உள்ளடக்கத்துக்குச் செல்

நியூ ஹேவென், கனெடிகட்

ஆள்கூறுகள்: 41°18′36″N 72°55′25″W / 41.31000°N 72.92361°W / 41.31000; -72.92361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூ ஏவன், கனெக்டிகட்
நியூ ஏவன் நகரம்
மேலிருந்து, இடமிருந்து வலது : மையநகரம், கிழக்கு பாறைப் பூங்கா, நியூ ஏவன் கிரீன், அப்பர் ஸ்டேட் ஸ்ட்ரீட் இஸ்டாரிக் டிஸ்ட்ரிக்ட், ஐந்து மைல் பாய்ன்ட் கலங்கரைவிளக்கு, ஆர்க்னசு கோபுரம்,யேல் பல்கலைக்கழகத்தில் கனெக்டிகட் கூடம்
அடைபெயர்(கள்): எல்ம் நகரம்
Map
நியூ ஏவன் நகரின் நிகழ்ஊடக நிலப்படம்
ஆள்கூறுகள்: 41°18′36″N 72°55′25″W / 41.31000°N 72.92361°W / 41.31000; -72.92361
Country ஐக்கிய அமெரிக்கா
கவுன்ட்டிநியூ ஏவன்
பெருநகர பகுதிபெரும் நியூ ஏவன்
குடியமர்வு (ஊர்)ஏப்ரல் 3, 1638
நிறுவப்பட்டது (நகரம்)1784
ஒருங்கிணைப்பு1895
பெயர்ச்சூட்டுஓர் புதிய ஏவன், துறைமுகம் என்ற பொருளில்
அரசு
 • வகைமேயர்-நகரவை
 • நகரத்தந்தைஜஸ்டின் எலிக்கர் (D)
பரப்பளவு
 • மாநகரம்20.13 sq mi (52.15 km2)
 • நிலம்18.69 sq mi (48.41 km2)
 • நீர்1.44 sq mi (3.74 km2)
ஏற்றம்
59 ft (18 m)
மக்கள்தொகை
 (2010 கணக்கெடுப்பு)
 • மாநகரம்1,29,779
 • மதிப்பீடு 
(2019)[1]
1,30,250
 • அடர்த்தி6,968.97/sq mi (2,690.72/km2)
 • பெருநகர்
8,62,477
 மெட்ரோ என்பது நியூ ஏவன் கவுன்ட்டியைக் குறிக்கும்
நேர வலயம்ஒசநே−5 (கிழக்கு)
 • கோடை (பசேநே)ஒசநே−4 (கிழக்கு)
சிப் குறியீடுகள்
06501–06540
இடக் குறியீடு(கள்)203/475தொலைபேசிக் குறியீடு
FIPS code09-52000
GNIS feature ID0209231
முதன்மை நெடுஞ்சாலைகள்
இணையதளம்www.newhavenct.gov

நியூ ஏவன் (New Haven, நியூ ஹேவென்) ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தின் கடலோரத்தில் அமைந்துள்ள நகரமாகும். இது நீள் தீவு இடைக்கடலின் வடக்கு கரையோரத்திலுள்ள துறைமுக நகரம். 2020 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 134,023.[2] கனெக்டிகட் மாநிலத்தில் பிரிட்ஜ்போர்ட், இசுடாம்போர்டு நகரங்களை அடுத்து மூன்றாவது பெரிய நகரமாக விளங்குகின்றது.

