல் கழகம் பிரெஞ்சு அறிவியல் அகாடமி |
| பல்கலைக்கழகம் | லைடன் பல்கலைக்கழகம் ஒரேஞ்ச் கல்லூரி |
| ஆய்வு நெறியாளர் | பிரான்ஸ் வான் ஷூட்டன் ஜோன் பெல் |
| உணர் | ஊசல் மணிக்கூடு ஹைஜன்ஸ்-பிரெனெல் தத்துவம் |
| தாக்கம் | ரெனே டேக்கார்ட் பிரான்ஸ் வான் ஷூட்டன் |
| Influenced | கொட்ஃபிரீட் லைப்னிட்ஸ் |
கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் (Christiaan Huygens, ஏப்ரல் 14, 1629 – ஜூலை 8, 1695) ஒரு டச்சு கணிதவியலாளர், வானியலாளர், மற்றும் இயற்பியலாளர் ஆவார். வரலாற்றாய்வாளர்கள் இவரைப் பொதுவாக அறிவியல் புரட்சியுடன் தொடர்புபடுத்துவார்.
[தொகு] வாழ்வும் பணியும்
நெதர்லாந்தில் டென் ஹாக் நகரில் கொன்ஸ்டண்டீன் ஹைஜன்ஸ் என்பவருக்குப் பிறந்தவர். லைடன் பல்கலைக்கழகத்தில் சட்டம், மற்றும் கணிதம் படித்தார். அதன் பின்னரே அறிவியல் படிக்க ஆரம்பித்தார்.
ஒளி அலைகளைக் கொண்டிருப்பதாக ஹைஜன்ஸ் கூறிய கருத்து அலை-துகள் இரட்டைத்தன்மையைப் பின்னர் விளக்க உதவியது. தற்கால நுண்கணித வளர்ச்சிக்கு இவரது பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 1655 ஆம் ஆண்டில் சனிக் கோளின் மிகப் பெரிய துணைக்கோளான டைட்டானைக் கண்டுபிடித்தார். அத்துடன் சனிக் கோளின் வளையங்களை ஆராய்ந்து அவை பாறைகளினால் ஆனவை என்பதை 1656 இல் கண்டறிந்தார். அதே ஆண்டில் ஓரியோன் என்ற தொலை விண்மீன் தொகுதியை (Nebula) அவதானித்து அதன் மாதிரிப் படத்தையும் வரைந்தார். தார். அவரது தொலைக்காட்டி மூலம் இவ்விண்மீன் தொகுதியை அவதானித்து அவற்றை தனித்தனி விண்மீன்களாகப் பிரிப்பதில் வெற்றி கண்டார். (ஓரியோனின் நடுப்பகுதிக்கு இவரது நினைவாக "ஹைஜன்ஸ் பகுதி" எனப பெயாரிடப்பட்டது). ஐசாக் நியூட்டனின் இரண்டாம் இயக்க விதியை இருபடிச் சமன்பாடாக மாற்றி எழுதியவரும் இவரே.
இலாய்சி பாஸ்கலின் வேண்டுகோளுக்கிணங்க நிகழ்தகவுத் தத்துவம் குறித்த ஒரு நூலை எழுதி 1657 ஆம் ஆண்டில் வெளியிட்டார்[1].
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "I believe that we do not know anything for certain, but everything probably." —Christiaan Huygens, Letter to Pierre Perrault, 'Sur la préface de M. Perrault de son traité del'Origine des fontaines' [1763], Oeuvres Complétes de Christiaan Huygens (1897), Vol. 7, 298. Quoted in Jacques Roger, The Life Sciences in Eighteenth-Century French Thought, ed. Keith R. Benson and trans. Robert Ellrich (1997), 163. Quotation selected by W.F. Bynum and Roy Porter (eds., 2005), Oxford Dictionary of Scientific Quotations ISBN 0-19-858409-1 p. 317 quotation 4.
[தொகு] வெளி இணைப்புகள்
-
- Treatise on Light translated into English by Silvanus P. Thompson, Project Gutenberg etext.
- De Ratiociniis in Ludo Aleae or The Value of all Chances in Games of Fortune, 1657Christiaan Huygens' book on probability theory. An English translation published in 1714. Text pdf file.
- Huygensmuseum Hofwijck in Voorburg, The Netherlands, where Huygens lived and worked.
- Huygens Clocks exhibition from the Science Museum, London
- Huygens and music theory Huygens–Fokker Foundation —on Huygens' 31 equal temperament and how it has been used
- How to pronounce "Christiaan Huygens" (includes sound file of pronunciations by Dutch people)
- Systema Saturnium 1659 text a digital edition of Smithsonian Libraries
- Exhibition on Huygens in University Library Leiden (in Dutch)
- Christiaan Huygens on the 25 Dutch Guilder banknote of the 1950's.