அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
அரிசிற்கரைப்புத்தூர் படிக்காசுநாதர் திருக்கோயில்
அரிசிற்கரைப்புத்தூர் படிக்காசுநாதர் திருக்கோயில் is located in தமிழ் நாடு
அரிசிற்கரைப்புத்தூர் படிக்காசுநாதர் திருக்கோயில்
அரிசிற்கரைப்புத்தூர் படிக்காசுநாதர் திருக்கோயில்
படிக்காசுநாதர் கோயில் அழகாபுத்தூர், தஞ்சாவூர், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று:10°55′48″N 79°25′47″E / 10.9301°N 79.4297°E / 10.9301; 79.4297
பெயர்
புராண பெயர்(கள்):செருவிலி புத்தூர் (பெரிய புராணத்தில்), அரிசிற்கரைப்புத்தூர், சிறுவிலிபுத்தூர்
பெயர்:அரிசிற்கரைப்புத்தூர் படிக்காசுநாதர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:அழகாபுத்தூர்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சொர்ணபுரீசுவரர்
(படிக்காசு அளித்த நாதர்)
தாயார்:அழகாம்பிகை
(சௌந்தர நாயகி)
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:அரிசிலாறு, அமிர்தபுஷ்கரிணி
ஆகமம்:சிவாகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர், சம்பந்தர், சுந்தரர்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்
அமைத்தவர்:சோழர்கள்

அழகாபுத்தூர் சொர்ணபுரீசுவரர் கோயில் (அரிசிற்கரைப்புத்தூர்) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 66ஆவது சிவத்தலமாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில்[1] கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. புகழ்த்துணை நாயனார் அவதரித்ததும் முத்தி பெற்றதும் இத்தலத்திலேயே என்பது தொன்நம்பிக்கை.

அமைப்பு[தொகு]

மூலவர் விமானம்

கும்பகோணம் நாச்சியார்கோயில் பாதையில் திருநறையூருக்கு முன் உள்ள தலம். கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது.[2] ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது திருச்சுற்றில் விநாயகர் சன்னதியும், முருகன் சன்னதியும், கஜலட்சுமி சன்னதியும் உள்ளன. விநாயகர் சன்னதிக்கு முன்பாக மூஞ்சுறும், பலி பீடமும் உள்ளன. முருகன் சன்னதிக்கு முன்பாக மயிலும், பலி பீடமும் உள்ளன. முருகன் இங்கு சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். அடுத்து கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை காணப்படுகின்றன. மூலவர் சன்னதிக்கு முன்பாக பலி பீடமும் நந்தியும் உள்ளன. இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் சன்னதியின் கோஷ்டத்தில் பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதிக்கு வலது புறம் அம்மன் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விசாலாட்சி, விநாயகர், காசி விசுவநாதர், சுப்ரமணியர், புகழ்த்துணை நாயனார், லட்சுமி, மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், பரவை நாச்சியார் ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றின் பின்புறத்தில் சொர்ண பைரவர், கால பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோர் உள்ளனர்.

இக்கோயிலில் 5 செப்டம்பர் 1982 மற்றும் 27 ஏப்ரல் 2001இல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

தலச் சிறப்பு[தொகு]

  • புகழ்த்துணை நாயனார் படிக்காசு மற்றும் முக்தி பெற்ற திருத்தலம். கோச்செங்கட்சோழன் திருப்பணி செய்த திருத்தலம்.
  • புகழ்த்துணை நாயனார் சந்நிதி உள்ளது.
  • உண்மையானந்த முனிவர் எனும் முனிவர் சந்நிதி உள்ளது.
  • திருமாலே சங்கு சக்கரம் போன்றவற்றைக் கையில் கொண்டிருப்பார். ஆனால் இக்கோயிலில் முருகனின் கையில் இருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.

அருகிலுள்ள கோயில்[தொகு]

முருகன், தந்தைக்கு குருவாக இருந்து உபதேசம் செய்த சுவாமிமலை தலம், இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Padikasu Nathar Temple : Padikasu Nathar Padikasu Nathar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-16.
  2. வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, 2014

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]