உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவடிவ நகர அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளோரிடாவில், வின்டெர்மியர் என்னும் நகரின் எளிமையான வலையமைப்பைக் காட்டும் நிலப்படம்.

வலைவடிவ நகர அமைப்பு (grid plan) அல்லது வலைவடிவச் சாலை அமைப்பு என்பது ஒரு வகையான நகரத் தளவமைப்பைக் குறிக்கும். இதில் ஒன்றுக்கொன்று இணையான ஒரு தொகுதி சாலைகளும், அவற்றுக்குச் செங்குத்தான இன்னொரு தொகுதிச் சாலைகளும் ஒன்றையொன்று வெட்டுவதனால் வலை போன்ற தளவமைப்பு உருவாகிறது. பண்டைக் கிரேக்கத்தில் இவ்வாறான நகர அமைப்பு இப்போடேமிய அமைப்பு எனப்பட்டது.

பண்டைக்கால வலைவடிவ நகர அமைப்பு

[தொகு]

வலைவடிவ நகர அமைப்பு, மிகவும் பழைய காலத்திலேயே பல்வேறு பண்பாடுகளில் தோற்றம் பெற்றது. சில மிகப் பழமையான நகரங்கள் இவ்வகையான அமைப்புக் கொண்டவை. கிமு 2600 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் செழித்திருந்த சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த நகரங்களான அரப்பா, மொகெஞ்சதாரோ போன்ற நகரங்கள், வடக்குத் தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் அமைந்து ஒன்றையொன்று வெட்டிச் செல்லும் வலைவடிவச் சாலையமைப்பைக் கொண்டிருந்தன. கிமு முதலாவது ஆயிரவாண்டில் இருந்து கிபி 11 ஆம் நூற்றாண்டுவரை இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளில் நிலைத்திருந்த தக்சிலா அல்லது காந்தார நாகரிகத்தைச் சேர்ந்த நகரங்களும் வலைவடிவ அமைப்பைக் கொண்டிருந்தன.

கிமு 2570 - 2500 காலப் பகுதியைச் சேர்ந்த எகிப்தின் கிசா என்னும் ஊரிலும், சுற்றுமுறையில் வரும் தொழிலாளர்கள் தங்குவதற்கான குடியிருப்புப் பகுதிகளும் இவ்வாறான அமைப்பைக் கொண்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவடிவ_நகர_அமைப்பு&oldid=2745292" இலிருந்து மீள்விக்கப்பட்டது