கருப்பு இறக்கைத் தண்டு சிறிய ஆலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருப்பு இறக்கைத் தண்டு சிறிய ஆலா
சௌதி அரேபியாவில் சாண்டர்ஸ் ஆலா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. saundersi
இருசொற் பெயரீடு
Sternula saundersi
(ஹியூம், 1877)
வேறு பெயர்கள்

Sterna saundersi

சாண்டர்ஸ் ஆலா ( Sternula saundersi ), சில சமயங்களில் கருப்பு இறக்கைத் தண்டு சிறிய ஆலா என அழைக்கப்படுவது,[2] நீள் சிறகு கடற்பறவை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும் . இது வடமேற்கு இந்தியப் பெருங்கடலின் (தெற்கு சோமாலியா, அறபுத் தீபகற்பம், சுகுத்திரா, பாக்கித்தான், அந்தமான் நிக்கோபார் தீவுகள், வடக்கு இலங்கை ) கடற்கரைகளில் அரிதாகவே வாழ்கிறது.

இது சிற்றாலா, மீச்சிறு ஆலா, மஞ்சள்-அலகு ஆலா, பெருவியன் ஆலா ஆகியவற்றின் நெருங்கிய உறவினராகும். இனப்பெருக்கம் செய்யாத காலத்தில் உள்ள இதன் இறகு நிறங்களின் அடிப்படையில் சிற்றாலாவுடன் கிட்டத்தட்ட வேறுபாடு அறிய முடியாததாக இருக்கும். இந்த இரண்டும் சிலரால் ஓரின வகை என்று கருதப்பட்டது.[3]

விளக்கம்[தொகு]

கருப்பு இறக்கைத் தண்டு சிறிய ஆலா அதன் நெருங்கிய உறவினரான சிற்றாலாவின் பல அம்சங்களைப் பகிர்ந்து கொள்கிறது. இதில் வெள்ளை உடல், கருப்பு முனையுடைய மஞ்சள் அலகு, வெள்ளை நெற்றி, தலையில் கருந்தொப்பி போன்ற கறுப்பு நிறம் ஆகியவை அடங்கும். இதன் பறக்கும் இறக்கையின்தண்டுகளில் சில கறுப்பு நிறமாக இருக்கும். மேலும் சிற்றாலாவின் பிரகாசமான மஞ்சள் கால்களுடன் ஒப்பிடுகையில் இதன் கால்கள் மங்கலான நிறத்தில் இருக்கும்.[3] இனப்பெருக்கம் செய்யாத (குளிர் காலம்) காலத்தில் இவை இரண்டின் இறகுகளின் நிறங்களும் மிகவும் ஒத்து இருக்கும்.

கருப்பு இறக்கைத் தண்டு சிறிய ஆலா 20-28 செமீ (8-11 அங்குலம்) நீளமும், 40-45 கிராம் எடையும், 50-55 செமீ (20-21 அங்குலம்) இறக்கை நீட்டமும் கொண்டது.[3] இதன் சராசரி இறக்கை நீளம் 16.6 செமீ (6.5 அங்குலம்), சராசரி அலகு நீளம் 2.8 செமீ (1.1 அங்குலம்) ஆகும். இதன் வால் பிளவானது சராசரியாக 2.8 செமீ (1.1 அங்குலம்) அளவு இருக்கும்.[4]

வகைபிரித்தல்[தொகு]

இப்பறவை முதன்முதலில் 1877 ஆம் ஆண்டில் பிரித்தானியத் தாவரவியலாளர் மற்றும் பறவையியலாளரான ஆலன் ஆக்டவியன் ஹியூம் பிரித்தானிய இந்தியாவில் இந்தியக் குடிமைப் பணியின் ஒரு பகுதியாக தங்கியிருந்தபோது அவரால் விவரிக்கப்பட்டது. இப்பறவைக்கு முதலில் கருப்பு இறக்கைத் தண்டு சிறிய ஆலா ( ஸ்டெர்னா சாண்டர்சி ) என்ற பெயர் இடப்பட்டது. இதன் பெயர் பின்னர் சாண்டர்சின் ஆலா என்று மாற்றப்பட்டது.[5]

சிலரால் இது சிற்றாலாவின் கிளையினமாக கருதப்படுகிறது.

நடத்தை[தொகு]

உணவு[தொகு]

இதன் உணவில் பெரும்பாலும் சிறிய மீன்கள், ஓடுடைய கணுக்காலிகள், மெல்லுடலிகள் உட்பட பல்வேறு கடல் விலங்குகள் அடங்கும். இது பல வகையான பூச்சிகளையும் உண்ணும்.[6] இந்தப் பறவை மீன் பிடிப்பதற்காக நீரில் மூழ்குவதற்கு முன், கணிசமான நேரம் நீருக்கு மேலே வட்டமிடும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2019). "Sternula saundersi". IUCN Red List of Threatened Species 2019: e.T22694666A155479775. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22694666A155479775.en. https://www.iucnredlist.org/species/22694666/155479775. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. "Saunders's Tern (Black-shafted Tern) – Sternula saundersi". Finnish Biodiversity Information Facility.
  3. 3.0 3.1 3.2 3.3 Gochfeld, Michael; Burger, Joanna; Kirwan, Guy M.; Garcia, Ernest (March 4, 2020). "Saunder's Tern". Birds of the World.
  4. Chandler, Richard; Wilds, Claudia (February 1994). "Little, Least and Saunders's Little Terns". British Birds 87 (2): 60–66. https://britishbirds.co.uk/content/little-least-and-saunderss-little-terns. 
  5. Moulton, Edward (2003).
  6. Almalki, Mohammed (March 2021). "Breeding biology of Saunders's tern (Sterna saundersi) in the Farasan Islands, Kingdom of Saudi Arabia". Saudi Journal of Biological Sciences 28 (3): 1931–1937. doi:10.1016/j.sjbs.2020.12.044. பப்மெட்:33732079.