வெள்ளை ராஜா
வெள்ளை ராஜா | |
---|---|
வகை | நாடகம், திரில்லர் |
எழுத்து |
|
இயக்கம் | குகன் சென்னியப்பன் |
நடிப்பு |
|
முகப்பு இசை | விஷால் சந்திரசேகர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 10 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | டிரீம் வாரியார் பிச்சர்ஸ் |
படப்பிடிப்பு தளங்கள் | சென்னை |
தொகுப்பு | பிலோமின் ராஜ் |
படவி அமைப்பு | மாதேஸ் மணிக்கம் |
ஓட்டம் | 22 நிமிடங்கள் (approx.) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | அமேசான் பிரைம் வீடியோ |
ஒளிபரப்பான காலம் | 7 திசம்பர் 2018 |
வெள்ளை ராஜா அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 2018 இந்திய தமிழ் மொழி நாடக திரில்லர் வலைத் தொடர் ஆகும்.[1][2] நாளைய இயக்குநர் புகழ் குகன் சென்னியப்பன், இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். எஸ்.ஆர்.பிரபு என்பவர் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் முலம் இப்படத்தை தயாரித்தார்.[3]
இந்த வலைத்தொடரானது தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் அமேசான் நிறுவனத் தொடராகும். இந்நாடகம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது.[4] இந்தத் தொடர் 7 டிசம்பர் 2018 அன்று பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது மற்றும் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து திரைக்கதைக்கு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இதில் பாபி சிம்ஹா, பார்வதி நாயர், காளி வெங்கட் ஆகியோர் நடித்திருந்தனர்.[5]
நடிகர்கள்
[தொகு]- பாபி சிம்ஹா- தேவா, போதை பொருள் கடத்தில் தலைவன்
- பார்வதி நாயர் - தெரசா, காவல் அதிகாரி
- காயத்ரி - ஆதிரா
- காளி வெங்கட் - புகழேந்தி ஆசிரியர்
- யுதன் பாலாஜி - கதிர்
- ஆகாஸ் பிரேம்குமார் - மோகன்
- டி. எம். கார்த்திக்
- மனோகரன்
- பொன்முடி
- சரத் ரவி
- சந்தோஸ்
- லாலு - ஆதிராவின் கையாள்
- உதயராஜ்
கதை
[தொகு]வெள்ளை ராஜா என்பவர் போதை பொருள்களை வைத்திருப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் காவல் துறையினரால் தேடப்படுகிறார். அவர் தலை மறைவாக லாட்ஜ் ஒன்றில் தங்கியுள்ளார்.
லாட்ஜில் தங்கியிருக்கும் நபர்களைப் பற்றியும், வெள்ளை ராஜா குறித்தும் கதைகளம் அமைக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி
[தொகு]வரவேற்பு
[தொகு]தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆஷாமீரா அயப்பன் இந்தத் தொடரை 5 இல் 2.5 என மதிப்பிட்டு பாராட்டியிருந்தார்.[6]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Amazon Prime launches its first Tamil series Vella Raja". The Indian Express (in Indian English). 1 December 2018. பார்க்கப்பட்ட நாள் 9 December 2018.
- ↑ Ramachandran, Naman (2 December 2018). "Amazon Prime Launches First Tamil Series 'Vella Raja'". Variety (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 December 2018.
- ↑ "Bobby Simha as drug kingpin in Vella Raja". Deccan Chronicle (in ஆங்கிலம்). 7 December 2018. பார்க்கப்பட்ட நாள் 9 December 2018.
- ↑ "Vella Raja Is Amazon's First Tamil Series, Releasing December 7". NDTV Gadgets 360 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 December 2018.
- ↑ "Bobby Simha makes his web series debut with Vella Raja". The Indian Express (in Indian English). 7 December 2018. பார்க்கப்பட்ட நாள் 9 December 2018.
- ↑ "The Ranis of Vella Raja". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2018-12-12.