உடன்படிக்கைப் பெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உடன்படிக்கைப் பெட்டியின் மாதிரி

உடன்படிக்கைப் பெட்டி அல்லது உடன்படிக்கைப் பேழை என்பது விடுதலைப் பயணம்[1] விபரிக்கும் ஓர் பெட்டியாகும். சாட்சிப் பெட்டி எனவும் அழைக்கப்படும் இது பத்துக் கட்டளைகள் பொறிக்கப்பட்ட கற்பலகைகளைக் கொண்டது. விடுதலைப் பயணம் (நூல்)[2], எண்ணிக்கை (நூல்)[3], எபிரேயருக்கு எழுதிய நிருபம்[4], ஆகியவற்றின் கருத்துக்களின்படி, அதனுள் ஆரோனின் கோலும், குவளையில் மன்னா மற்றும் மோசே எழுதிய முதல் தோரா சுருள் என்பன இருந்ததாக கருதப்படுகிறது. ஆயினும் 1 அரசர்களின் படி சாலமோனின் காலத்தில் உடன்படிக்கைப் பெட்டியினுள் கட்டளைகளின் இரு கற்பலகைகள் மாத்திரம் இருந்தது எனக் கூறுகின்றது.[5] விடுதலைப் பயணத்தின்படி, மோசேக்கு சீனாய் மலையில் வைத்து கடவுளால் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு ஏற்பவே உடன்படிக்கைப் பெட்டி உருவாக்கப்பட்டது.[6] உடன்படிக்கைப் பெட்டியை மூடியுள்ள தேவதூதர்களின் மத்தியிலிருந்து தன்னுடன் பேசுமாறு மேசேக்கு கடவுள் கூறியிருந்தார்.[7]

உசாத்துணை[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=உடன்படிக்கைப்_பெட்டி&oldid=1550117" இருந்து மீள்விக்கப்பட்டது