உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:ஆசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசியா வலைவாசல்
.


தொகு 

ஆசியா - அறிமுகம்

ஆசியா உலகின் மிகப்பெரியதும், அதிக மக்கள்தொகை கொண்டதுமான ஒரு கண்டம். பெரும்பாலும் கிழக்கு, வடக்கு ஆகிய அரைக்கோளப் பகுதிகளில் அமைந்துள்ள இது, யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். புவி மேற்பரப்பின் 8.7% பரப்பளவு ஆசியாக் கண்டத்தில் உள்ளது. உலக நிலப்பரப்பில் இது 30% ஆகும். 3.9 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஆசியாவில், உலகின் மக்களில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் வாழ்கின்றனர். பொதுவாக ஆசியா யுரேசியாவின் கிழக்கு ஐந்தில் நான்கு பகுதியைக் கொண்டதாகக் கொள்ளப்படுகிறது. இது சூயெசுக் கால்வாய்க்கும் ஊரல் மலைகளுக்கும் கிழக்கிலும்; காக்கேசிய மலைகள், கசுப்பியன் கடல், கருங்கடல் என்பவற்றுக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது.


தொகு 

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு

இலங்கை
இலங்கை (சிங்களம்: ශ්‍රී ලංකා, ஸ்ரீலங்கா, Sri Lanka) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சமத்துவ குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka) ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது. இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டது.இதன் புவியியல் அமைவு மற்றும் ஆழமான துறைமுகம் என்பன புராதன பட்டுப் பாதை காலந்தொட்டுஇரண்டாம் உலக யுத்தம் வரை தந்திரோபாய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது.



தொகு 

பகுப்புக்கள்

ஆசியப் பகுப்புகள்

தொகு 

சிறப்புக் கட்டுரை

தாஜ்மகால்
தாஜ் மகால் (Taj Mahal, தாஜ் மஹால்), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மகால் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



தொகு 

உங்களுக்குத் தெரியுமா?


தொகு 

சிறப்புப் படம்

தாஜ் மகால் (Taj Mahal, தாஜ் மஹால்), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது.


தொகுப்பு


தொகு 

நீங்களும் பங்களிக்கலாம்

நீங்களும் பங்களிக்கலாம்
  • ஆசியா தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|ஆசியா}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • ஆசியா தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • ஆசியா தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • ஆசியா தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • ஆசியா தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • ஆசியாவில் உள்ள நாடுகள்,அவற்றின் புவியியல் , நில அமைப்புகள் போன்ற கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு 

தொடர்புடைய வலைவாசல்கள்

ஒங்கொங்ஒங்கொங்
ஒங்கொங்
இலங்கைஇலங்கை
இலங்கை
இந்திய அரசுஇந்திய அரசு
இந்திய அரசு
தமிழ்நாடுதமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழீழம்தமிழீழம்
தமிழீழம்
இந்தியாஇந்தியா
இந்தியா
ஒங்கொங் இலங்கை இந்திய அரசு தமிழ்நாடு தமிழீழம் இந்தியா
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:ஆசியா&oldid=1611210" இலிருந்து மீள்விக்கப்பட்டது