நீள் தீவு இடைக்கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனெக்டிகட்டிற்கும் (வட எல்லை) நீள் தீவிற்கும் (தெற்கு எல்லை) இடையே அமைந்துள்ள நீள் தீவு இடைக்கடல் இளஞ்சிவப்பில் குறிக்கப்பட்டுள்ளது.

நீள் தீவு இடைக்கடல் (Long Island Sound) அத்திலாந்திக்குப் பெருங்கடலின் ஓர் கயவாய். இதன் வட எல்லையாக அமெரிக்க மாநிலம் கனெடிகட்டும் தென் எல்லையாக நியூ யோர்க் மாநிலத்தின் நீள் தீவும் உள்ளன. மேற்கு தெற்காக இந்த இடைக்கடல் நியூ யோர்க் நகரின் கிழக்கு ஆற்றில் தொடங்கி நீள் தீவின் வடக்கு கடற்கரையோரமாக பிளாக் தீவு இடைக்கடல் வரை 110 mi (180 km) நீளத்திற்கு அமைந்துள்ளது. துணையாறுகளின் கலப்பினால் பெறும் நன்னீரும் கடலிலிருந்து பெறும் உவர்நீரும் கலவையாக உள்ள நீள் தீவு இடைக்கடல் மிக அதிகமாக 21 mi (34 km) அகலமும் 65 முதல் 230 அடிகள் (20 முதல் 70 m) ஆழமும் கொண்டுள்ளது.

இரவில் நீள் தீவு இடைக்கடல், விண்வெளியிலிருந்து[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Long Island Sound Region at Night: Image of the Day". National Aeronautics and Space Administration. 2013-09-30.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீள்_தீவு_இடைக்கடல்&oldid=3261689" இலிருந்து மீள்விக்கப்பட்டது