ஐபாட் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐபாட் 2 (iPad 2) என்பது ஆப்பிள் இன்க் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படும் பட்டிகைக் கணனி ஆகும். முதல் ஐபாட் உடன் ஒப்பிடும் போது ஐபாட் வரிசையின் இரண்டாவதான இந்த பட்டிகைக் கணனி இரட்டை கோர் ஏ 5 செயலியுடன் இலகுவான கட்டமைப்பை கொண்டது. பேஸ்டைம் காணொளி அழைப்புகளுக்காக விஜிஏ முன் புகைப்பட கருவியையும், 720பி பின்புற புகைப்பட கருவியையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. இந்த சாதனம் 16 ஜிபி, 32 ஜிபி, 64 ஜிபி ஆகிய மாறுபட்ட சேமிப்பு திறன்களிலும், ஒய்-பை அல்லது ஒய்-பை மற்றும் செல்லிடம் ஆகிய மாறுப்பட்ட இணைப்புகளிலும் கிடைக்கின்றது. அனைத்து விதமான ஐபாட்களும் கறுப்பு, வெள்ளை ஆகிய முன் வண்ணத்தில் கிடைத்தது. இந்த சாதனம் 2011 ஆம் ஆண்டில் மார்ச்சில் வெளியிடப்பட்டது.

2012 ஆம் ஆண்டு மார்ச் இல் ஐபாடின் 3 வது தலைமுறை வெளியானதும் இரண்டு இணைப்பு விருப்பங்களுடனும், இரண்டு முன் வண்ண விருப்பங்களுடன் 16 ஜிபி சேமிப்புத்திறனைக் கொண்ட ஐபாட்கள் மட்டுமே கிடைத்தது.

இந்த சாதனம் பல்வேறு வலைப்பதிவுகள் மற்றும் வெளியீடுகளிலிருந்து நேர்மறையான வரவேற்பைப் பெற்றது. புதிய ஆப்பிள் ஏ 5சிப் போன்ற வன்பொருள் மேம்பாட்டிற்காக பாராட்டப்பட்டாலும், ஐபாட் 2 மற்றும் ஐஓஎஸ் மீதான மென்பொருள் கட்டுப்பாடு பொதுவாக பல்வேறு தொழில்நுட்ப வர்ணனையாளர்களிடமிருந்து விமர்சனங்களை பெற்றது.[1] இந்த சாதனம் அதன் முதல் மாத விற்பனையில் 2.4–2.6 மில்லியனும், 2011 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 11.12 மில்லிய 2011 மூன்றாம் காலாண்டிலும் விற்கப்பட்டது.[2]

வெளியீடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மார்ச் 2 அன்று ஒரு ஊடக நிகழ்வுக்காக ஆப்பிள் நிறுவனம் 2011 பிப்ரவரி 23 அன்று பத்திரிகையாளர்களுக்கு அழைப்பிதழ்களை அனுப்பியது.[3] 2011  மார்ச் 2 அன்று ஆப்பிள் நிறுவன நிர்வாக அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ் மருத்துவத்துவ விடுமுறையில் இருந்த போதிலும் யெர்ப புவனா சென்டர் ஃபார் ஆர்ட்ஸில் ஐபாட் 2 ஐ வெளியிட்டார்.[4][5]

மார்ச் 11 இல் ஆப்பிள் நிறுவனம் தனது வலைத்தளத்திலும், அதன் அமெரிக்க விற்பனை நிலையங்களிலும் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு ஐபாட் 2 ஐ விற்பனை செய்யத் தொடங்கியது. நியூயார்க் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள பல விற்பனை நிலையங்களில் சில மணி நேரத்தில் விற்கப்பட்டன.[6]

ஆத்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, அயர்லாந்து, ஹங்கேரி, லக்சம்பர்க், மெக்ஸிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, போலந்து, போர்த்துகல், எசுப்பானியா, சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் ஐபாட் 2 மார்ச் 25, 2011 அன்று சர்வதேச அளவில் வெளியிடப்பட்டது.[7]

