முசல் கின்னாத்தி
முசல் கின்னாத்தி | |
---|---|
At யாலா தேசியபூங்கா , இலங்கை. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | E. recurvirostris
|
இருசொற் பெயரீடு | |
Esacus recurvirostris (Cuvier, 1829) | |
Distribution of E. recurvirostris in dark green. E. magnirostris in light green |
முசல் கின்னாத்தி (Great stone-curlew) என்பது கண்கிலேடி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெரிய பறவை ஆகும். இது வெப்பமண்டல தெற்காசியாவில் இந்தியா, பாக்கித்தான், இலங்கை, வங்காளதேசம் முதல் தென்கிழக்காசியா வரை வசிக்கும் இனப்பெருக்கம் செய்கிறது.
- ஆங்கிலப்பெயர் :Great Stone - Plover
- அறிவியல் பெயர் :Esacus recurvirostris
விளக்கம்
[தொகு]இது அளவில் வீட்டு்க் கோழியை ஒத்திருக்கும். சுமார் 51 செ.மீ. நீளம் இருக்கும். அலகு கருப்பு நிறம். அடிப்பகுதி பசுமை தோய்ந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். விழிப்படலம் வெளிர் மஞ்சள் நிறம் கால்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். உருவத்தில் இது இந்தியக் கண்கிலேடியை ஒத்த அளவில் அதைவிடச் சற்றுப் பெரியதாக இருக்கும். பெரிய உருண்டையான கண்களுக்கு மேலும் கீழுமாக இரண்டு கருப்புப் பட்டைகள் காணப்படும். இறக்கைகள் மடக்கி அமர்ந்திருக்கும்போது முதுக்பு பக்கத்தில் கருப்பு வண்ணம் தெளிவாகக் காணலாம். மற்றபடி உடலின் மேற்பகுதி சாம்பல் நிறங்கலந்த மணல் நிறமாகக் காணப்படும். இது பருத்த தலையும் தடிமனான மூட்டுக்கள் கொண்ட நீண்ட கால்களும் கொண்டது. மஞ்சளும் கருப்புமான இரு நிறம் கொண்ட அலகு சற்று மேல் நோக்கி நிமிர்ந்திருக்கும். பறக்கும்போது வாத்துப் போலத் தோற்றம் தரும். இதன் இறக்கைகளில் இரண்டு கருப்புப் பட்டைகளைக் காணலாம்.
காணப்படும் இடங்கள்
[தொகு]ஆற்றுப் படுகைகளிடையேயான கற்பாறைகள், ஆற்றைச் சார்ந்த இலையுதிர் காடுகளிடையேயான கல்லும் கரடுமான பகுதிகள், கடற்கரை சார்ந்த ஆற்றுக் கழிமுகங்கள், உப்பங்கழிகள் ஆகியவற்றில் காணலாம். கோடியக்கரை, ராமேசுவரம் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்ட குறிப்பு உண்டு.
உணவு
[தொகு]இவை வெயில் நேரத்தில் ஓய்வாகப் பாறைகளில் படுத்துக் கிடந்து காலை மாலை நேரங்களில் நண்டு, தவளை, நத்தை, பிற சிறு உயிர்கள் ஆகியவற்றைத் தேடித் தின்பதோடு மணற்பரப்பில் முட்டையிடும் சிறுபறவைகளின் முட்டைகளையும் தின்னும். இதன் பருத்த உறுதியான அலகு கற்களைப் புரட்டி அதன் அடியில் பதுங்கி இருக்கும். நண்டு போன்ற உயிர்களைத் தேடித்தின்ன ஏற்றதாக உள்ளது. க்ரீஇ...க்ரி என உரத்த குரலில் கத்தும்.[2]
இனப்பெருக்கம்
[தொகு]பிப்ரவரி முதல் ஜூன் வரையான பருவத்தில் ஆற்றுப் படுகையில் தரையில் சிறிது குழிவு உண்டாக்கி 2 முட்டைகள் இடும்.
காட்சியகம்
[தொகு]-
பறவையின் நெருக்கமாகன தோற்றம்.
-
இந்தியாவின் சம்பலில் காணப்பட்ட முசல் கின்னாத்தி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Esacus recurvirostris". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:56