நியூ ஏவன் அமெரிக்காவில் திட்டமிடப்பட்டு உருவான முதல் நகரமாகும்.[3][4][5] 1638இல் ஆங்கில சீர்திருத்தவாதிகள் நிறுவி ஓராண்டிற்குப் பின்னர் எட்டு சாலைகள் நான்குக்கு நான்கு வலைவடிவமாக திட்டமிடப்பட்டன; இது தற்போது "ஒன்பது சதுரத் திட்டம்" என அறியப்படுகின்றது.[6] நடுவில் அமைந்த பொதுச் சதுரத்தில் நியூ ஏவன் கிரீன் என்ற பூங்கா உள்ளது; இது நியூ ஏவனின் மையநகரப்பகுதியில் 16-ஏக்கர் (6 ha) பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் பூங்கா தற்போது தேசிய வரலாற்று அடையாளமாகவும், "ஒன்பது சதுரத் திட்டம்" தேசிய திட்டமிடல் அடையாளமாகவும் ஏற்கப்பட்டுள்ளன.[7][8]

நியூ ஏவன்யேல் பல்கலைக்கழகத்தின் இருப்பிடம். நகரத்தின் பெருமளவில் வரி கட்டுபவராகவும் முதன்மை வேலை வாய்ப்பு நல்குபவராகவும் [9] விளங்கும் யேல்பல்கலைக்கழகம்,நியூ ஏவன் நகரத்தின் பொருளாதாரத்தின் ஆணிவேராக உள்ளது.

இந்த நகரம் 1701 முதல் 1873 வரை கனெக்டிகட் மாநிலத்தின் இணை தலைநகரமாக விளங்கியது; 1873க்குப் பின்னரே மாநிலத்தின் மையத்தில் அமைந்திருந்த ஹார்ட்பர்டிற்கு தலைநகரம் மாறியது. இங்குள்ள கலைக்கூடங்கள், அருங்காட்சியகங்கள், இசையரங்கங்கள் காரணமாக நியூ ஏவன் கனெக்டிகட்டின் பண்பாட்டுத் தலைநகரம் என அறியப்படுகின்றது.[10] அமெரிக்காவின் முதல் மரம் நடுவிழா இங்குதான் நடைபெற்றது; எல்ம் என்ற வகை மரங்கள் அதிகமாக நடப்பட்டு இந்த நகரத்திற்கு "எல்ம் நகரம்" என்ற சிறப்புப் பெயரை பெற்றுத் தந்தது.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "2019 U.S. Gazetteer Files". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் July 2, 2020.
  2. {{https://www.census.gov/quickfacts/fact/table/newhavencityconnecticut/POP010220#POP010220
  3. Mason, Betsy. "Strange, Beautiful, and Unexpected: Planned Cities Seen From Space" (in en-US). WIRED. https://www.wired.com/2012/11/planned-cities-from-space/. 
  4. Garvan, Anthony (1951). Architecture and Town Planning in Coastal Connecticut. New Haven, CT: Yale University Press. p. 41.
  5. Boyle, Molly (2014). "The Failure of America's First City Plan: Why New Haven, the Colonies'First Planned City, Would Have Been Better Left Unplanned". Urban Lawyer 46: 507. 
  6. "New Haven: The Elm City". Towngreens.com. பார்க்கப்பட்ட நாள் 2011-09-28.
  7. "National Planning Landmark Award". planning.org. Archived from the original on 2017-03-05. பார்க்கப்பட்ட நாள் 2017-03-04.
  8. "New Haven, CT – News Details". Newhavenct.gov. 2017-07-24. Archived from the original on 2018-08-10. பார்க்கப்பட்ட நாள் 2019-05-16.
  9. "Yale University > Office of New Haven and State Affairs > About Yale and New Haven". Yale.edu. 2003-04-15. Archived from the original on September 7, 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-28.
  10. "In New Haven, Art Almost Everywhere You Look" (in en-US). The New York Times. 2007-04-06. https://www.nytimes.com/2007/04/06/travel/escapes/06trip.html. 
  11. "They're Putting The "Elm" Back In "Elm City"". Newhavenindependent.org. பார்க்கப்பட்ட நாள் 2011-09-28.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூ_ஹேவென்,_கனெடிகட்&oldid=3582771" இலிருந்து மீள்விக்கப்பட்டது