பருத்த அலகு ஆலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பருத்த அலகு ஆலா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஜெலோசெலிடன்

பிர்கிம், 1830
இனம்:
ஜெ. நிலோடிகா
இருசொற் பெயரீடு
ஜெலோசெலிடன் நிலோடிகா
(ஜிமெலின், 1789)
வேறு பெயர்கள்

இசுடெர்னா நிலோடிகா

பருத்த அலகு ஆலா (Gull-billed Tern) (ஜெலோசெலிடன் நிலோடிகா-Gelochelidon nilotica) என்பது லாரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை ஆலா. இவ்வகை ஆலா இனங்கள் ஐரோப்பா, ஆசியா, இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா, வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன. இப்பறவை 'ஆப்பிரிக்க யுரேசிய வலசை போகும் நீர்ப்பறவைகள் காத்தலுக்கான ஒப்பந்தத்தின்' (AEWA) கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது.[2]

உடல் தோற்றம்[தொகு]

பருத்த அலகு ஆலா

சற்றே பெரிய வகை ஆலாவான இது உருத்தோற்றத்திலும் அளவிலும் மஞ்சள் புள்ளி அலகு ஆலாவைப் போல இருக்கும். ஆனால் இதன் தனித்தன்மையான, கடற்காகத்தைப் போன்ற சிறுத்து, பருத்த கருமை நிற அலகு, அகலமான இறக்கைகள், நீண்ட கால்கள் மற்றும் திடமான உடல் ஆகிய கூறுகள் இப்பறவையை எளிதில் இனங்காண உதவும்.

  • வாலின் பின்புறம் சாம்பல் நிறமும் நுனியில் கருப்பு நிறமும் கொண்டது. வளர்ந்த ஆலா கோடையில் சாம்பல் நிற மேற்பாகமும் வெள்ளை நிற அடிப்பாகமும் கரிய தலைக்கவசமும் கொண்டு இருக்கும்.
  • கால்கள் கருப்பு; 35 - 38 செமீ நீளம் உடையது.

களக்குறிப்புகள்[தொகு]

குளிர்காலத்தில் இதன் கரிய தலைக்கவசம் மறைந்து விடும்; பதிலாக, கண்ணிற்குப் பின் கருந்திட்டு காணப்படும். முழுவதும் வளராத மஞ்சள் புள்ளி அலகு ஆலாவை பருத்த அலகு ஆலா எனத் தவறாக இனங்கொள்வது வழக்கம்; முன்னர் கூறிய ஆலாவின் அலகை விட பருத்த அலகினைக் கொண்டதாகும். ஆலாவின் அலகு சற்றே பெரியது.

பரவலும் இனப்பெருக்கமும்[தொகு]

பருத்த அலகு ஆலாக்கள் தெற்கு ஐரோப்பா, கிழக்காசியா, வட அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைப் பகுதிகள், தென் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை, ஆஸ்திரேலியாவில் இனப்பெருக்கம் செய்கின்றன; இது தவிர, மேற்கு பாக்கித்தானிலும் (குறிப்பாக, லாஸ் பேலா உப்பங்கழியில்) இனப்பெருக்கம் செய்வது அறியப்பட்டுள்ளது.[3] குளிர்காலத்தில் வலசை போகும்போது, இவை ஆப்பிரிக்கா, கரீபியன் தீவுகள், தென் அமெரிக்காவின் வடபகுதி, தெற்காசியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பகுதிகளைச் சென்றடைகின்றன.

இந்தியாவிற்கு வலசை[தொகு]

இந்தியாவிற்கு வலசை வரும் ஜெலோசெலிடன் நிலோடிகா நிலோடிகா என்ற துணையினமானது இந்தியாவின் வட பகுதிகளான ராஜஸ்தான், பீகாரின் கங்கைச் சமவெளிப் பகுதிகளில் தொடங்கி தெற்கே கன்னியாகுமரி வரை பரவுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2019). "Gelochelidon nilotica". IUCN Red List of Threatened Species 2019: e.T62026481A153842241. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T62026481A153842241.en. https://www.iucnredlist.org/species/62026481/153842241. பார்த்த நாள்: 6 December 2021. 
  2. http://indianbirds.thedynamicnature.com/2017/02/common-gull-billed-tern-gelochelidon-nilotica.html#Migration
  3. Handbook of the Birds of India and Pakistan – Salim Ali & Dillon Ripley – Vol. 3 (p. 43 ff : 103) – OUP (1968)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பருத்த_அலகு_ஆலா&oldid=3771957" இலிருந்து மீள்விக்கப்பட்டது