அலகு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அலகு குத்துதல்.
இந்துக் கோவில் திருவிழாக்களில் பால் செம்பு எடுத்தல், காவடி எடுத்தல் மிகவும் பிரசித்தம்.
அப்போது பக்தர்களுக்கு, அலகு குத்துதல் நடைபெறும்.
இந்த அலகு குத்துதல் என்பது காவடி/பால் செம்பு எடுக்கு முன்னர் பூசை செய்து (முக்கியமாக விநாயகருக்கு) தீபாரதனை காட்டியது நடைபெறும்.
பக்தரின் வாயில் ஒரு கன்னத்திலிருந்து மற்றொரு கன்னத்தை நோக்கி சிறிய ஊசியால் குத்தி விடுவார்கள். ஊசியின் ஒரு முனை திரிசூலம் அல்லது வேல் போல் இருக்கும். மற்றொரு முனையை கன்னத்தில் குத்தி, மற்ற கன்னத்தில் எடுப்பார்கள், அந்த முனையில் வேல் அல்லது திரிசூலம் சொருகுவார்கள்.
சில நேரங்களில் நாக்கை வெளியே எடுத்து மேலிருந்து கீழ் நோக்கி குத்துவதுமுண்டு.

