பஞ்சுருட்டான் (குடும்பம்)
பஞ்சுருட்டான் | |
---|---|
ஆறு பொதுவான ஆப்பிரிக்க பஞ்சுருட்டான்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | ரபினெஸ்க், 1815
|
பேரினங்கள் | |
| |
பரவல்
|
பஞ்சுருட்டான்கள் என்பவை குருவிகளுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு பறவைகளின் குழுவாகும். இவை மெரோபிடாய் என்ற குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த குடும்பத்தில் 3 பேரினங்களும் 27 உயிரினங்களும் உள்ளன. இந்த குடும்பத்திலுள்ள பெரும்பாலான பறவைகள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படுகின்றன. சில பறவைகள் தெற்கு ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியா ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றன. இக்குடும்ப பறவைகள் பொதுவாக வண்ண சிறகுகளுடன், ஒல்லியான உடலமைப்புடன் மற்றும் பொதுவாக நடுவால் இறகு நீண்டும் காணப்படுகின்றன. அனைத்து பறவைகளும் நீண்ட கீழ் நோக்கி வளைந்த அலகுகளைக் கொண்டுள்ளன. நடுத்தர அளவு முதல் நீண்ட அளவுடைய இறக்கைகளைக் கொண்டுள்ளன. இவற்றின் இறக்கைகள் ஒல்லியாக நீண்டோ அல்லது வட்ட வடிவிலோ காணப்படலாம். ஆண் மற்றும் பெண் பறவைகள் ஆகிய இரண்டின் நிறமும் பொதுவாக ஒரே போன்று காணப்படும்.
இவற்றின் பெயர் உணர்த்துவதை போலவே இவை பெரும்பாலும் பறக்கும் பூச்சிகள் உண்ணுகின்றன. குறிப்பாக தேனீக்கள் மற்றும் குளவிகளை இவை உண்ணுகின்றன. வெட்ட வெளியான பகுதிகளில் இறுகப்பற்றி நின்றவாறு பறக்க ஆரம்பித்து பறந்து கொண்டிருக்கும் பொழுது தேனீக்கள் மற்றும் குளவிகளை இவை பிடிக்கும். பிடிக்கப்பட்ட தேனீக்கள் மற்றும் குளவிகளை தொடர்ந்து கெட்டியான பரப்பின் மீது அடிப்பதன் மூலமோ அல்லது தேய்ப்பதன் மூலமோ அவற்றின் கொடுக்குகளை இவை அகற்றுகின்றன. இவ்வாறான செய்முறையின் போது தேனீக்கள் மற்றும் குளவிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. எனவே அவற்றின் கொடுக்கில் உள்ள பெரும்பாலான விஷம் வெளியில் எடுக்கப்பட்டுவிடுகிறது.
பெரும்பாலான பஞ்சுருட்டான்கள் சமூக அமைப்பாக வாழும் தன்மையுடையவை ஆகும். பெரும்பாலும் சமதள தரையில் உள்ள மணல் பரப்பில் அல்லது ஆற்றின் பக்கவாட்டில் உள்ள செங்குத்தான மணல் கரைகளிலும் துளையிட்டு அங்கு இவை கூடுகட்டும். இவ்வாறாக நிறைய பறவைகள் சேர்ந்து காலனிகளை அமைக்கும். இவை பெரும்பாலும் காலனிகளில் வாழ்வதன் காரணமாக ஏராளமான எண்ணிக்கையிலான கூடுகளை உடைய துளைகள் ஒரே இடத்தில் காணப்படலாம். இவை வெள்ளை நிறத்தில் முட்டைகளை இடுகின்றன. ஒரு தடவை ஐந்து முட்டைகள் இடும். இக்குடும்பத்தில் உள்ள பெரும்பாலான உயிரினங்கள் ஒரு துணை மணம் புரிபவை ஆகும். இரு பெற்றோருமே இளம் உயிரினங்களை கவனித்துக் கொள்கின்றன. சில நேரங்களில் காலனியில் உள்ள உறவினர் பறவைகளின் துணையுடனும் கவனித்துக் கொள்கின்றன.
பஞ்சுருட்டான்கள் கொன்றுண்ணி பறவைகளால் கொல்லப்படலாம். இவற்றின் கூடுகள் கொறிணிகள் மற்றும் பாம்புகளால் சோதனை செய்யப்படலாம். இப்பறவைகள் பல்வேறு வகையான ஒட்டுண்ணிகளை கொண்டிருக்க முடியும். இக்குடும்பத்தில் உள்ள சில உயிரினங்கள் மனித நடவடிக்கைகள் மற்றும் வாழ்விட அழிவு ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் அழிவாய்ப்பு இனம் என வகைப்படுத்தப்படும் அளவிற்கு இவை பாதிக்கப்படவில்லை. எனவே இவை பொதுவாக தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் என்ற வகைப்படுத்தலின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றின், கவனத்தை கவரும் தோற்றம் காரணமாக பண்டைய எழுத்தாளர்களால் இவை குறிப்பிடப்பட்டுள்ளன. புராணக் கதைகளிலும் எழுதப்பட்டுள்ளன.
விளக்கம்
[தொகு]இப்பறவைகளின் இறக்கையின் பறக்க உதவும் இறகுகள் 10 முதன்மை இறகுகளையும், 13 இரண்டாம் வரிசை இறகுகளையும் கொண்டுள்ளன. வெளிப்புற இறகுகள் மிக சிறியனவாக உள்ளன. வாலில் 12 இறகுகள் உள்ளன.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ Fry, C. Hilary (2010) [1984]. The Bee-Eaters. Poyser Monograph. London: Poyser. p. 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-3686-7.
வெளி இணைப்புகள்
[தொகு]- Bee-eater videos on the Internet Bird Collection
- Meropidae, Bird families of the World பரணிடப்பட்டது 2009-02-04 at the வந்தவழி இயந்திரம்
- Meropidae on Tree of Life Web பரணிடப்பட்டது 2014-05-27 at the வந்தவழி இயந்திரம்