உலகப் பரவல் தொற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உலகப் பரவல் தொற்று (pandemic) என்பது, கண்டம், உலகம் போன்ற பெரும் பகுதியில் உள்ள மக்களைத் தாக்கும் கொள்ளை நோய்த் தொற்றைக் குறிக்கும்.

உலக சுகாதார நிறுவனத்தின் வரைவிலக்கணப்படி, "உலகப் பரவற் தொற்று" என்பதற்குப் பின்வரும் நிலைமைகள் தேவை.

  • மக்களுக்குப் புதிதான நோய் உருவாதல்.
  • கடுமையான நோய் உண்டாக்கும் தொற்று நோய்க் காரணிகள்.
  • மனிதர்களிடையே நோய் இலகுவாகப் பரவுதல்.

பரந்த பகுதியில் இருப்பதாலோ, பெருமளவில் மக்கள் கொல்லப்படுவதாலோ மட்டும் ஒரு நோய் அல்லது ஒரு நிலைமை "உலகப் பரவல் தொற்று: ஆவதில்லை. இது ஒரு தொற்று நோயாக இருத்தலும் வேண்டும். எடுத்துக் காட்டாகப் பெருமளவில் மக்கள் இறப்பதற்குக் காரணமாகும் புற்றுநோய் "உலகப் பரவல் தொற்று" அல்ல.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்