மார்ச் 11, 2011 அன்று நாட்டைத் தாக்கிய பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக ஜப்பானுக்கான வெளியீட்டுத் திகதி ஏப்ரல் 29, 2011 வரை ஒத்திவைக்கப்பட்டது. ஐபாட் 2 பின்னர் ஏப்ரல் 29, 2011 அன்று ஹாங்காங், தென் கொரியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளில் வெளியிடப்பட்டது.[8] 2011 ஆம் ஆண்டு மே 6 மற்றும் 27 ஆகிய திகதிகளில் சீனா, எஸ்டோனியா, தாய்லாந்து, பிரேசில் தைவான் மற்றும் உருசியா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டது.[9]

மூன்றாம் தலைமுறை ஐபாட் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், 32 மற்றும் 64 ஜிபி சாதனங்கள் வெளியிடுவது மார்ச் 7, 2012 அன்று நிறுத்தப்பட்டன. 16 ஜிபி வைஃபை மற்றும் 16 ஜிபி வைஃபை + 3 ஜி மாடல்கள் மார்ச் 18, 2014 அன்று நிறுத்தப்பட்டன.[10]

புகார்கள்[தொகு]

சில ஐபாட் 2 பயனர்கள் iOS 8 ஐ இயக்கும் போது செயல்திறன் சிக்கல்களுக்காக புகாரளித்தனர். IOS 8.1.1 புதுப்பிப்பில் ஐபாட் 2 மற்றும் ஐபோன் 4 எஸ் ஆகியவற்றில் ஆப்பிள் செயல்திறனை மேம்படுத்தியது. இருப்பினும் இந்த 2 சாதனங்களும் அவற்றுக்கு பிறகு வெளிவந்த சாதனங்களைப் போல வேகமாக இயங்கவில்லை.

வணிக வரவேற்பு[தொகு]

வெளியீட்டின் முதல் வார இறுதியில், ஒரு மில்லியனுக்கும் அதிகமாக இந்த சாதனங்கள் விற்கப்பட்டன.[11] வெளியான முதல் இரண்டு வாரங்களில் சுமார் 12,000 ஐபாட்கள் ஏல தளமான ஈபேயில் விற்கப்பட்டன. ஐபோன் 4 எஸ் வெளியிடப்பட்டபோது ​​மூன்றாம் தலைமுறை ஐபாட் பற்றிய வதந்திகள் ஐபாட் 2 விற்பனையில் சரிவை ஏற்படுத்தின.[12] 2011 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் படி மூன்றாம் காலாண்டில் 11.4 மில்லியன் ஐபாட்கள் விற்கப்பட்டன.[13]

சான்றுகள்[தொகு]

  1. "Apple's Trend Away From Tinkering - Slashdot". apple.slashdot.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-07.
  2. Jordan, Patrick (2011-10-18). "iPad Sales Numbers for Q4 2011 Announced by Apple". iPad Insight (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-03-05. பார்க்கப்பட்ட நாள் 2019-11-07.
  3. "iPad 2 Could Be Unveiled March 2". PCWorld (in ஆங்கிலம்). 2011-02-23. பார்க்கப்பட்ட நாள் 2019-11-07.
  4. "Apple Says Steve Jobs Will Take a New Medical Leave". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. "iPad Wi-Fi (Original/1st Gen) 16, 32, 64 GB Specs (A1219, MB292LL/A*, 2311, iPad1,1): EveryiPad.com". everymac.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-07.
  6. "Apple's iPad 2 Chalks Up Strong Sales in Weekend Debut". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  7. Moren, Dan; Macworld | (2011-03-22). "Apple confirms international iPad 2 launch on March 25". Macworld (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-07.
  8. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  9. Banks, Emily. "Apple Delays iPad 2 Launch in Japan". Mashable (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-07.
  10. "New iPad vs. iPad 2: Which is the Better Deal?". PCWorld (in ஆங்கிலம்). 2012-03-30. பார்க்கப்பட்ட நாள் 2019-11-07.
  11. "Apple iPad 2 sales seen clearing 1 million units". Archived from the original on 2015-09-24. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  12. "Topic: apple articles on Engadget". Engadget (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-07.
  13. Jordan, Patrick (2011-10-18). "iPad Sales Numbers for Q4 2011 Announced by Apple". iPad Insight (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-03-05. பார்க்கப்பட்ட நாள் 2019-11-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐபாட்_2&oldid=3627225" இலிருந்து மீள்விக்கப்பட்டது